Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Naayagano Naanariyaen

நாயகனோ நானறியேன் – நாயகன்15

    நாட்காட்டியின் தேதித் தாள்கள் கிழிபடாமல் இருந்தாலும்.. சூரியனும் சந்திரனும் தங்கள் வேலையைச் சரியாய்ச் செய்திருக்க.. ஆயிற்று.. இன்றோடு இரண்டு பகல் இரண்டு இரவு கடந்துவிட்டது.. மகிழ் அவர்களை விட்டுச் சென்று.. அதாவது மகிழ் நந்தாவைத் திருமணம் செய்து சென்று. தாத்தாவிற்கு மூச்சிரைப்பு அதிகமாகி நேற்று முழுவதும் மருத்துவமனை வாசத்தில் வைத்திருந்து இரவு தான் அழைத்து வந்திருந்தனர்.. யாரின் முகத்திலும் மருந்துக்கும் தெளிவென்பதே இல்லை.. தாத்தாவிற்கு நோயின் தாக்கத்தை விட பேத்தியின் எதிர்பாரா பிரிவு உடலையும் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்14

      இரவு உணவு யாரும் உண்ணும் மனநிலையில் இல்லை தான்.. நடந்ததை இன்னுமே ஏற்றுக் கொள்ள முடியாத சூழல் தான்.. அவளை பட்டினி போடவும் மனமில்லாமல் ரேவதி சென்று பார்க்க.. அவளோ தரையில் சுவர் ஓரமாகப் படுத்து உறங்கிப் போயிருந்தாள்..      அவளை எழுப்பும் தைரியம் இன்றி ரேவதி திரும்பி விட.. அவள் இருந்த தங்கள் அறைக்குள் வந்தனர் நந்தாவின் அப்பாரும் அப்பத்தாவும்.. “இந்தப் பய இப்படிப் பண்ணிப் போட்டினே” என சாரதா விசும்ப […]


நாயகனோ நானறியேன் – நாயகன்14

   மலைகளில் முகட்டில் சோம்பல் முறித்த சூரியன்.. கடமை தவறாத ஒரு அரசாங்க ஊழியன் போல.. தன் வேலையச் செய்ய வந்திருந்தான்.. நேற்று நடந்த கூத்தில் அனைவரும் வெவ்வேறு எண்ணங்களில் சுழன்றவாறே இருந்து.. விடிகாலையில் தான் சற்றே கண் அசந்திருக்க.. நந்தாவின் வீட்டில் யாரும் இன்னும் விழித்திருக்கவில்லை.      தான் இழுத்து வந்திருக்கும் வினையின் வீரியம் பற்றி அறியாமல்.. மனம் கொண்டவளையே மணம் கொண்டு.. அவள் குடும்பத்தையும் தன் அத்தைக்காக பழி வாங்கி விட்டோம் என்ற […]


நாயகனோ நானறியேன் – நாயகன்13

     அவன் எடுக்காதது வேறு அவளுக்குத் தவிப்பை உண்டாக்க.. மனதை அடக்கிக் கொண்டவள்.. எவ்வித எதிர்ப்புமின்றி தனம் செய்கின்ற செயல்களுக்கு தலையைக் கொடுத்தவாறே அமர்ந்திருந்தாள்.. அவள் முகத்தைப் பார்த்தாலே ஏதோ திடமான முடிவுடன் இருப்பவள் போல தெரியவயும்..      தனம் மெதுவாக “கண்ணா.. இதுவரைக்கும் நாங்க கண்டிக்கற அளவு நீ நடந்துகிட்டதே இல்லை.. அதே மாதிரி உன்னை ரொம்பவும் அடக்கி ஒடுக்கி வீட்ல வளர்க்கல.. உனக்கும் சரி.. முகிலுக்கும் சரி தேவையான அளவு சுதந்திரம் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்13

     தனக்கு இரண்டு வரம் வேண்டும் என காது ஜிமிக்கிகள் ஆட அவள் கேட்க.. எதையும் யோசிக்காமல் சரி எனத் தலையசைத்தான் நந்தா.         “நம்ம ரெண்டு பேர் கல்யாணமும் நம்ம ரெண்டு வீட்டு ஆட்கள் முன்னாடி தான் நடக்கனும் மாமா.. நேத்து நீ ஆயிரம் சொல்லியிருந்தாலும் எனக்கென்னவோ ஏதோ தப்பா நடக்கப் போறதா பயமா இருக்கு” என குரலில் லேசான பயத்துடன் கூறினாள் மகிழ்.       அவளைப் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்12

