Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Meendum Vikramaathithyan

Vijay’s MV – II – Prologue

அமாவசை இரவு அந்தப் பாசறையைக் கவ்வியிருந்த இருளை மேலும் இருட்டாகச் செய்துகொண்டிருந்தது. அங்கு நிலவிய பயங்கர அமைதியைக் கண்டு அஞ்சியவை போல விண்மீன்களும் தலைகாட்டாமல் கருப்பு வானில் ஒளிந்துகொண்டிருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் எரிந்துகொண்டிருந்த சிறிய அகல் விளக்குகள் அந்த அடர்ந்த இருளைத் துரத்த முயன்று பரிதாபமாய்த் தோற்றுக்கொண்டிருந்தன. தனது இருண்ட கூடாரத்திற்குள் அமர்ந்து அந்த அடர்ந்த இருளை வெறித்துக்கொண்டிருந்தான் அவன். அருகில் நின்றவர்கள் அவனையே பார்த்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தனர். “நான் கேள்விப்பட்டது உண்மையா மகனே?” அந்தக் குரலைக் கேட்டவுடன் […]


Vijay’s MV – Part – I – Epilogue

பேரரசர் விக்ரமாதித்யர் அரவமின்றித் தனது கொலுமண்டபத்திற்கு வந்தார்.   ஒரு மூலையில் இருந்த ஒரேயொரு நந்தாவிளக்கின் மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் கொலுமண்டபம் சற்றே இருட்டில் ஆழ்ந்திருந்தது. எல்லாம் நிழலுருவமாகவே காட்சியளித்தன.   விக்ரமாதித்யரின் மனநிலைக்கும் அந்தச் சூழலுக்கும் பொருத்தமாக இருந்தது.   விக்ரமாதித்யர் ஓசைபடாமல் நடந்து தனது அரியாசனத்தை நெருங்கினார். அதன் படிகளில் இருந்த பதுமைகள் விறைத்து நின்றிருந்தன. எல்லாம் உறங்குகின்றன போலும்!   விக்ரமாதித்யர் அவற்றைத் தொந்திரவு செய்ய விரும்பாதவராய் மெல்ல அந்த அரியாசனத்தின் படிகளில் […]


Vijay’s MV – Chapter 11 (Final of Part-1)

விக்ரம் கண்விழித்த போது தலை மிக கனமாய் இருப்பதாய் உணர்ந்தான்.   முதலில் சில நொடிகள் அவனுக்கு எதுவும் புரியவில்லை, பின் மெள்ள தொடர்வண்டியில் சென்றதும், இருட்டில் அவசர அவசரமாக இறங்கியதும் நினைவிற்கு வந்தன.   செழியன்! செழியன்தான் எழுப்பி அழைத்துச் சென்றார்.   விக்ரம் படுக்கையில் எழுந்து அமர்ந்தான். அவன் இருந்த அறை சிறியதாய் இருந்தது. அறையின் முக்கால்வாசி அவன் இருந்த கட்டிலே நிறைத்திருந்தது. அது ஒரு சுமாரான தங்கும் விடுதியின் அறை என்பதை உணர்ந்துகொண்டான். […]


Vijay’s MV – Chapter 10

மோதிரத்தை அணிந்தவுடன் விக்ரமின் மூளைக்குள் காட்சி மின்னல்கள் வெட்டின.   விக்ரம் அந்தப் பிரவாகத்தில் தன்னை இழந்துவிடாமல் நிறுத்திக்கொள்ள முயன்றான்.   ஏதேனும் ஒரு காட்சியில் மனத்தை ஒருமுகப்படுத்தப் போராடினான்.   விக்ரமின் உடல் நடுங்குவதையும் கால்கள் தள்ளாடுவதையும் பார்த்து அருணும் செழியனும் அவனை நெருங்கிப் பிடித்துக்கொண்டனர்.   விக்ரமின் போராட்டம் தீவிரமானது. தன்னால் இதைத் தாங்க இயலாது என்று அவன் முடிவுகட்டிய நொடி சட்டென அது அடங்கியது. ஒரே ஒரு காட்சி மனத்தில் நிலைபெற்றது.   […]


Vijay’s MV – Chapter 09

செழியன் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தார்.   சத்தம் கேட்டுப் பட்டியும் அங்கு வந்து சேர்ந்தான். கலங்கியிருந்த விஷாலியையும் செழியன் கையில் இருந்த மோதிரத்தையும் பார்த்து அவன் அங்கு நடந்ததை ஊகித்துக்கொண்டான். தலையை மெள்ள ஆட்டினான்.   விஷாலி பழையபடி ஆசுவாசமாகி எழுந்து நன்றாக அமர்ந்துகொண்டாள். தேவியும் அவளுக்கு அருகிலேயே அவளது தோளை இலேசாய்ப் பிடித்தபடி அமர்ந்துகொண்டாள்.   அனைவரது கவனமும் செழியனின் மீது திரும்பின.   “உஜ்ஜைனி மாகாளி விக்ரமாதித்யரோட குல தெய்வம். இஷ்ட தெய்வமும் […]


