Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 5.2 : இரவின் பனித்துளி!!!

“சரி சரி முறைக்காத. நீ இதை தூக்குமுதல்ல. நான் ரூமை பூட்டிட்டு அங்க போகணும். நிறைய வேலை இருக்கு”   “காலுல விழுந்ததுல தெரியலையா அதுல எவ்வளவு வெயிட் இருக்குனு. உனக்கு தேவைன்னா நீயே அதை தூக்கிட்டு வா. நான் ரூமைப் பூட்டுறேன்”, என்று சொன்ன காயத்ரி சாவியை கையில் எடுத்துக் கொண்டாள்.   “நேரம் தான்”, என்று முணுமுணுத்துக் கொண்டே அந்த அட்டைப் பெட்டியை தூக்கினான் தீபக்.   பின் வெளியே சென்றவன் “ஒழுங்கா பூட்டிருவல்ல […]

Readmore

அத்தியாயம் 5.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 5 கட்டவிழ்ந்த எந்தன் கண்கள் எப்போதும் உன்னையே தேடுவதின் மாயம் நானறியேன்!!!   கிளாசை விட்டு வெளியே வந்த தீபக் அங்கே நின்ற காயத்ரியை திரும்பிக் கூட பார்க்காமல் சென்றான். அவளோ அவனை முறைத்த படியே நின்றாள்.   “எப்படி போறான் பாரு சோடாபுட்டி சோடாபுட்டி, என்னைப் பாத்தா மட்டும் இவனுக்கு என்ன தான் ஆகுமோ? சாதாரணமா பேசிட்டு., இல்லைன்னா சிரிச்சிட்டு போக வேண்டியது தானே? என்னமோ நான் மட்டும் இந்த கிளாஸ்ல இல்லாத மாதிரி […]

Readmore

அத்தியாயம் 4.2 : இரவின் பனித்துளி!!!

“நீ பொழைச்சிக்குவ டா”, என்று சரவணன் சார் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவரை வெளியே இருந்து பியூன் அழைக்க அங்கே சென்று விட்டார்.   “வாய் இல்லைன்னா உன்னை நாய் கூட மதிக்காது மச்சி”, என்று மதனை அவன் அருகில் அமர்ந்திருந்த தீபக் கலாய்த்தான்.   “சும்மா இரு டா, நானே மாட்டிக்க போறேன்னு பதட்டத்துல இருக்கேன்? ரெப் ஆனா என்னோட படிப்பு என்ன ஆகுறது?”, என்று கிசுகிசுத்தான் மதன்.   “அவ்வளவு நல்லவனா டா நீ? […]

Readmore

அத்தியாயம் 4.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 4 உன்னிடம் கரை சேரவே துடிக்கிறது எந்தன் காதல் அலைகள்!!!   “அக்கா நீ என்ன சொல்ற? யாரால? உன்னை யார் என்ன செஞ்சா?”, என்று ஆர்வமாக கேட்டாள் சௌமி.   “வேற யாரு? எல்லாம் அந்த லூசு தான்”, என்றாள் காயத்ரி.   “இப்படிச் சொன்னா எனக்கு எப்படி புரியும்? நீ யாரைச் சொல்ற? தெளிவா சொல்லேன்”   “அதான் முதல் நாள் ஒருத்தன் காமெடி பண்ணினானே அவனைத் தான் சொல்றேன்”   “பைல்ஸ் […]

Readmore

அத்தியாயம் 3.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 3 எந்தன் கண்கள் பேசும் காதல் மொழியை உணர்வாயா என்னவளே?!!!   கிளாசுக்கு லேட்டாக வந்ததினால் கிளாசுக்கு செல்ல முடியாமல்  வெளியே நிற்க வைத்து விட்டார்களே என்ற கவலை சிறிதும் இல்லாமல் கதை பேசிக் கொண்டிருந்தார்கள் தீபக்கின் நண்பர்கள்.   ஒருவரை மாற்றி ஒருவர் காலை வாரி கலாய்த்துக் கொண்டிருக்க அவர்களுடைய சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்தாள் நந்தினி.   காயத்ரியோ அந்த சூழ்நிலையை ரசிக்க முடியாமல் இருந்தாள். தான் தேவையில்லாமல் தீபக்கை திட்டி விட்டு வந்ததால் […]

Readmore

அத்தியாயம் 3.2 : இரவின் பனித்துளி!!!

