Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Nenjil Uraintha Thedal

நெஞ்சில் உறைந்த தேடல் – 17

தேடல் – 17           உறைந்த நிலையில் உணர்வற்று போய் ஆப்பரேஷன் தியேட்டர் முன்பு அமர்ந்திருந்த ஆரவ்வை ஒருவராலும் நெருங்க முடியவில்லை. தர்ஷினியோ குற்றவுணர்வில் துடித்துக்கொண்டிருந்தார். முதல் நாள் தன்னிடம் நிலாவை அனுப்பமுடியாது என்று மறுத்த மகனிடம் அவன் பயந்தது போலவே நடந்தபின் இப்போது என்னவென கூறி சமாதானம் செய்வது? நிலாவை கவனியாது பொறுப்பற்று தான் நடந்துகொண்ட விதமே அவரை மகனை விட்டு தள்ளி நிற்கவைத்தது. ராகவ் எவ்வளவு எடுத்துக்கூறியும் மகனருகில் செல்லமறுத்துவிட்டார் தர்ஷினி. ஸ்டெபி தான் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 16

தேடல் – 16       நிலாவின் கெஞ்சலிலும் தர்ஷினியின் மனத்தாங்கல் கொடுத்த வருத்தத்திலும் மட்டுமே மனதை மாற்றி நாளை அவர்கள் வெளியில் செல்ல சம்மதித்தான். ஆனாலும் ஏனோ அவன் மனம் சமாதானம் ஆகவில்லை. ஆரவ்வை பின்தொடர்ந்து வந்த நிலாவிற்கு அவனது முகமே அவனின் கவலையை வெளிப்படுத்தியது. ஆனால் எதனால் இந்தளவிற்கு கவலைகொள்ள வேண்டும்? என குழப்பமே நிலாவிற்கு மிஞ்சியது. சற்றுமுன் ஆரவ் நடந்துகொண்ட முறையும் தன்னை அவன் அணைத்திருந்த விதமும் அவனின் விழிகளில் தென்பட்ட அச்சமும், துயரமும் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 15 (2)

“ஒவ்வொரு நொடியும் உன்னோடான என் காதல் வாழ்க்கையை நான் அனுபவித்து வாழ்ந்துட்டு இருக்கேன். வாழும் அந்த நொடிகளையும் அது தரும் சந்தோஷத்தையும் எனக்குள்ள நான் பொக்கிஷமா பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். எந்த சூழ்நிலையிலும் இப்படி அபத்தமா மறந்திடுச்சான்னு கேட்டுவைக்காதே…” நிலாவிடம் கூறிவிட்டு எழுந்தவன் பால்கனியிலிருந்து கீழே உள்ள தோட்டத்தை பார்வையிட ஆரம்பித்தான். தன் கோவத்தை அவளிடம் காட்டமுடியாமல் நிலையின்றி தவித்தவன் தன் பின்னந்தலையை அழுந்த கோதிவிட்டு மூச்சை ஆழ இழுத்துவிட்டு தன் உயிரானவளை திரும்பி பார்க்க நிலா அவனையே […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 15 (1)

தேடல் – 15              மிதமிஞ்சிய குளிர் அவ்வீடு முழுவதும் பரவியிருக்க அதன் குளுமை கொஞ்சமும் அண்டாது முகத்தில் விரவிய உஷ்ணத்தோடு கோவத்தில் நின்றிருந்தார்  தர்ஷினி. அவருக்கு சற்றும் குறையாத கோவத்தில் ஆடித்தீர்த்துக்கொண்டிருந்தான் ஆரவ். இருவரின் கோவத்தின் மத்தியில் செய்வதறியாது கைகளை பிசைந்தவண்ணம் நின்றிருந்தது நிலாவும் ராகவ்வும் தான். “இப்போ முடிவா என்னதான் சொல்றான் இவன்?…” என ராகவ்வை நோக்கி தர்ஷினி ஹிந்தியில் கீரிச்சிட, “என்னை பார்த்தா அப்படி தெரியுதா? இல்லை இப்படித்தான் தெரியுதா? இவ்வளோ நேரம் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 14

தேடல் – 14              திடீரென்று வந்து நின்ற வள்ளியம்மை குடும்பத்தினரை கண்டதும் அமுதாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரின் குழப்பமான முகத்தை பார்த்த முத்தழகி அவரை இடித்து, “அமுதா வந்தவங்களை முதல்ல வாங்கன்னு கேளு. இப்படியா மசமசன்னு நிக்கிறது?…” என கடிய உடனே சுதாரித்த அமுதா அவர்களை வரவேற்றார். உள்ளே வந்தவர்கள் வரவேற்பறையில் அமரவும் முத்தழகி வண்ணமதியை அழைத்து வந்திருப்பவர்களுக்கு குடிக்க எடுத்துவரும் படி கூறிவிட்டு ஜீவாவையும் உடன் அனுப்பிய பின்  வள்ளியம்மையை பார்த்தார். சொந்த வீட்டில் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 13

