Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Yaarai Vittathu Kadhal 19.2

Advertisement

AshrafHameedaT

Administrator
அத்தியாயம்----19(2)


அதுவும் இல்லாமல் இந்த குழந்தைக்கு சமூகத்தில் அங்கிகாரம் கொடுக்கிறேனோ...?இல்லையோ….?அது அடுத்த விஷயம். ஆனால் இக்குழந்தை எந்த உடல் பிரச்சனையும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்று நினைத்தாள்.

அவளுக்கு தெரியும் இந்த மாதிரி சமயத்தில் குழந்தையைய் சுமந்துக் கொண்டு இருக்கும் பெண் மனதளவில் மகிழ்ச்சியுடன் இருந்தால் தான் குழந்தை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் பிறக்கும் என்று.

அதனால் தான் தூங்குவதற்க்கு முன் இனி எது இருந்தாலும் நம் மனதை அமைதியுடன் வைத்து இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள் . அதனால் தான் வசந்தியிடன் அவளாள் மகிழ்ச்சியுடன் பேச முடிந்தது.

வசந்தி தாமரையின் மகிழ்ச்சியை பார்த்தவள் சரி இந்த சமயத்தில் ஆதித்யாவிடம் பேசினால் நல்ல முடிவு எடுப்பாள் என்று நினைத்து “ஆதித்யா அய்யா வந்து இருக்காங்க தாமரை.” என்றவுடன்.

அவன் வந்தால் நேராக அறைக்கு தானே வந்து விடுவான். இது என்ன பழக்கம் என்று நினைத்தவள் அதையே வசந்தியிடமும் சொல்ல.

வசந்தியும் “நானும் அது தான் நினைத்தேன் தாமரை .”என்று சொன்னவள்.

பின் “ரொம்ப நேரமா காத்திட்டு இருக்காங்க மேல அனுப்பட்டுமா…?” என்று அனுமதி கேட்க.

“சரி” என்று சொல்லி விட்டு ஆழ்ந்து யோசிப்பவளை பார்த்து “நல்ல முடிவா தானே எடுப்பே தாமரை.”

ஒரு விரக்த்தி புன்னகையுடன் பார்த்து விட்டு “அது எப்படி வசந்தி…? குழந்தையைய் பத்தி நீ சொன்னது அனைத்தும் சரியே….ஆனால் என்ன தான் குழந்தைக்காக என்றாலும் அவன் செய்ததை எல்லாம் மறந்து விட முடியுமா….?அதுவும் அவன் செய்தது நம்பிக்கை துரோகம் வசந்தி. என் ஆயா அவன் மீது வைத்த நம்பிக்கையை நாசமாக்கி விட்டான்.”

என்ற தாமரையின் பேச்சில் கோபம், விரக்தி ஆற்றாமை அனைத்தும் கலந்து இருக்க.

தாமரையின் கோபம் நியாமானதாக இருந்தாலும் இவள் நல்லா முடிவா எடுத்தா நல்லா இருக்கும் என்று நினைத்தவள். “சரி தாமரை நான் அய்யாவை அனுப்புறேன்…” என்று கீழே சென்ற கொஞ்சம் நேரத்துக்கு எல்லாம் ஆதித்யா வர….

அவனை வா என்று அழைக்கவும் இல்லை முன்பு மாதிரி மூஞ்சி தூக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. ஒரு வெறுமையான பார்வையைய் பார்த்து வைக்க.

ஆதித்யாவும் தாமரையைய் பார்த்துக் கொண்டே தன் பேச்சை எப்படி ஆராம்பிப்பது என்று தெரியாமல் அவள் முகத்தையே பார்த்திருந்தான். கொஞ்ச நேரம் பொருத்தவள் பின் அவளே பேச்சை ஆராம்பித்தாள்.

“என்ன புது பழக்கம் வசந்தியிடம் சொல்லி விட்டு பிறகு வருவது. எப்போதும் நேராக தானே வருவீங்க.” என்று கேட்டதுக்கு.

“இனி அப்படி தான் தாமாரை. உன் கழுத்தில் தாலி கட்டி உன்னை அந்த என் வீட்டுக்கு அழைத்து செல்லும் வரை உன் அனுமதி இல்லாமல் வரக் கூடாது என்று முடிவு செய்து இருக்கிறேன்.”

என்றவன் பின் தடுமாற்றத்துடன் “அது போல தான் இனி உன்னை தொடுவது என்பது உன் கழுத்தில் தாலி கட்டிய பிறகு தான்.” என்று சொல்லி விட்டு அவள் முகத்தை பார்த்தான்.