“இவன் என்ன ஹெச். ஓ. டி கிட்ட இப்படி பேசுறான்?”, என்று எண்ணிக் கொண்டு ஆ வென்று அவனைப் பார்த்தாள் காயத்ரி.   “ஹா, ஹா சின்ன தப்பா பெரிய தப்பான்னு நான் தான் சொல்லணும்னு நினைக்கிறேன். நீங்களா முடிவு பண்ணா எப்படி? காலைல சாப்பிட்ட ரெண்டு தோசை பத்தலை போல? ரொம்ப பசிக்குது. கொஞ்சம் சீக்கிரம் சொல்றீங்களா?”, என்றார் மரியா.   “வசந்தா மேம் உங்களை பாத்துட்டு வரச் சொன்னாங்க மேம்”   “நீங்க வந்து […]

Readmore

அத்தியாயம் 2.2 : இரவின் பனித்துளி!!!

அவளின் அந்த செய்கையைக் கண்ட மதனுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்தது. “இவ என்ன அதிர்ச்சியாகுறதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுக்குறா?”, என்று எண்ணிக் கொண்டே அவளைப் பார்த்தான்.   “டேய் என்ன டா இப்படி பண்ணிட்ட?”, என்று தீபக்கிடம் கேட்டான் நிர்மல்.   அடி வாங்கியவனோ கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு அவனை முறைத்தான். மற்ற சீனியர்களும் “எவ்வளவு தைரியம் இருந்தா சீனியர்ஸ் மேல கை வைப்ப? இன்னைக்கு நீ செத்த டா”, என்று சொல்லிக் […]

Readmore

அத்தியாயம் 2.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 2   கண் மூடி இருக்கும் போது உன் அருகாமையை உணர்ந்தேன். கண் விழித்ததும் தெரிந்தது அது உன் நினைவுகள் மட்டும் என்று!!!   காலேஜ் ஆரம்பித்து ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் கேண்ட்டீனில் தன்னுடைய தோழி நந்தினியுடன் அமர்ந்திருந்தாள் காயத்ரி. முந்தை கிளாஸ் இருவருக்கும் பெரிய தலை வலியை ஏற்படுத்தியிருந்ததால் ஒரு டீ குடிக்க தான் இங்கு வந்தார்கள்.   “இன்னைக்கு கிளாஸ் சரியான ரம்பம் மாதிரி போச்சுல?”, என்றாள் நந்தினி.   “கொஞ்சம் […]

Readmore

அத்தியாயம் 1.2 : இரவின் பனித்துளி!!!

இது வரை பள்ளியில் இருந்த கட்டுப்பாடுகள் எல்லாம் காலேஜில் இருக்காது. மொத்தமாக கட்டுபாடுகள் இல்லை என்று சொல்ல முடியாது. தளர்வுகள் அதிகம் உண்டு.   இது வரை பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கூண்டு கிளிகளாக இருந்தவர்கள் இனி சிறகடித்துப் பறக்கும் சுதந்திரத்தைக் பெற்றிருந்தார்கள்.   இது வரை வெகுளிகளாகச் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட காலேஜ் வந்ததும் வேங்கையாக மாறும் நிகழ்வுகளும் நடக்கும். அவர்களுக்கு வால் முளைத்தால் கூட ஆச்சர்யம் கிடையாது.   அவர்களின் எதிர்கால வாழ்க்கை எந்த […]

Readmore

அத்தியாயம் 1.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 1 ஒவ்வொரு இரவிலும் மீதமிருக்கும் பனித்துளியின் மொத்த உருவம் என்னவள்!!!   காதலனைக் கண்டதும் எப்படி காதலி முகம் சிவப்பாளோ அது போல உருமாறுகிறது சிவந்த வானம். பகலவன் புறப்பட தயாராகிறான்.   இதமான தென்றல் வந்து தழுவியதும் நாணம் கொண்டு மலர்கிறது புது மலர்கள். புதிதாக மலர்ந்த அத்தனை மலர்களும் காலை வேளையை சிறப்படையச் செய்கிறது. விடிவதற்கு முன்னமே பறவைகள் இறை தேடி தங்களின் கூட்டை விட்டு பறந்து செல்கின்றன.   அவ்வளவு அழகான […]

Readmore