Vijay’s MV – Chapter 08

”விஷி… விஷி… என்னாச்சு?”   அனைவரும் பரப்பரப்பானார்கள்.   “மறுபடி மயக்கமா?”   விஷாலி மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தாள்.   “மயக்கமெல்லாம் இல்ல, ஆனா, தல இலேசா சுத்திச்சு, மண்ட கனமா இருக்கு!”   நெற்றியைக் கசக்கிக்கொண்டாள். தேவியும் ஆதரவாய் அவள் தலையைப் பிடித்துவிட்டாள்.   “சரி, அமைதியா வாங்க வீட்டுக்குப் போய் மத்ததலாம் பேசிக்கலாம்!”   விக்ரம் சொன்னான்.   வண்டி வீட்டிற்குள் வந்து நின்றது. அவர்கள் இறங்கி உள்ளே சென்றனர்.   அருண் […]


Vijay’s MV – Chapter 07

செழியன் சரிந்ததையும் அவர் தோளில் கத்தி குத்தியிருந்ததையும் பார்த்தவுடன் அனைவரும் பரபரப்பானார்கள்.   விஷாலி அலறத் தொடங்குவதற்கு முன் தேவி அவளைப் பிடித்துக் கத்தவிடாமல் தடுத்தாள்.   தேவையின்றி அனைவரின் கவனமும் அவர்கள் மீது விழுவதை அவள் விரும்பவில்லை. வேலைநாள் என்பதால் அருங்காட்சியகத்தில் அதிக கூட்டமின்றிதான் இருந்தது.   ”விக்ரம் நீ செழியனக் கவனி…”   தேவி அவசரமாகக் கூறிவிட்டுச் சட்டென ஓடத் தொடங்கினாள்.   அவளது பார்வை எதிர்ப்புற வராண்டாவில் நின்றுகொண்டிருந்தவன் மீது இருந்தது. அவன் […]


Vijay’s MV – Chapter 06

செழியன் அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அங்கு ஒரு உற்சாக வெள்ளம் வந்ததைப் போல இருந்தது.   முனைவர் இராஜகோபால் அவர்களைப் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைக்க முனைய, செழியன் அவரைத் தடுத்துவிட்டுத் தானே அறிமுகம் செய்துகொண்டார்.   “நான்தான் செழியன், ஐயா சொல்லிருப்பாரு… புராண தொல்லியல் நிபுநன்! மித்திக்கல் ஆர்க்கியாலஜி… எங்க டிபார்ட்மெண்ட் கணக்குப்படி கிறுக்கன்!”   செழியன் உற்சாகமாக நகைத்தார். அவருக்குச் சுமார் நாற்பது வயதுதான் இருக்கும், ஆனால் இருபத்தைந்து வயது இளைஞனைப் போலத்தான் இருந்தார், […]


Vijay’s MV – Chapter 05

”மன்யாக்னி”        அந்தப் பெயரை உச்சரித்தவுடன் விக்ரமின் முகத்தில் ஒரு வியப்பு படர்ந்தது. அதைவிட அதிகமாய்ப் பட்டியின் முகம் வியப்பில் விரிந்தது. ”அண்ணா…?” விக்ரமின் கைகள் அனிச்சையாக அந்தக் கணையாழியை நெருங்கின, அவன் அதை முழுதாய்த் தொடவில்லை இலேசாய் விரல் உரசும் தொலைவிலேயே அவன் கண்முன் கனவு போலக் காட்சிகள் பளிச்சிட்டன…   வராகமிகிரர் விக்ரமை நிமிர்ந்து பார்த்து உதட்டைச் சுழித்தார்…   ரத்னாங்கிப் பதுமை “கிளுக்” என நகைத்தது, “கற்பனையிலேயே குடித்தனம் நடத்தத் […]


Vijay’s MV – Chapter 04

வராகமிகிரர் பட்டுவிரிப்பில் கிடந்த சோழிகளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவ்வப்போது விரல்களால் கணக்கிடுவதும் ஓலைநறுக்கில் குறிப்பெழுதுவதுமாக இருந்தார். அந்த அறையில் இருந்த அனைவரது பார்வையும் அவர் மீதே இருந்தன, விக்ரமாதித்யரைத் தவிர. விக்ரமாதித்யர் வராகமிகிரருக்குப் பின்னால் இருந்த மகாகாளியின் திருவுருவச் சிலையைப் பரிவுடன் பார்த்துக்கொண்டிருந்தார். மகாகாளியைக் கேள்வி கேட்பது போல இருந்தது அவரது முகம். “ஏதேனும் சொல்லுங்கள் மிகிரரே, வெறுமனே விரல்களை மடக்கி நீட்டிக் கொண்டிருந்தால் எப்படி?” சேனாதிபதி அமரசிம்மர் பொறுமையிழந்தார். “ஜோதிஷம் என்பது சரேலென வாளை வீசித் […]