அதில் இகழ்ச்சியான ஒரு புன்னகை தோன்றி மறைய. அதிலேயே தன்னை ஏதோ தவறாக தான் நினைத்திருக்கிறாள் என்று தெரிந்தும் “என்ன தாமரை.” என்று கேட்டதுக்கு.

“இல்லே நீ பேசுறது சாத்தான் வேதம் ஒதுவது போல் இருக்கு.” என்று சொல்லி விட்டு ஆதித்யாவை ஒரு பார்வை பார்த்து விட்டு பின் ஏதோ நினைத்தவளாய் “நீ பேசுவதை நம்ப முடியவில்லை அது தான் தாலி கட்டிய பிறகு தான் என்னை தொடுவேன் என்று சொன்னியே அதை தான்.

நீ இப்படி சொல்லி இருந்தால் கண்டிப்பாக நம்பி இருப்பேன் அதான் இந்த சமயத்தில் சேருவது குழந்தைக்கு நல்லது இல்லை அதனால் உன்னை தொட மாட்டேன் என்று நீ சொல்லி இருந்தால் நான் நம்பி இருப்பேன்.” என்று ஒரு எகத்தாளத்துடன் சொல்ல.

ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்த ஆதித்யா “நீ நம்பினாலும் நம்பா விட்டாலும் நான் எதை நினைத்து சொன்னேன் என்று என் மனசாட்சிக்கு தெரியும்.”

“ஹாலோ மனசாட்சி பத்தி எல்லாம் நீ பேசக் கூடாது.”

“ஏன்…..?”

“ஏன்னா ஏன்னு என் கிட்டயா…. கேட்குறே….மனசாட்சி இருந்தா அப்போ நான் அவ்வளவு சொல்லியும் என்னை நீ தொட்டு இருப்பியா….சரி ஏதோ காதல் கீதல் என்று சொன்னியே அப்படி இருந்தா அட்லீஸ்ட்டு என் கழுத்தில் தாலியாவது கட்டி இருப்பே தானே…ஆனா உனக்கு என் மேல் உள்ள காதலை விட உன் பதவி மேல் இருக்கும் காதல் தான் அதிகமாக இருந்தது.” என்று ஏற்ற இறக்கத்துடன் சொன்னவளிடம்

“என்ன இப்போ என் பதவியால் தான் உன் கழுத்தில் தாலி கட்டவில்லை என்று தானே உனக்கு கோபம். இப்போ நான் என் பதவியை ராஜனாம செய்து விட்டு தான் வருகிறேன்.” என்பவனை சந்தேகமாக பார்க்க.

“நிஜம் தான் தாமரை.” என்று சொல்ல.

அந்த கண்களில் தெரிந்த உண்மையில் அடுத்து என்ன பேசுவது என்று தெரியாது அவனை பார்த்திருந்தாள். அவளுக்கே அவன் ராஜனாம செய்தது அதிர்ச்சியாக தான் இருந்தது அவன் பதவியை எந்த அளவுக்கு நேசித்தான் என்பதை விட அந்த பதவி மீது எவ்வளவு வெறியாக இருந்தான் என்பது தான் அவளுக்கு தெரியுமே…

தன்னையே அதிர்ச்சியுடன் பார்த்திருந்த தாமரையிடம் “நான் செய்தது தப்பு தான் தாமரை. அதுவும் என் பதவியைய் காப்பாற்றுவதற்க்காக உன்னை நடத்திய விதம் தவறு தான். அப்போது எனக்கு அது தவறாக தெரியவில்லை தாமரை.

நான் என் மனதில் அப்போது உன்னை தவிர வேறு யாரையும் தான் நான் திருமணம் செய்துக் கொள்ள போவது இல்லையே அப்புறம் இதில் என்ன தவறு என்று தான் நினைத்தேன்.

ஆனால் ஒரு பெண்ணாய் நீ இவ்வளவு வேதனை பட்டு இருப்பாய் என்று நானும் ஒரு குழந்தைக்கு தகப்பனாக ஆன போது தான் எனக்கே தெரிந்தது…..” என்று சொன்னவன்.

பின் சிரித்துக் கொண்டே “என் பதவி.இந்த பதவிக்கு நான் வருவதற்க்கு நான் எவ்வளவு கஷ்டம் பட்டேன் என்று உனக்கு தெரியுமா……?தாமரை.நான் அந்த கட்சி ஆபிசில் போகும் போது எனக்கு வயது பன்னிரெண்டு தான்.

அந்த ஆபிஸை பெருக்க வேண்டும் பின் குடிக்க தண்ணி எடுத்து வந்து வைக்க வேண்டும். பிறகு அங்கு வந்து போறவங்க ஏதாவது வாங்கி வர சொன்னா….வாங்கி வந்து தரவேண்டும்.