      இந்த நிலையில் மகிழின் பிறந்த நாளும் வந்தது.. அதற்கு முந்தைய நாளே ராகவன், தனம் மற்றும் முகிலனோடு தங்கள் சொந்தத்தில் ஒரு திருமணத்திற்குச் சென்றிருந்தார்.        மகிழ் தாத்தா அவ்வாவோடு இருக்க.. ஏதோ யோசனையில் அன்று மாலை கை தவறி காஃபியைக் கொட்டிவிட அவ்வா “நினைப்பெல்லாம் எங்கே தான் இருக்கு.. கண்ணு பொடனில இருக்கா.. உங்க ஆயாவும் இல்லை.. நீயே இதை சுத்தம் பண்ணு” என திட்டிவிட       […]


நாயகனோ நானறியேன் – நாயகன்12

  ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்’ என மகிழின் அவ்வா அடிக்கடி ஒரு பழமை பேசுவார்.. அதன் முழு அர்த்தமும்.. சும்மா இருந்த நந்தாவிடம் கெமிஸ்ட்ரி படிக்க கமிட் ஆன அப்புறம் தான் அவள் உணர்ந்து கொண்டாள்.        ஆம்.. இவன் அந்த மேமை விட ஏழு பங்காக இருந்தான்.. அவராவது தினமும் ஒருமணிநேரம் என வாரத்திற்கு ஐந்து மணி நேரம் வைத்து செய்தார்.. ஆனால் இவனோ அந்த ஐந்து மணி நேரப் […]


நாயகனோ நானறியேன் – நாயகன்11

      இப்படியாகவே நாட்கள் கடக்க.. ஸ்பாட்டின் ஷெட்டிலும்.. மாலை டியூசனிலும் இருவரும் நேரடியாக இல்லை என்றாலும் மறைமுகமாக ஒருவர் கேள்விக்கு ஒருவர் பதில் சொல்லத் துவங்கியிருந்தனர்.. நந்தாவிற்கு அதுவே பெரிய முன்னேற்றமாய்த் தெரிய.. இதையே தொடர்ந்தான்.       மகிழுக்கும் ஒரு வழியாய் செமஸ்டர் முடிந்துவிட.. ‘வேலை பழகலாம்ல’ என்ற அமிர்து அவ்வாவின் புலம்பலை அலட்சியம் செய்து வாய்க்கால், சோளக்கொல்லை என முத்துவுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தாள்.        […]


நாயகனோ நானறியேன் – நாயகன்11

       நந்தா தன் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து ஏதோ ஒரு ஆர்ட்டிக்களை வெகுசுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருக்க.. அவனைத் தொல்லை செய்வது போல அருகில் இருந்து சத்தம் வந்து கொண்டே இருக்க.. லேப்டாப்பில் இருந்து தலையை உயர்த்திப் பார்க்க.. அங்கே மகிழின் வீட்டு மாடியில் பத்து பதினைந்து வாண்டுகள் அவளைச் சுற்றியபடி.. உல்லாசமாக ஏதோ பேசிக்கொண்டு (கத்திக் கொண்டு) இருக்க.. சந்தக்கடை எஃபக்ட்.        ‘ஓஓ.. மேடம் டியூசன் எடுக்கறாங்க போல’ […]


நாயகனோ நானறியேன் – நாயகன்10

நந்தாவின் வீடு அதிகுதூகலமாய் இருந்தது.. காரணம் நந்தா சாரதாவிடம் இனி தான்எங்கும் செல்லமாட்டேன் எனச் சொல்லிவிட்டது தான்..       “துரும்பா இளைச்சுட்ட ராஜா.. படிக்கறேன் படிக்கறேன்னு இந்த அப்பத்தாவைப் பாக்கக் கூட அதிகமா வரலையே கண்ணு” என நந்தாவின் வாயில் லட்டுவைத் திணித்தவாறே அவனைக் கொஞ்சிக் கொண்டிருக்க        “அடியே கட்டுன புருஷன் தண்ணி கேட்டு எப்ப.. ஆனா நீ பேரனைக் கொஞ்சிகிட்டு இருக்க” நந்தாவின் தாத்தா இடைப் புக.. அவரை […]