Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

punnagaiyil jeevan karaiyuthadi

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 7

புன்னகை – 7 அனய் வீட்டிற்கு மலர் வாழ வந்துவிட்டிருந்தாலும் அவ்வீட்டின் அமைப்பும் அழகும் அவளின் மனதிற்கு இனிமை சேர்க்கவில்லை. எதிலும் மனம் செல்லவில்லை. எதையோ வெறித்துக்கொண்டே இருந்தாள். அவளுள்ளம் போர்க்களத்தை விட மோசமாகிக்கொண்டிருப்பதை அவளையன்றி யாரும் அறியவில்லை. அவளின் உணர்வுகளை ஓரளவிற்கு அனுமானித்துக்கொண்ட நேத்ரா அவளுக்கு பக்கபலமாக அவள் உடைந்துவிடாத அளவிற்கு உறுதுணையாக நின்றிருந்தாள். மலர் பூஜையறைக்கு சென்று திரும்பியதும் இதோ வருகிறேன் என்று மாடிக்கு சென்றுவிட்டான் அனய். வைத்தியநாதனுக்கும் காமாட்சிக்கும் தனித்து நிற்பது போன்றொரு […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 6

புன்னகை – 6                 நேத்ராவை அணைத்துக்கொண்ட வனமலருக்கு  அழுகை நின்றபாடில்லை. பொங்கி பொங்கி அழுக அவளை தேற்றியபடியே நேத்ரா எதிரில் நின்றவனை முறைத்தாள். இந்த முறைப்பெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்பதை போல அவனும் மிக தெனாவெட்டாக நின்றான். அதில் பல்லை கடித்த நேத்ரா, “ஹைய்யோ அமேஸான் முதல்ல இந்த வாட்டர் பால்ஸை நிறுத்தேன். சும்மா இதுக்கெல்லாம் அழுதுட்டு. இவன்லாம் ஒரு ஆளுன்னு இவனுக்காக அழுதுட்டு இருக்க…” “நேத்ரா பாரு, எந்த நிலைல கொண்டுவந்து இவன் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 5

புன்னகை – 5             அன்று சுவிசர்லாந்தில் வேகவேகமாய் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை முடிக்க சொல்லியவன் இன்னும் மூன்றுநாளில் எப்படியும் தன்னுடைய காட்சிகள் முடித்துவிடலாம் என கணக்கிட்டுக்கொண்டிருந்தான். இது அவன் தயாரிக்கும் படம். அதுவும் தமிழில் முதன் முதலில் தயாரித்து நடிக்கும் முதல் படம். அதனால் மிக கவனமாகவே இருந்தான். பாடல் காட்சிகளோடு இன்னும் சில காதல் காட்சிகளும் இருக்க இப்போதைக்கு தன் மனநிலைக்கு அக்காட்சிகளில் ஒன்றி நடிக்க இயலாது என நினைத்து அதற்கு மாற்று ஏற்பாடு […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 4

புன்னகை – 4 வீடே அருள் இழந்து காணப்பட்டது. சரோஜா வந்துவிட்டு போய் அரைமணிநேரமாக கோபத்தோடு அமர்ந்திருந்தாள் மலர். அவளை நெருங்கவே யோசிக்கத்தான் வேண்டியிருந்தது வைத்தியநாதனுக்கும் காமாட்சிக்கும். சற்றுமுன் நடந்த களேபரத்தில் அழத்தொடங்கியிருந்த வருணியின் குரல் கூட மலரை எட்டவில்லை.  அந்தளவிற்கு மனம் மரத்துப்போனது போல இருந்தது. வருணியை சமாதானம் செய்து வைத்தியநாதனுடன் இருத்திவிட்டு மலரை நோக்கி வந்தார் காமாட்சி. இப்படியே இவளை விட்டால் சரியாகாது என எண்ணி வந்தவர், “மலரு, இன்னும் எம்புட்டு நேரம்த்தா இப்படியே […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 3 (2)

