Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உறவு ராகமிதுவோ – 7 (2)

“இன்னு மாத்தனாடுவுக ஆகத்யவேல்லா. நனகே அர்த்தவாயிது…” (இனிமே பேச அவசியமில்லை. எனக்கு புரிஞ்சிருச்சு.) என்று அவளை போலவே கன்னடத்தில் பேசியவன், “புரிஞ்சதா?…” என்று சொல்லிவிட்டு நேராக சாவித்ரி, ஷ்யாமளாவிடம் வந்து நின்றவன், “பொண்ணுக்கு இஷ்டம் இல்லைன்னா ஏன் இந்த அரேஞ்ச்மேன்ட்?…” என்று கேட்டதோடு ஷ்யாமளாவை வர சொல்லிவிட்டு வெளியேறிவிட்டான். வெண்ணிலா சுத்தத்திற்கும் இதனை எதிர்பார்க்கவே இல்லை. தான் பேசியதை புரிந்துகொண்டது ஒருபுறம், அதனை போலவே பதில் கூறியதும் ஒருபுறம் என்று அவளை ஸ்தம்பிக்க செய்துவிட்டது. கௌரவ் அவளை […]

Readmore

உறவு ராகமிதுவோ – 7 (1)

ராகம் – 7          சாவித்திரி வந்ததும் அவரை அறிமுகம் செய்துகொண்டதோடு தங்கவெண்ணிலாவை பற்றி கூறியதுமே கௌரவ்விற்கு பொறிதட்டியது. இந்த பெண் அவளாக இருக்குமோ என மனதோரம் யோசனை தான். நிச்சயம் இல்லை என்று கூறிவிட முடியாது. அவர் கூறிய காலகட்டமும், அந்த விபத்தான பகுதியும் சந்தேகத்திற்கு இடமின்றி அவனுக்கு காண்பித்துக்கொடுத்துவிட்டது. அத்தனையை கேட்டுமே அவன் முகத்தில் எந்தவித மாறுதல்களும் இல்லை. வேண்டுமென்று நிகழவில்லையே. அப்படி நிகழ்த்தவேண்டும் என்ற எண்ணமும் இல்லை. யாருக்கோ குறிவைத்து இந்த பெண்ணும் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 6 (3)

கௌசல்யா மௌனமாய் அமர்ந்திருக்க அவர் உண்டு முடித்ததும் தனக்கும் உணவை வைத்துக்கொண்ட கௌரவ், “சொல்லுங்கம்மா, என்ன பிரச்சனை?…” என்றான் நிதானத்துடன். “என்ன? எதுவும் இல்லையே?…” என கௌசல்யா சமாளிக்க பார்த்தார். “ஷ்யாமளாம்மா உங்ககிட்ட முக்கியமான விஷயம் சொன்னாங்களாம்…” என்றதும் கௌசல்யாவின் முகம் மாறியது. ‘கோலார்’ என்றதுமே கொந்தளித்து தாண்டவமாடிய ராம்நாத்தின் கோபத்தை எண்ணியவர் இதனை எப்படி மகனிடம் தெரிவிப்பது என யோசித்தார். “பிரச்சனை அதை வச்சா? அதனாலயா?…” என்றதும் தன்னை போல அவரின் தலையாடியது. “ஹ்ம்ம், சொல்லுங்க…” […]

Readmore

உறவு ராகமிதுவோ – 6 (2)

பற்றிக்கொண்டு வந்தது ராம்நாத்திற்கு. ‘இவ வயித்துல பிறக்காதப்பவே இந்த போடா? உண்மை தெரிஞ்சா இருக்கு எல்லாருக்கும்.’ என இளக்காரமாய் இருவரையும் பார்த்துவிட்டு வெளியேறினார் ராம்நாத். அவரின் கார் கிளம்பி சென்றதும் தான் கௌசல்யாவின் இறுக்கம் உடலில் தளர, முகத்தில் தீரா துயரம். “ம்மா…” என்ற கௌரவ்வின் அழைப்பில் நிமிர்ந்தவர், “அது ஒண்ணுமில்லை கௌரவ். நீ சாப்பிட்டியா?…” என்றார் மகனிடம். “ம்ஹூம்….” என்று அவன் தலையசைக்க, “இவ்வளோ நேரமா பசியோடவா இருந்த? வா சாப்பிட்டு…” என சோர்வுடன் கூறினாலும் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 6 (1)

ராகம் – 6             பஸ் டிப்போவில் எஃப்சி முடிந்து வந்த பேருந்துகளை எல்லாம் கணக்கில் வைத்துவிட்டு அடுத்து அனுப்பவேண்டிய வாகனங்கள் எதுவென்று மேனேஜரிடம் விவாதித்துக்கொண்டிருந்தான் கௌரவ். “டூரிஸ்ட் வீகிள்ஸ் எல்லாம் பிராப்பரா இருக்கா? அதுல என்னென்ன வண்டி எஃப்சி போகனும்?…” என தன் முன்னிருந்த கணினியில் பார்த்துவிட்டு கேட்க, அதற்கு மேனேஜர் பதில் கூறிக்கொண்டிருக்கையில் கௌரவ்வின் எண்ணிற்கு அழைப்பு. ஆகர்ஷன் தான் அழைத்திருந்தான் அந்தநேரம். மணியை பார்த்தான். இரண்டே முக்கால் என்றிருந்தது. “ஓகே, போங்க…” என்று […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (4)