ஏதாவது வாங்கி வந்து தருவதில் சரக்கும் அடக்கம். எனக்கு படிப்புன்னா எவ்வளவு உயிர் தெரியுமா….பேனா பிடிக்க வேண்டிய கையில் சரக்கை வாங்கி கொடுப்பது பின் நானே அதை கலந்து அவர்களுக்கு கொடுப்பது.

எல்லாம் எதற்க்காக மூன்று வேளை சோறுக்காக….அப்படியே மூன்று வருடம் சென்றது. பின் அந்த தலைவர் ஒரு நாள் என்னை கூப்பிட்டு நீ என்ன ஜாதி என்று கேட்டார்.

நான் என் ஜாதியை சொன்னேன், நான் அவர் ஜாதி தான் என்று தெரிந்ததும் அவருக்கு அவ்வளவு மகிழ்ச்சி. பின் எங்கு போனாலும் என்னையே தான் கூட்டி செல்வார்.

எங்கு என்பதில் வேறு மாதிரி பெண் வீட்டுக்கும் தான். அப்போது நான் வெளியில் நின்றுக் கொண்டு உள்ளே இருந்து வரும் சத்தம் பேச்சி அனைத்தியும் கேட்டு சகித்துக் கொண்டு தான் இருந்தேன்.

அப்போது எனக்கு வயது பதினெட்டு….திரும்பவும் அவர் அது மாதிரி வீட்டுக்கு போகும் போது என்னையே தான் அழைத்து செல்வார். ஏன் ஒரு நாள் நீயும் போயே இந்த வயதில் தான் அனுபவிக்க முடியும் என்றதற்க்கு நான் வேண்டாம் என்று தான் மறுக்க தோன்றியது.

உண்மையை சொல்ல போனால் என் முப்பத்திரெண்டு வயது வரை அது மாதிரி எண்ணம் எனக்கு வந்ததே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உன்னை எப்போது முதல் முதலாக பார்த்தேனோ….அப்போது தான் எனக்கு நீ வேண்டும் உன் அருகாமை வேண்டும் என்று எண்ணம் தோன்றியது.

பின் நானே என் பதவியையும் உன் ஜாதியையும் நினைத்து என்னை கண்ரோல் செய்துக் கொண்டேன். இருந்தும் என்னால் முடியவில்லை பெண்ணே…

அதுவும் உன்னை அந்த டாக்டருடன் பார்த்தும் நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் உன்னை அடைய எந்த வழியையும் பின் பற்றலாம் என்று நான் நினைக்கும் போது தான் சத்யா இந்த யோசனையை மறைமுகமாக தந்தான்.

அவனை தப்பாக நினைக்காதே தாமரை என் மீது உள்ள அதிக பாசத்தால் தான் அவன் அந்த ஐடியாவை தந்தான். ஆனால் நான் அதை கேட்டு இருக்க கூடாது என்று எனக்கு இப்போது புரிகிறது.

நான் செய்தது மிக பெரிய தப்பு தான் தாமரை நீ தண்டனை கொடுக்கனும் என்று நினைத்தால் எனக்கு கொடு.ஆனா எந்த பாவமும் அறியாத நம் குழந்தைக்கு கொடுத்து விடதே…..

என்னை கல்யாணம் செய்து கொள் தாமரை. என்னை தண்டிப்பதாக இருந்தால் என் மனைவியாய் நம் வீட்டுக்கு வந்து தண்டனை கொடு .ஆனால் நம் திருமணம் விரைவாக நடக்க வேண்டும். நான் எதற்க்கு சொல்கிறேன் என்று தெரிகிறதா தாமரை. எந்த காலத்திலும் எந்த வித சூழ்நிலையிலும் என் குழந்தை அவமானப்படுவதை என்னால் தாங்க முடியாது தாமரை.” என்று சொன்னவன்.

பின் ஒரு முடிவோடு “இனி முடிவு உன் கையில் தான் இருக்கிறது.” என்று சொல்லி விட்டு தாமரையைய் ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து விட்டு விரைந்து சென்றான்.
 
:love::love::love:

என்னடா ஓவர் ஸ்பீடா போயிட்ட........
பதில் வேணாமா???
வசந்தி சொன்னது உனக்கும் கேட்டுடுச்சா என்ன???
எப்படியோ புத்தி தெளிஞ்சுடுச்சு உனக்கு........
மிச்சமும் தெளியவைப்பாள் தாமரை...
 
Last edited:
Top