தேடல் – 13           உறங்கும் நிலாவின் முகத்தையே தீவிரமாக பார்த்துக்கொண்டிருந்த ஆரவ் சிறிது நேரத்தில் தர்ஷினியை போனில் அழைத்து எழுப்பி தனக்கு காபி வேண்டுமென்று  கூறிவிட்டு குளிக்க சென்றான். தர்ஷினியே அவனின் அறைக்கு வந்தவர் வெளியில் இருந்து அழைக்க, “என்ன மாம் நீங்க ஏன் எடுத்திட்டு வந்தீங்க? குடுத்தனுப்பிருக்க வேண்டியது தானே?…” என கடிய அவனை முறைத்தவர், “டைம் என்ன ஆகுது? இந்நேரம் வேலைக்கு வந்திருவாங்களா? காபி வேணும்னா அது எந்நேரம்னு பார்க்கவே மாட்ட. வேணும்னா […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 12

தேடல் – 12 அர்ஜூன் வீட்டை விட்டு ஸ்டெபி வெளியே வந்த தகவலறிந்த தர்ஷினி ஆண்டனியின் வீட்டிற்கு செல்ல அவரோடு ஆரவ்வும், ராகவ்வும் சென்றனர். முதலில் யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்த ஸ்டெபி தர்ஷினி நெருங்கியதும் அவரை கட்டிக்கொண்டு ஓவென சப்தமிட்டு அழ ஆரம்பித்தாள். அவளின் வருகையின் காரணத்தையே அறியமுடியாமல் தவித்திருந்த ஆண்டனி மகளின் அழுகையில் சர்வமும் கலங்கி நின்றார். ஸ்டெபி தன்னை அர்ஜூனின் வீட்டிற்கு வந்து அழைத்துசெல்லுமாறு கூறியதிலே எதையோ உணர்ந்தவர் அங்கே சென்றார். அப்போதும் […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 11 (2)

கல்பனாவின் அறையில் இருந்தபடியே அர்ஜூனை கத்தி அழைத்த கிருஷ்ணன், “இங்க பார்த்தியா அர்ஜூன் உன் ப்ரென்ட் பன்ற அநியாயத்தை. உன் அம்மா வயசானவ. அவளை இந்த பெட்டை விட்டு இங்கயும் அங்கயும் நகரவிடாம உட்கார்த்தி வச்சிருக்கான். அவசரத்தேவைக்கு கூட போகவிடாம. நீயே கேளு என்னனு…” அதில் குழம்பிய அர்ஜூன் ஆரவ்வை விடுத்து கல்பனாவிடம், “அம்மா என்ன பண்ணுனீங்க நீங்க? ஏன் ஆரவ் இப்படி செய்றான்?…” என கேட்கவும் பொங்கிவிட்டார் கல்பனா. “நல்லா இருக்குடா நியாயம். பெத்த தாயை […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 11

தேடல் – 11                 அர்ஜூன் ஸ்டெபி திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே ஆண்டனி தனது பெயரில் இருந்த சொத்துக்களையும் ஹாஸ்பிட்டல் நிர்வாக உரிமையையும் அர்ஜூன் ஸ்டெபி இருவரது பெயருக்கு மாற்றி எழுதிவிட்டார். அவன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் கேட்டுகொள்ளாதவர் பிடிவாதமாக இருந்துவிட்டார். இந்த பெருந்தன்மையான செயல் கூட அர்ஜூனின் பெற்றோரை மகிழ்விக்கவில்லை. மாறாக மகனை தங்களிடமிருந்து பிரிக்க நினைக்கின்றனர் என்றே குற்றம் பேசினர். அர்ஜூனின் வீட்டிற்கு ஸ்டெபி வாழ வந்து அன்றோடு முழுதாக ஒரு மாதம் முடிந்தது. […]


நெஞ்சில் உறைந்த தேடல் – 10

தேடல் – 10             அர்ஜூன் ஸ்டெபியின் காதல் விஷயத்தை கேட்ட ஆண்டனி முதலில் அதிர்ந்தாலும் பின் தனது மகளின் மகிழ்ச்சி தான் தனக்கு முக்கியம் என்று ஒரு தகப்பனாக மிக சரியாக யோசித்தார். தானே ஒரு மாப்பிள்ளையை பார்த்திருந்தாலும் தனது அந்தஸ்திற்கு தான் பார்த்திருப்பார் என்றாலும் ஸ்டெபியின் பிடித்தமானதாக இல்லாவிட்டால் மகளின் விருப்பத்திற்கு மாறாக எதுவும் செய்திருக்கமாட்டார் தான். தனது மனதிற்கும் நிறைவான ஒருவனை ஸ்டெபி விரும்பியது ஆண்டனிக்குமே சந்தோஷம் தான். காதலை எதிர்க்கும் சராசரி […]