Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uncategorized

மழை 13.1

“ஹலோ சிவா என்னடா ஆச்சு..? ஏன் உதய் கல்யாணத்தை நிறுத்த சொல்லிட்டு கிளம்பிட்டான்” என்றார் மகன் அளித்த அதிர்ச்சியில் இருந்து மீளாத அம்பலவாணன். “உதய் மேரேஜ் ஸ்டாப் பண்ணிட்டானா..?” “ஆமா சிவா ஆனா என்ன காரணம்னு சொல்லாம உன்னை பார்க்க கிளம்பிட்டான்.. ஏற்கனவே உதய் அடிச்ச வீடியோ வைரல் ஆகிட்டதால நீ சொன்ன மாதிரி சிஎம் வரவேண்டாம் கல்யாணம் முடிஞ்சு நானே ஆசிர்வாதம் வாங்க கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டேன்.. ஆனா இப்போ கல்யாணமே நடக்காதுன்னா வந்திருக்கவங்களுக்கு நான் […]


கனா-4

“இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால் இன்னா அளவில் இனியவும்-இன்னாத நாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே ஆளில்லா மங்கைக் கழகு. விளக்கம் இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும் பெற்றால் அதனால் துன்பமே. அனுபவிக்க முடியாது. அது பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது. அதைப் போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே” “அறிவிருக்கா உனக்கு இப்படி வெயில்ல எதுக்கு வந்த?”, தன்னைப் பார்த்து மகிழ்வான் என்று நினைத்தவளுக்கு அவனது கோபம் ஒருவித ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தது. “உன்னைத் தான் […]


மழை – 3 ❤️

தேன்மழை – 3 ❤️ சூரியன் சுட்டெரிக்கும் அந்த காலை வேளையில் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த யுவராஜின் காதில் புதிதாக ஒரு குரல் கேட்க, யாராக இருக்கும் என சிந்தித்துக் கொண்டே எழுந்து முகம் கழுவி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் உஷாராணி, “இதான் என் பையன் தரகரே, மிலிட்டரில இருக்கான்னு சொன்னேனே, நல்லா ராஜா மாதிரி இல்ல! என் பையனுக்கு ஏத்த அழகான பொண்ணா பாருங்க தரகரே. வசதி எதுவும் முக்கியம் இல்லை. என் பையனுக்கு […]


வதனம் -35

மகிழனையும் அவனோடு வந்திருந்த பெண்ணையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தாள் வதனி. “ப்ருஹா ,என்ன யோசிக்கிற?” என்று கேட்டே விட்டான் மகிழன். கூட வந்தவளுக்கோ தன்னை மகிழனோடு இணைத்து தவறாக எண்ணி விட்டாளோ என்ற பயம் ஆட்டி வைத்தது. “இல்லங்க நிஜமாவே இரணி தாலி கட்டினாரானு யோசிக்கிறேன்.” என்றாள் முகவாயைத் தட்டியபடி “ஸ்ஸ்ஸப்பா ,அந்தப் பொண்ணு பயந்து போய் முழிக்குது . உள்ளே கூட்டிட்டுப் போ பொண்ணே” என்றதும் ப்ரகா புன்னகையுடன் அவளை அழைத்துச் சென்றாள். “முதல்ல […]


வதனம் -34

“மகிழா!” என அதிர்ந்த வதனி சற்றுத் தள்ளி அமர, மகிழனிடத்தில் சிரிப்பு மட்டுமே நிறைந்திருந்தது. “போய்யா யோவ் !”என்று முனகிவிட ,”ஓய்! ஒதை கிடைக்கும் பொண்ணே” என்று மிரட்டியவன், “இரணியனைப் பார்க்கப் போறேன். ரெண்டு நாளில் வந்திடுவேன். குட்டீஸைப் பார்த்துக்கோ” என்றபடி குழந்தைகளுக்கு முத்தம் வைத்தபடி விடைபெற்றான். “சீக்கிரம் வந்திடுங்க, முடிஞ்சா கூடவே அழைச்சிட்டு வந்திடுங்க. “என்றாள் வேகமாக. “வந்துட்டு தான் மத்த வேலைப் பார்ப்பான்.” என முணுமுணுத்தவன்,” சரி கிளம்புறேன். டேக் கேர்டா பொண்ணே… !” […]


