இல்லைடா மச்சி இல்லவேயில்லை.அருமையான பதிவு
ஹீரோ சார்..... இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை
எங்க ஹீரோயின் ஹார்மி வைக்கும் பொங்கல இதற்கு மேலும் சாப்பிட்டால் உடம்பு தாங்காதுன்னு உங்களோட இன்னொரு சைட் வெளிபடுத்திட்டீங்களோ...!!!
உங்களின் மறுபக்கம் சிறப்பு...மிகச்சிறப்பு
அங்கை...???!!!!
அவங்களின் குற்றச்சாட்டு அவங்களுக்கு வாய்த்த மாமியார் சரியில்லை...
எதிர்பார்ப்பிற்கு மதிப்பளிக்காத, ஆசைகளுக்கும் விருப்பத்திற்கும் சிறிதளவும் வளைந்து கொடுக்காத கணவர் அவரைப் போலவே மகனையும் strict officerஆக வளர்த்து விட்டு சென்றுவிட்டார் என்பது...!!!???
போலிஸ்கார்.... உங்க அம்மாவிற்கு இப்படி ஒரு எண்ணம் வர யார் காரணம்...???
மனைவியிடம் உங்களின் மறுபக்கத்தை 10 மாதத்தில் வெளிப்படுத்திட்டீங்க... Nice
உங்க அம்மாவிடம்...
நீங்க வளர்ந்து படித்த காலங்கள் எல்லாம் விட்ருங்க..... வேலையில் சேர்ந்து ஒரு 6 வருடம் ஆகியிருக்குமா... ஒரு நாள் ஒரு பொழுது கூடவா கிடைக்க வில்லை உங்க மறுபக்கத்தை அவங்களிடம் காட்ட...??? உங்களைப் பற்றி உங்கள பெற்றவளுக்கும் கூட பிறந்தவளுக்கும் எதுவும் தெரியவில்லையே... !!! இது யார் தவறு இங்கு தானே பல ஆண்கள் கோட்டை விட்டுட்றீங்க
தனிக்குடித்தனம் சென்ற ஒரே நாளில் நீங்கள் காட்டும் முகமே முற்றிலும் வேறாக இருக்கே..!!! உன் வீடு இங்கு டெசிஷன் அத்தாரிட்டி உன்னுடையது என்று சொல்ற நீங்க உங்க அம்மாவுக்கு என்ன செஞ்சீங்க...???
பெற்ற பிள்ளையிடம் இருந்தால் தன் சுதந்திரம் பறிபோய் விடும்... மூச்சு முட்டும் உணர்வு தான் ஏற்படும் என்ற அவங்களின் தவறான புரிதலுக்கு யார் காரணம்.... போலிஸ்கார் உங்களோட மென்மையான மறுபக்கத்தை அவங்களிடம் வெளிப்படுத்தாது தான் காரணம்
உங்க மனைவிக்கும் உங்களுக்கும் இடையே ஒரு வேளை குழப்பமோ பிரச்சினையோ வரநேர்ந்தால் அதற்கு உங்க அம்மாதான் காரணமாக இருக்கலாம் உங்க மனைவியின் கன்னத்தை தட்டி அனுசரணையாக பேச முடிந்த உங்களுக்கு.... அம்மாவின் தோளில் கை போட்டு உனக்கு என்னமா பிரச்சினை என்று கேட்க நேரமில்லாமல் போய் விட்டது உங்களுக்கு மட்டுமே சொந்தமான உங்களை மட்டுமே சார்ந்தவங்க இல்லையா அவங்க
போலிஸ்கார்.... வரும் முன் காப்போம்
உங்க மாமியார் உடனான வீடியோ காலில் அவங்க பார்த்த காட்சியில் அவங்களுக்குள் உடைந்ததே ஒரு உணர்வு அதை வருமுன் காத்திருக்கலாம்...!!!!
மருமகள் கூட ஃபோன் செய்ய வில்லையே என்ற அவர்களின் ஏமாற்றத்தை வருமுன் காத்திருக்கலாம்....!!!!
நாளைக்கு உங்களின் வீட்டிற்கு வந்த பிறகு உங்களின் மறுபக்கத்தை மற்றவர்கள் சொல்லி கேட்கும் போது தன் பிள்ளையை தான் சரியாக கணிக்க வில்லையே என்று வருமே குற்றவுணர்வு அதை வருமுன் காத்திருக்கலாம்...!!!!
எனக்கு அங்கை அம்மாவை தவறாக எண்ண தோன்றவில்லை
ரைட்டர் ஜி.... ரொம்ப அதிகமாகவே பொங்கி விட்டேன் என்று நினைக்கிறேன்....தவறாக இருந்தால் மன்னித்து விடுங்கள்
நீங்க பெரும்பான்மையான ஆண்களின் அலட்சியப் போக்கை சுட்டி காமிச்சு நியாயத்தை சொல்லியிருக்கீங்க.
அணைல சின்ன விரிசல்னு அலட்சியமா கண்டுக்காம போற பின்விளைவுகளை சேதாரங்களை அதிகமா ஏற்படுத்தும் ப்பா.
அதெல்லாம் நம்ம சரண் ஜீ எம்பூட்டு பொங்கல் குடுத்தாலும் ஹாப்பியா வாங்கி எனசாய் பண்ணுவாங்க