Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கருவறை சொந்தம் 34.2

அத்தியாயம் 34 (2) கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகுதான் அந்த அதிர்ச்சி செய்தி அனைவருக்கும் தெரியவந்தது. அதாவது யாழினி இறக்க காரணம், அவளுக்குக் கொடுக்கப்பட்ட செயற்கை ஸ்வாச சிஸ்டத்தில் கோளாறு ஏற்பட்டு, ஆக்சிஜன் சப்ளை தடைபட்டது தான். கிட்டத்தட்ட தமிழ்நாட்டையே உலுக்கிய அந்தச் சம்பவம் தொலைக்காட்சி, செய்திதாள் என்று எல்லா இடத்திலும் செய்தியாக வந்திருந்தது. மருத்துவமனையின் அஜாகிரதையை கேள்விப்பட்டு கோபமுற்ற மக்கள், அந்த மருத்துவமனை அடித்து நொறுக்க, மருத்துவமனை மேல் வழக்குத் தொடரப்பட்டது. அடுத்தச் சில மாதங்களில், […]

Readmore

கருவறை சொந்தம் 34.1

அத்தியாயம் 34 (1) கௌதமை ஆஷ்ரம அலுவக அறையில் அமர வைத்துவிட்டு, பியுன் மட்டும் உள்ளே சென்றவன், சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து, கௌதமை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல, அங்கே இவன் கையில், பிங்க் நிற பூந்துவாலையில் சுற்றப்பட்ட, ஒரு மாதமே ஆகி இருந்த அழகிய பெண் குழந்தை கொடுக்கப்பட்டது. அந்த நிமிடம் வரை அழுது கொண்டிருந்த அக்குழந்தை இவன் கைகளில் வந்ததும், பட்டென்று அழுகையை நிறுத்திவிட, இங்கே கௌதமிற்கும், அக்குழந்தையைக் கைகளில் வாங்கியதும், உடலில் […]

Readmore

கருவறை சொந்தம் 33

அத்தியாயம் 33 குழந்தையின் மேல் இருந்த எதிர்பார்ப்பு, யாழினியை அதீத அக்கறையை வெளிபடுத்தச் செய்ய, அதுவே, அவளுக்கு ஆபத்தாகி போனது. குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என்று அவள் போகாத கோவில் இல்லை. இந்தக் கோவிலில் வேண்டிக்கொண்டால் சுகப்ரசவம் நடக்கும், இந்தச் சாமியை வேண்டிக்கொண்டால் குழந்தை நீண்ட ஆயிலுடன் இருக்கும் என்று யார் எதைச் சொன்னாலும், அவர்களிடம் விலாசத்தை வாங்கிக் கொண்டு, கௌதமை அழைத்துக்கொண்டு உடனே அந்தக் கோவிலுக்குச் சென்றுவிடுவாள். ஆனால், அவளைச் சொல்லியும் குற்றல் இல்லை. […]

Readmore

கருவறை சொந்தம் 32.2

அத்தியாயம் 32 (2) இப்படியே கெளதம், யாழினி, திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் கடந்தது. இதற்கிடையில், யாழினியின் தாய், அடிக்கடி இவளை போனில் அழைத்துப் பேசுவார். ஆரம்பத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம், அடிக்கடி, “மாதவிடாய் சரியாக வருகிறதா??” என்ற கேள்வியைக் கேட்கிறார். சட்டென்று அவரின் பேச்சின் மறைமுகப் பொருளை புரிந்துகொள்ளாத யாழினி, அவரின் கேள்விக்குப் பதில் கூறிவிட்டுப் போனை வைத்துவிடுவாள். அவளது தாய்க்கோ, ஒருவேளை வேலையை நினைத்துக்கொண்டு, குழந்தை தள்ளி போடுகிறாளோ என்ற எண்ணம் இருந்து […]

Readmore

கருவறை சொந்தம் 32.1

அத்தியாயம் 32 (1) “அம்மு! ஓடாதடி! நில்லு! நானா பிடிச்சேன் சேதாரம் உனக்குதான்!” என்றபடி அந்த அதிகாலை பொழுதில், யாழினியை துரத்திக் கொண்டிருந்தான் கெளதம். ஆனால் அவளோ, சிறு குழந்தை போல இவனுக்குப் பழுப்பு காட்டியபடி, அந்த ஹோட்டலின் ஹனிமூன் சூட் அறையில் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள். திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து அவர்கள் கம்பனியில் அமெரிக்காவில் பள்ளி விடுமுறை சமயம் இங்கேயும், பத்து நாள் விடுமுறையாக ஹாலிடே வரவிருப்பதால், திருமணத்திற்கு அதிகம் விடுப்பு […]

