Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Ennavo Maatram Enakkul

Ennavo Maatram Enakkul 16 1

16   கண்கள் கலங்க தயங்கி சபரியினருகே வந்தவள், “சா..ரி மச்சான். என்னாலதான் உங்களுக்கு… என்னை மன்னிச்சிருங்க” என்றாள். “நீ ஏன் சூர்யாமா மன்னிப்பு கேட்கிற?” பூவரசி கேட்க… “நான்தா…” “இவள் வீட்டுக்கு வந்த இடத்துல இப்பா ஆகிருச்சில்ல அத்தை. அந்த டென்ஷன்ல மன்னிப்பு கேட்கிறா” என்றவன் சூர்யாவிடம் ‘எதுவும் சொல்லாதே’ என்று கண்காண்பிக்க… அழுகைதான் வந்தது அவளுக்கு. அவளின் அழுகையைக் காண சகிக்காது ஆறுதலாக எழுந்த கையோ கீழே இறங்க, “அழாத உதயா. சின்ன காயம்தான் […]


Ennavo Maatram Enakkul 15 1

15   பிறந்து விவரம் தெரிந்த இத்தனை ஆண்டுகளில் தாயை அணைத்ததில்லை. மடியில் படுத்ததாக ஞாபகமில்லை. தாய் தன்னைக் கொஞ்சியதாக நினைவடுக்கில் தேடிப்பார்த்தும் சுத்தமாக எதுவும் தோன்றவில்லை. ஆனாலும், தாய்மேல் கண்மண் தெரியாத பாசம். பார்க்காதது வரை தெரியாத ஒன்று தாயை நேரில் கண்டதும் தன்னை மீறி கட்டியணைத்துக் கொண்டாள். தாயினருகில் நின்றிருந்த அப்பா உறவு கண்களுக்குத் தெரியவில்லை. மகளின் முதுகைத் தடவிக்கொடுத்து, “சூர்யாமா அழக்கூடாது” என்று தான் அழுது கொண்டிருந்தார் பூவரசி. ‘இருக்கிறாளா? இல்லையா? கிடைப்பாளா? […]


Ennavo Maatram Enakkul 15 2

‘அதுவுமில்லாமல் பிள்ளைகளைப் பெற்றதே காலம் முழுவதும் தன்னை உழைத்துக் காப்பாற்ற என்ற எண்ணமுண்டு தர்மராஜனுக்கு. உண்ண உறங்க என்றிருந்திருந்தால் கூட, பிள்ளைகள் போகிறதென்று விட்டு விடுவார்கள். தர்மராஜனோ கையில் பத்து ரூபாய் பணம் தரவில்லையென்றாலே, மனைவி பிள்ளைகளைத் தரக்குறைவாகப் பேசி மற்றவர்களிடம் நியாயம் கேட்பவர். உலகிலேயெ கவலையற்ற மனிதன் யாரென்று கேட்டால் யோசிக்காது சொல்லிவிடலாம் அது தர்மராஜனென்று!’ “ஹலோ மாமா சார்! பார்த்துப் பேசுங்க. இதுவரை உங்க குடும்பத்துப் பிரச்சனைன்னு கோபம் வந்தாலும் அடக்கிட்டு அமைதியா விலகியிருக்கேன். […]


Ennavo Maatram Enakkul 14 2

“அப்படிலாம் நினைக்கலை மேம். நீங்க விண்டோ ஷாப் கூட பண்ணலாம்” என்று நகர்ந்தாள். “உலகம்ன்றது நெல்லிக்காய் சைஸ் என்பது உண்மைதான்ல வெள்ளச்சி. உன்னை எங்கெங்கோ தேடினா நீ இங்க என் இடத்துக்குப் பக்கத்துலயே இருந்திருக்க. ஃபேஷன் வேர்ல்ட்! எத்தனை முறை அங்க வந்திருப்பேன். எப்படி மிஸ் பண்ணினேன் உன்னை?” சபரி வரவைக் கண்டதுமே ஸ்ரீகர் அவளை மறைத்து வைத்ததை அறிவானா! அவள் போகும் இடமெல்லாம் சிசிடிவி வழியே பார்த்து ரசித்துக் கொண்டே, போன் எடுத்து இசக்கிக்கு அழைத்து […]


Ennavo Maatram Enakkul 14 1

14   “சூர்யோதயா சபரிநாதன்! சூர்யப் பெண்ணா நீங்க? அதான் சுட்டெரிக்கிறீங்க போல?” ப்ரித்விராஜ் தன் பின்னால் இருக்கும் பெயருக்கு அர்த்தம் தேடாததில் மனதில் நிம்மதியெழுந்த போதிலும், ‘என்னவாகிற்று எனக்கு? ஏன் அப்படிச் சொன்னேன்?’ என்று தன்னையே கடிந்து கொண்டாள். ஏதோ தப்பு செய்த உணர்வு அவளுள். “என்னாச்சி சூர்யோதயா திடீர்னு டல்லாகிட்டீங்க? எதாவது பிரச்சனையா?” “இ..இல்ல. ஏதோ நினைப்பு. என்ன ஒர்க் பண்றீங்க?” “என்னை நெருங்கி வர்றவங்க பல்லைத்தட்டி கையில குடுக்கிறேன்.” “ரௌடியா நீங்க?” “ரௌடியா! […]


