Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Galattaa Kaathal

PRIYA MOHAN’S கலாட்டா காதல் 21.1

கலாட்டா 21.1   ஒரு மத்தியத்தர உணவு விடுதியில் உணவுக்கு ஆர்டர் சொல்லிவிட்டு காத்திருந்தான் கோகுல். என்ன முயன்றும் அன்று காலை நடந்த நிகழ்வுகளை அவனால் துளியும் ஜீரணிக்க இயலவில்லை.  தான் ஒரு காட்சிபொம்மையாய் அங்கு நின்றதை நினைக்க நினைக்க மனம் ஆறாது நடந்து முடிந்ததையே அசைப்போட்டுக்கொண்டிருந்தான்.   தன்யாவின் விரல் பிடித்து திருமண அச்சாரத்தை அணிவிக்க போன ஆதி, திடீரென்ற அடியில் நிலைத்தடுமாறி கீழே சரிய, என்ன நடந்தது? என அவன் சுதாரிப்பதற்குள் அடுத்து அவன் […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 20.2

இரு தினங்கள் முன்பு நடந்த இந்த கூத்தை நினைத்துப்பார்த்த லட்சுமிக்கு தெய்வானை மட்டும் இல்லை என்றால் என்ன செய்திருப்போம் நாம்? என வியப்பாய் இருந்தது.   எப்படி எல்லாம் அழகாய் நொடியில் திட்டம் போட்டு காரியத்தை நடத்தியும் காட்டிவிட்டார் என எண்ணி எண்ணி வியப்பில் மாய்ந்து போனார் லட்சுமி.   “என்ன லட்சுமி, சிலையா நிக்குற?” என அவரை உலுக்கிய தெய்வா, “இந்த புடவைக்கு, நான் போட்டுருக்க ரூபி செட் ஜுவல் மேட்சா இருக்கான்னு சொல்லு” என்றார் […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 20.1

கலாட்டா 20   இரண்டு நாளும் இரண்டு மணித்துளிகள் போல அதிவேகமாய் கடந்து போயின. ராஜகோபால் அவரது தொழில்முறை சுற்றத்தாருக்கு ‘பிசினஸ் கிளப்’பில் ‘பொது அழைப்பு’ கொடுத்துவிட, அதுத்தாண்டிய பலருக்கு முடிந்த வரை நேரிலும், முடியாத பட்சத்தில் அலைபேசியிலும் அழைப்பு விடுத்திருந்தார்.   விழா காரியங்களை முன்னே நின்று கண்ணும் கருத்துமாய் கவனித்துக்கொண்டிருந்தார் ஜெயதேவ். ராஜகோபாலுக்கு எந்த வேலையும் வைக்காமல், அவரே எல்லாம் செய்ய, இருந்த இரு நாட்களை ‘அழைப்பு விடுக்க’ நிம்மதியாய் பயன்படுத்தினார் ராஜகோபால்.   […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 19

கலாட்டா 19   ஜெயதேவ் கட்டிய கைகளுடன் விறைப்பாய் நின்று முறைத்துக்கொண்டிருந்தார். மதுதேவா ஒரு மணி நேரம் முன்பு காய்ச்சிய பாலை, ஒரு பெரிய டம்ளரில் நிறைத்து, அதை வேறொரு டம்ளர் கொண்டு ஆத்திக்கொண்டே ஹாலுக்கு வர, கழுத்தில் இருந்த தனது ‘டை’யை விசிறியாக்கி, அதை தன் கழுத்தில் இருந்து கழட்டாமலே, மாங்கு மாங்கென தனது அன்னைக்கு விசிறிக்கொண்டிருந்தான் ஆதித்யா.   தெய்வானை மூடிய கண்களை திறக்கவேயில்லை. கண்களை கொஞ்சம் திறந்தால் கூட, “சொல்லு, எதுக்கு சென்னைக்கு […]


கலாட்டா காதல் 18.2 (PART 2)

மாலை அலுவலகம் முடிந்து ராஜகோபால் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.   பார்க்கிங் ஏரியா சுவர் மறைவில் நின்றிருந்த கோகுல், அவர் கார் அங்கிருந்து மறைந்ததும், காதில் மாட்டியிருந்த ‘நீலப்பல்’ (bluetooth) வழியே, “டார்கெட் கிளம்பிடுச்சு! அலார்ட்” என செய்தி சொன்னான்.   அவனை போலவே ‘நீலப்பல்’ அணிந்துக்கொண்டு தெய்வாவும் ஆதியும் பன்முனை இணைப்பில் தயாராய் இருந்தனர். இம்முறை இந்த திட்டம் துளியும் சொதப்பக்கூடாது என்பதில் அதிக தெளிவுடன் இருந்தனர் மூவரும்.   கோகுல் ராஜகோபாலை ஹெல்மெட் அணிந்துக்கொண்டு […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 18.2