Readmore

கருவறை சொந்தம் 31.2

அத்தியாயம் 31 (2) அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்தவன், தன் தந்தையிடம் தான் எடுத்திருக்கும் முடிவை பற்றிச் சொல்ல, அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. யாழினியின் குடும்ப விவரத்தை கேட்டுக் கொண்டவருக்கு, அவளின் பெற்றோர் ஆசிரியர்கள் என்பதே திருப்தியாக இருக்க, “உனக்கு இஷ்டம்ன்னா எனக்கும் பரிபூரணச் சம்மதம் பா. கூடிய சீக்கிரம் அந்தப் பொண்ணோட அண்ணன்கிட்ட பேசிட்டு சொல்லு. பெரியவங்ககிட்ட நான் பேசுறேன்.” என்று நேரடியாகத் தன் சம்மதத்தைச் சொல்லிவிட, அவரிடம் தன் நன்றிகளைத் தெரிவித்தவன், அன்றைய […]

Readmore

கருவறை சொந்தம் 31.1

அத்தியாயம் 31 (1) கெளதம் மற்றும் யாழினி இருவரும் வேலைக்குச் சேர்ந்து நாட்கள் ரக்கை கட்டி பறக்க, கிட்டத்தட்ட, ஒரு வருடம் கடந்திருந்தது. அன்றொரு நாள், அலுவகத்தைத் தாண்டி இருக்கும், கொலீக் ஒருவனின் வீட்டிற்கு அவன் அழைத்ததின் பேரில், பைக்கில் கிளம்பினான் கெளதம். அலுவகத்தைத் தாண்டிச் செல்லும் நேரம், யாழினி, பஸ் ஸ்டாப்பில் இறங்கி, அலுவகத்திற்கு உள்ளே செல்வது இவன் கண்களில் பட்டது. அவளைப் பார்த்ததும், உடனே தன் வண்டியை நிறுத்தியவன், “இன்னைக்கு ஆபீஸ் லீவ் ஆச்சே. […]

Readmore

கருவறை சொந்தம் 30.2

அத்தியாயம் 30 (2) அதன் பின் கெளதம், யாழினி இருவரும், அலுவகம் சேர்ந்து, நாட்கள் வேகமாகச் சென்று, இதோ கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிந்திருந்தது. கெளதம் அலுவகம் வரும் வழியில் தான், யாழினியின் ஹாஸ்டல் இருப்பதால், முக்கால்வாசி நாட்களில், இவன் அலுவகம் வரும் அதே நேரம், அவளும் பஸ்ஸில் இருந்து இறங்கி அலுவகத்துக்குள் நுழைவாள். ஆதலால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள நேரும்பொழுது, குட் மார்னிங், இன்னைக்கு ஏன் இவ்ளோ லேட்? பஸ் லேட் ஆகிடுச்சா? போன்ற சின்னச் […]

Readmore

கருவறை சொந்தம் 30.1

அத்தியாயம் 30 (1) யாழினி, அந்த வருடம் தான், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேலை தேட ஏதுவாக, தோழிகளுடன் ஹாஸ்டலில் தங்கி இருக்கிறாள். திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவள் அவள். தாய் அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியர், தந்தையும் அதே பள்ளியில் கணித ஆசிரியர். யாழினியின் அண்ணன் இனியன், சென்னையில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறான். அவனும் நண்பர்களோடு வீடெடுத்து தங்கி இருக்கிறான். இண்டர்வியுவில், தேர்வான விஷயத்தை, அடுத்த நாள், தன் அண்ணன் இனியனிடம் இவள் […]

Readmore

கருவறை சொந்தம் 29.2

அத்தியாயம் 29 (2) சில வருடங்களுக்கு முன்பு. கெளதம் தன் பொறியியல் படிப்பை முடித்துக் கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் முடிந்திருந்தது. நிலையான வேலை இல்லாமல், இரண்டு கம்பனி மாறி இருந்தான். இந்தச் சூழ்நிலையில், சென்னையின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும், நண்பன் ஒருவன் மூலம் அங்கே இண்டர்வியு நடக்கவிருப்பது தெரிய, தான் வேலை செய்யும் நிறுவனத்தில், உறவினரின் திருமண நிகழ்ச்சி என்று பொய் சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டவன், காலையே எழுந்து தயாராகி, […]

Readmore