Ennavo Maatram Enakkul 13 2

“ஏன்டா ஆதாரம் கேட்டா சேதாரத்தைப் பற்றிப் பேசுற?” “இப்ப என்ன பொண்ணுதானப்பா வேணும்?” “அஹான்பா!” “அம்மாஆஆஆ… இங்க வாங்க” என்று சத்தமாகக் கத்தி அழைக்க… ராஜாங்கம் பதறிப்போய், “ஏன்டா கத்துற?” என்று மகனின் வாயை மூடுமுன்… “இதோ வந்துட்டேயிருக்கேன்” என்று கிச்சன் சிங்கில் கைகழுவி முந்தானையில் துடைத்தபடி வந்து, “எதுக்குடா கூப்பிட்ட? சீக்கிரம் சொல்லு. நிறைய வேலையிருக்கு” என்று நிற்க நேரமில்லாமல் அவசரப்படுத்தினார். “நாம எப்ப பொண்ணு பார்க்கப் போகலாம்” என்று தகப்பனிடம் கண்சிமிட்ட… அவரோ புரியா […]


Ennavo Maatram Enakkul 13 1

  13   கேரள மாநிலம் பசுமையுடன் கூடிய மனதிற்கு இதமான நெருக்கமான உணர்வு ஏற்படக்கூடிய இடத்திற்கு சூர்யோதயா வந்து இரண்டு மாதங்களாகிறது. ஓரளவு அங்குள்ள மொழி பழக்கவழக்கங்கள் பிடிபட்டிருந்தது. கேரள பிரபலங்கள் அதிகமுள்ள இடத்தினருகே இருந்தது அவள் வேலை செய்யும் ஃபேஷன் வேர்ல்ட்! திருமணத்தின் போது போட்டிருந்த டிசைனிங் தங்கக் கம்மலும், சடங்கின்போது இசக்கி போட்ட செயினும், வலது கையில் கருப்பு நிறக் கயிறும், இடது கையில் சபரி கிஃப்ட் செய்திருந்த விலை அதிகமுள்ள வாட்ச். […]


Ennavo Maatram Enakkul 12 2

      ‘உண்மைதான். சூர்யோதயா அமைதியானவள்! மென்மையானவள்! இதுவரை அதிர்ந்து பேசியிராதவள்! தன் குடும்பத்திலேயே உரிமையாய் சண்டை போட்டிராதவள்! கிடைத்ததை வைத்து சந்தோஷப்படுபவள்! கிடைக்காத ஒன்றை நினைத்ததில்லை! ஆசை என்ற ஒன்று இருக்கிறதா என்பதை அறியாதவள்! முக்கியமாக கோபம் கொள்ளத் தெரியாதவள்!’ சிறு வயதிலிருந்து பெத்தவன் செய்யும் செயல்களைக் கண்டு பிடிக்காமலும், நேரில் கேட்க முடியாமலும் திணறியது அதிகம். சில ஆண்களின் தொடுகையைத் தட்டிவிட்டு ஓட முடியா கோழைத்தனம். விக்னேஷின் தன் கேரக்டர் மீதான பழிச்சொல் […]


Ennavo Maatram Enakkul 12 1

12   காலை நான்கு மணிபோல் சபரிக்கு முழிப்பு வர, சோம்பல் சற்று அதிகம் இருந்த போதும் காய்ச்சல் மட்டுப்பட்டிருந்தது. இரவு நடந்தது நினைவு வர ‘தான் எப்படி கட்டிலில்?’ என்று விழித்தவன் முழுதாய் லாக் செய்யாமலிருந்த கதவைப் பார்த்துத் திரும்ப, “வெள்..ள..ச்சி” என வாய் முணுமுணுத்தது. சாய்ந்த வாக்கில் தலைசரித்து கால் நீட்டி அமர்ந்தபடியே தூங்கியிருந்தவளை என்ன செய்வதென்று தெரியவில்லை. இரவு அவ்வளவு காய்ச்சலிலும் லாட்ஜின் சுற்றுப்புறம் அறிந்திருந்தான். சற்று மட்டமான லாட்ஜ் என்பது ஒரு […]


Ennavo Maatram Enakkul 11 1

11   தன் முன்னே வந்த ஒருவன் பல்லிளித்தபடி நிற்க, சடனாக நடையை நிறுத்திய சூர்யோதயா, “க்யா பையா?” என்றாள் கடுப்புடன். அவளின் முறைப்பில், “குச் நஹி” என முனகி அவன் விலக செல்போன் பேச்சைத் தொடர்ந்தபடி நடக்கையில், ஏதோ ஒரு உணர்வு உந்தத் திரும்பிப் பார்க்க யாருமில்லை. திரும்பத்திரும்ப அவ்வுணர்வு வர, ஒரு கட்டத்திற்கு மேல் தோளைக் குலுக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். முன்னரெல்லாம் அவளை யார் எப்படிப் பார்க்கிறார்கள் என்று தெரியாது. பட்ட அனுபவம் […]