“வெல் மலர். நீங்க ஓரளவுக்கு கெஸ் பண்ணியிருப்பீங்கன்னு நினைக்கிறேன். ஹ்ம். உங்க பாதர்-இன்-லாவுக்கு வந்திருக்கிறது மைல்ட் அட்டாக்…” அவர் சொல்ல சொல்ல உள்ளுக்குள் சற்று ஆடித்தான் போனாள் மலர். ஓரளவிற்கு எதிர்பார்த்திருந்தாலும் காதால் கேட்கையில் தாளமுடியாத அழுகை முட்டத்தான் செய்தது. “டாக்டர் இது, எப்படி? காலையில கூட நல்லா தான் இருந்தாங்க டாக்டர். திடீர்னு நெஞ்சுவலி…” பேசமுடியாமல் குரல் தடைபட்டு திணற, “ஏற்கனவே அவர் ரொம்ப மன உளைச்சல்ல இருந்திருக்கனும்.  இல்லை ஏதாவது அதிர்ச்சியான விஷயம் கேள்விப்பட்டிருக்கனும். […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 3 (1)

புன்னகை – 3          அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும் எப்படியாவது சரியாக்கிவிடவேண்டும் என்னும் தீர்மானத்தோடு இருந்தவன் அதற்கான முடிவை மனதளவில் தேட துவங்க மீண்டும் அலைபேசி அழைப்பை ஏந்தி வந்தது. அதில் தெரிந்த இலக்கங்களை கண்டதும் மீண்டும் ஒரு வார்த்தைப்போருக்கு தன்னை தயாராக்கிக்கொண்டான். “ஹலோ…” என்று ஆதி ஆரம்பித்ததும் மறுமுனை பேசிய பேச்சில் ஆயாசமாய் இருந்தது இவனுக்கு. ஆனாலும் இவனும் விடாமல் பேச பேச வார்த்தைகள் முற்ற என பேச்சுக்கள் வளர்ந்துகொண்டே தான் சென்றது. […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 2

புன்னகை – 2 தவிப்பாய் அவளுள் இறங்கிய அவனது குரல் அவளுக்கு தீயாய்  தகிக்க ஆரம்பித்தது. “ஹேய், ரோஸ்பட் லைன்ல இருக்க தானே?…” என மீண்டுமாய் அழைக்க இவனுக்கெல்லாம் பதில் சொல்லியாகவேண்டுமா என்னும் திண்ணக்கத்துடன் மேலும் மௌனம் சாதித்தாள் மலர். ஆனாலும் அவனின்  அழைப்பை வெறுத்தவளாய் அவன் மேல் பொங்கிய கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாய் மூச்சுவாங்க அவளின் இருப்பை அந்த சிறு சப்தம் அவனின் காதுகளுக்கு துல்லியமாய் கொண்டுசேர்த்தது. அதில் புன்னகை விரிந்தது அவனுக்கு. அவன் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 1

புன்னகை  – 1 சென்னை அண்ணாநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் வாகன நெரிசல் அதிகமின்றி அங்குமிங்குமாக சிலபல மனிதர்கள் நடமாட்டத்துடன் சிறிதும் பரபரப்பின்றி மாலைவேளை சோம்பலாக நகர்ந்துகொண்டிருந்தது. பார்த்தவுடன் தெரிந்துவிடும் அப்பர்-மிடில்க்ளாஸ்வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி அது என்பது. தனித்தனி வீடுகளும் அடுக்குமாடி குடியிருப்புக்களுமாய் கலந்து அதிக சலசலப்பின்றி அமைதியாக காணப்படும். மேகமூட்டம் வெளிச்சத்தை குறைத்து பிற்பகல் நேரத்தை இருள்போர்வைக்குள் இழுத்துக்கொண்டது போல கருமை படர்ந்துகிடந்தது. மழைமகள் தரைதொட தொடங்கியதும் மண்வாசம் அவ்விடத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்தது. […]