கலாட்டா 18.2   நண்பனை ‘அம்போ’வென போலீசிடம் விட்டுவிட்டு தன் திட்டத்தை செயல்ப்படுத்த பார்க்கிற்க்குள் ஓடினான் ஆதி. முகத்தில் பாதியை அவனது நீண்ட கர்சீப் மறைத்திருந்தது.   அகண்ட மரத்தின் பின்னே மறைவாய் நின்று இரு டேடீ’களையும் நோட்டமிடத்தொடங்கினான் ஆதித்யா.   திட்டப்படி, ஜெயதேவை ஆதி தாக்கும்போது அது ராஜகோபால் கண்ணில் விழுந்து அவர் ஜெயதேவை காப்பாற்ற வரும்போது சில அடிகள் வாங்குவது போல வாங்கிவிட்டு, அங்கிருந்து ஓடிவிடுவது. தன் திட்டத்தை தானே ஒருமுறை மனதிற்குள் ஓட்டிப்பார்த்துக்கொண்டான். […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 18.1

கலாட்டா  18.1  “ஐடியா சொல்றேன்னு சொல்லி அரை மணி நேரமாச்சு… இன்னமும் குறுக்க நெடுக்க நடந்துக்கிட்டு மட்டும் தான் இருக்க!” பால்கனிக்கும் ஹாலுக்கும் நடையோ நடை என நடந்துக்கொண்டிருந்த ஆதியிடம் பெரும்சோகத்துடன் சொன்னான் கோகுல்.   “அடேய் மம்பட்டி மண்டையா! எந்த ஒரு விஷயத்தையும் ப்ளான் பண்ணி பண்ணனும்ன்னு கேள்விப்பட்டதில்லையா நீ? தெளிவா போகணும்டா!” என்ற ஆதியிடம்,   “இங்கபாரு! நீ சொன்ன பிளாஷ்பேக்கை தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கம்பெனி ‘பாஸ்’ன்னு ராஜகோபால் சார் மேலயும், […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 17.2

கலாட்டா 17.2   ***இரு நண்பர்களும் அந்த மசால் வடையை ஆளுக்கு பாதியாய் பங்கிட்டு உண்டுக்கொண்டு பல கதைகளை சுவாரஸ்யமாய் பேசிக்கொண்டிருக்க, அப்போது, ராஜகோபால் தான் நில விஷயமாய் பேச்சை தொடங்கினார்.    “நெல்லும் கோதுமையும் விளைஞ்சு நிக்குது ஜெயா! அறுவடை முடிஞ்சதும், அடுத்து என்ன போடலாம்ன்னு நீ நெனைக்குற?”   ஜெயதேவ், “விவசாயத்துல எனக்கு என்னடா பெருசா தெரியும்? எல்லாம் நீ சொல்றது தானே எப்பவும்!”   “உனக்கு விவசாயம் பார்க்குறதுல பெரிய ஆர்வம் இல்லன்னு […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 17.1

கலாட்டா 17.1   கோகுல் அரக்கப்பறக்க தனது அப்பார்ட்மென்ட் தளத்தின் படிகளை மூன்று மூன்றாக மூச்சு வாங்க தாவிக்கொண்டிருந்தான்.   ‘நான் அவசரமா வரும்போது தான், லிப்ட் சதி பண்ணும்’ புலம்பிக்கொண்டே அவன் தளத்தை அடைந்து, வீட்டின் கதவை திறக்க,    ‘வாழ்க்கை நாடகமா? என் பொறப்பு பொய்க்கணக்கா? தினந்தோறும் வெறும் கனவா? என் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதே!’   மொபைலில் பாட்டு ஓட, தன் கையை தலைக்கு கொடுத்து, ஒருக்களித்து, விட்டத்தை பார்த்து […]


PRIYA MOHAN’S கலாட்டா காதல் 16.2

கலாட்டா 16.2   மறுநாள் காலை நீதிமன்றதுக்கு கிளம்பிய ராஜகோபால், டிரைவரை மறுத்துவிட்டு தானே வண்டியை எடுத்துக்கொண்டு சென்றார். அலுவலகம் சென்று அவருக்கு வேண்டிய பத்திரத்தை எடுத்துக்கொண்டு செல்லலாம் என அவர் முடிவெடுக்க, சென்னை ட்ராபிக், ‘விட்டுடுவேனா உன்னை?’ என அவரை சோதித்தது.   அலுவலகத்துக்கும்  நீதிமன்றத்துக்கும்  இடைப்பட்ட ஒரு சிக்னலில் அவர் மாட்டிக்கொண்டு தவிக்க,  ராஜகோபாலின் வக்கீல் அழைத்துவிட்டார்.   “சார், ஹியரிங்க்கு நேரமாச்சு! ஜட்ஜே வந்தாச்சு! எங்க இருக்கீங்க நீங்க?” என பரபரக்க, “சிக்னல்ல […]