“அப்படித்தான் பேசுவேன். என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? அந்த குடும்பம் பொண்ணு பார்த்து, என் பிள்ளைக்கு நான் கல்யாணம் பன்றதா? இனிமே இந்த பேச்சு வந்துச்சு அவ்வளோ தான். நான் மனுஷனா இருக்கமாட்டேன். அந்த டாக்டரை முடிக்க கூட யோசிக்கமாட்டேன்…” என ராம்நாத் கூற, “போதும் நிறுத்துங்க….” என்ற கௌசல்யாவின் உடலெல்லாம் நடுங்கியது. ஆகர்ஷன் முகம் மனதினுள் மின்ன, அந்த புன்னகை முகம் தோன்றவுமே கதறிவிட்டார் கௌசல்யா. அத்தனை அழுது கரைந்தவரை பார்த்த ராம்நாத்திடத்தில் கொஞ்சமும் இரக்கமில்லை. […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (3)

நுழையும்பொழுதே வீட்டின் ஒருவரும் இல்லை என்பதும் தெரிந்தது. கௌசல்யாவை பார்த்துக்கொண்டே வந்தவர் கையை கழுவிவிட்டு வந்தமர்ந்தார் உணவுண்ண. என்றைக்கும் போல என்று நினையாமல் கௌசல்யாவின் மனதில் ஷ்யாமளா கூறியதன் விஷயம் யோசனையாய் ஓடியது. இதனை கௌரவ்வை வைத்துக்கொண்டு பேசலாமா வேண்டாமா என பல்வேறு சிந்தனை. “நினைப்பெல்லாம் எங்க இருக்கு உனக்கு?…” கடினமாய் ராம்நாத்தின் குரல். “இல்ல, இல்லைங்க…” என்று பதறியவர் அவருக்கு பரிமாற, ஒருவார்த்தை கேட்கவில்லை உண்டுவிட்டாயா என்று. அதனை கௌசல்யாவின் மனமும் எதிர்பார்க்கவில்லை. ராம்நாத்தின் பேச்சுக்கள் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (2)

“ஹாய் ஆன்ட்டி…” என்று அவளுமே புன்னகைக்க, “என்ன நிலா எப்படி இருக்க? உன்னை பார்த்தும் ரொம்பநாள் ஆகிடுச்சு…” ஷ்யாமளா கேட்க, “இதோ பார்த்தாச்சே. நீங்க என்னயா இங்க ட்ரெய்னிங் கிளாஸ் எடுக்க கூப்பிட்டீங்க? சாவிக்குட்டியை தானே…” என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள் அவளும். “உன்கிட்ட பேசினா முடியுமா?…” என்றவர், “உட்காருங்க சாவித்ரிம்மா…” என்று அவரையும் அமர வைத்து, ஷ்யாமளாவும் அவரிடம் அவர் ரிப்போர்ட்டை நீட்டினார். “பிபி லெவல் அதிகமாகியிருக்கு. அது தான் இந்த மயக்கம்….” என்று அவரின் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (1)

ராகம் – 5           கௌரவ் புன்னகையுடன் நிமிரவும் வெண்ணிலாவின் பார்வை கண்களுக்குள் பதிய, லேசாய் புருவம் சுருக்கியவன் விழிகள் மாற்றம் பெரும்முன் லிப்ட் மூடிக்கொண்டது. “ப்பாஹ், பார்த்துட்டோமாம். பெரிய இவரு….” என்று தலையை உலுக்கிக்கொண்டு சென்றாள் வெண்ணிலா. மேல்தளம் வரவும் கௌரவ்வும் இறங்கி ஷ்யாமளாவின் அறை நோக்கி நடந்தான். கையில் இருந்த மோதிரத்தினை மீண்டும் கார் சாவியின் தொகுப்பில் இணைத்தவன் முகம் இன்னுமே புன்னகையை குறைக்கவில்லை. “செயின்ல கோர்த்து கழுத்துல போட்டுக்கோ கௌரவ்…”  என ஆகர்ஷனுமே […]

Readmore

உறவு ராகமிதுவோ – 4 (2)

மணமகனின் பெற்றோர் அவர் அதட்டியதில் அமர்ந்துவிட குமரனுக்கு பயம் பிடித்தது. “டப்பிங் எங்க நிலாவோட ஹாபி மட்டுமில்லை, அவ பேஷனும் கூட. வாய்ஸ் ஆர்ட்டிஸ்டா அவளோட அந்த ஜாபை ரொம்ப ரசிச்சு, மத்தவங்களும் ரசிக்கும்படி செய்யறா. அதை அவ விடமாட்டா…” என்றார் முதல் வெடியாக. அவர்கள் இது என்ன என்று திகைப்பும், அதிர்வுமாய் பார்த்தனர் சாவித்ரியை. “அன்ட் அவளோட ஜாப், பேஷன், ஹாபி சொல்லிட்டேன். ஆனா முக்கியமான விஷயம் சொல்லாம விட்டுட்டோம்….” என்றவர் குமரனை பார்த்துவிட்டு, “என் […]

Readmore