வதனம் -33

இரணியன் பின்னால் இருந்த டேபிளை பிடித்தபடி நின்றான். இயலருவி மலையருவியாய் வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தாள். எல்லாவற்றிற்கும் பதில் பேசாமல் அமைதியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருக்க,” நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன் ?”என்றாள் எரிச்சலாக. “அப்போ இல்லையா…?”என கிண்டலாய் கேட்டவனை முறைத்தவள்,” நீங்க என் அக்காவை லவ் பண்றீங்க தானே?. அப்போ கல்யாணமும் நீங்க தானே பண்ணிக்கணும் .”என்று கேட்க “ஹான் ஹான் அஃப்கோர்ஸ்.” என்றவன்,” உன் சிஸ்டர் கிட்ட இதைப்பத்தி பேசிட்டியா?” என்று கேட்க “இனிமேல் […]


கனா-3

“நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல்மேல் எழுத்துப்போல் காணுமே – அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர். விளக்கம் நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல் எழுத்தைச் செதுக்குவது போன்றது. அது எவரும் அறியும் வண்ணம் என்றும் நிலைத்திருக்கும். அப்படியல்லாது இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்” மறுநாள் அதிகாலை எப்போதும் போல் நாலரை மணிக்கே நந்தினிக்கு விழிப்பு […]


இடைவெளி 17

மூன்றுமுறை விடாது தட்டியும் சரியான பதில் இல்லாது போக, வெறுமனே சாத்தப்பட்டிருந்த கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தவன் கண்டது என்னவோ படுக்கையின் அருகில் தரையில் கிடந்தபடி ஆடவனின் சப்தத்தில் வேகமாக எழ முயற்சித்த மனைவியைத்தான். பெண்ணவள் கீழே விழுந்து கிடந்ததைப் பார்த்ததும் கையிலிருந்த ஸ்டெத்தையும் வெள்ளை அங்கியையும் தூக்கி வீசிவிட்டு, “யுகீ என்னாச்சுடி?” என்று ஈரெட்டில் அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றித் தூக்க முனைந்தான். அதில் அவன் கரத்தை தட்டி விட்டவளும், “ஒ ஒ ஒன்னுமில்ல […]


இடைவெளி 16

இத்தணைக்கும் அப்படி ஒன்றும் பலமாகவெல்லாம் கத்தி அவன் விரலில் பாய்ந்திருக்கவில்லை. ஆனாலும் அவன் கரத்தில் ரத்தத்தைப்பார்த்த மறுநொடி தங்கள் ஊடல் அனைத்தும் மறந்தவளாய் துள்ளித்துடித்து ஓடிவந்தவள், “திவா ஏன்டா? எதுக்கு உனக்கு வேண்டாத வேலை?” என்று பரிதவித்து, தான் ஒரு மருத்துவர் என்பதையும் மறந்து அவன் விரல்களைப்பற்றி உறிஞ்ச… மனைவியின் அந்த நெருக்கத்தில் மயக்கமருந்து கொடுக்கப்பட்ட நோயாளிபோல் கிறங்கிப்போய் நின்றிருந்தான் அவள் கணவன். அவன் விரல் அவள் வாயில் இருந்ததால் வெகு அருகில் தன்னை ஒட்டி நின்றிருந்த […]


மழை – 2 ❤️

தேன்மழை – 2 ❤️ ‘ஜம்மு காஷ்மீரில் இருந்து சென்னை வரும் அந்தமான் எக்ஸ்பிரஸ், இன்னும் சில நிமிடங்களில் நடைமேடை ஐந்தை வந்தடையும்.’ என ஒலிபெருக்கியில் அறிவிப்பு வர, நீண்ட நாட்கள் கழித்து தன் மகனை காணும் ஆவலில் தண்டவாளத்தையே நோக்கிக் கொண்டிருந்தார் ஈஸ்வர். “ஏங்க… இன்னும் செத்த நேரத்துல ட்ரெயின் வந்துடும். நீங்க அதுக்குள்ள உள்ள குதிச்சுடாதீங்க.” என உஷாராணி கேலி பேச, மனைவியை முறைத்தார் ஈஸ்வர். இரயில் நடைமேடையை அடைய, தோள்பட்டையில் ஒரு பையை […]