Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவளே என் துணையானால்(ள்)..! – 8

துணை 8: நேரமும், நாட்களும் அதன் வேகத்திற்கு சென்று கொண்டிருந்தது. அர்ஜூனின் மீது தோன்றிய எண்ணம் அந்த வயதில் தோன்றும் கிரஷ் என்றே நினைத்துக் கொண்டாள் வராஹினி. ஆனால் அவனைப் பார்த்தால் தான் அந்த நாளே முழுமையடையும் என்ற நிலையில் அவளின் மனம் இருந்ததை அவள் அறியாமல் போனது தான் ஆச்சர்யம். அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தாலும், ஏனோ அதை அவள் செய்யவில்லை. அப்படி விசாரித்து, ஒருவேளை அவனுக்கு திருமணம் ஆகியிருந்தால், அதை பிஞ்சு […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 7

துணை 7: அன்று இரவு முழுவதும் ரஞ்சன் வீட்டிற்கு வரவேயில்லை. அவனை எதிர்பார்த்து காத்திருந்த சுமித்ரா அவனுக்கு பலமுறை போன் செய்தும் அவன் எடுக்கவேயில்லை. மறுநாள் காலையில் தான் வீட்டிற்கு வந்தான் ரஞ்சன். அவன் உள்ளே வரும் போதே அர்ஜூன் வீட்டில் இருப்பதை அறிந்து கொண்டான். அர்ஜூன் அவன் அறையின் பால்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். “என்ன? அதிசயமா வீட்டுக்கு வந்திருக்கான். ஒருவேளை நேத்து நடந்ததை வீட்ல சொல்லியிருப்பானோ..?” என்று நினைத்தபடியே வந்தான் ரஞ்சன். அப்படி சொல்லியிருந்தாலும் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 6

துணை 6: புது இடம், புது வீடு என்கிற தயக்கம் கொஞ்சம் மனதிற்குள் இருந்தாலும், வராஹினி அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தான் இயல்பாக இருப்பதைப் போலவே காட்டிக் கொண்டாள். அர்ஜூனின் பாடு தான் திண்டாட்டமாக இருந்தது. இப்படி செய்தது தவறோ என்று ஆயிரம் முறையாவது யோசித்திருப்பான். காலையில் அவளுக்கு டிபனை  வாங்கிக் கொடுத்துவிட்டு அறைக்குள் நுழைந்தவன் தான், வெளியே வரவேயில்லை. அங்கிருந்த இன்னொரு அறையில் வராஹினி நல்ல தூக்கத்தில் இருந்தாள். அவள் சரியாகத் தூங்கி கிட்ட […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 5

துணை 5: “இப்ப எதுக்காக என் முகத்தையே பார்த்துட்டு வர..?” என்றான் அர்ஜூன். “என்னால இன்னமும் நடந்ததை நம்ப முடியலை. ஆனா, நடந்தது தான் உண்மை. இதை எப்படி எடுத்துக்கிறது..?” என்றாள் வராஹினி. “நடக்கிற எல்லாத்தையும் நல்லதுக்குத் தான்னு நினைச்சுக்க..!” என்றான் அர்ஜூன். “ஆனா, நடிக்கிறதுக்கு இப்படி நிஜமாவே தாலி கட்டியிருக்க வேண்டாம் சார்..” என்றாள் வராஹினி அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு. “அப்படிங்கிற..?” என்று யோசித்தவன், “நீ சொல்றது சரிதான்..! வேண்டம்ன்னா கழட்டிக் குடுத்துடு..” என்றான் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 4

துணை 4: “இப்போ நான் உன்னை எங்கயாவது கடத்திட்டு போனா என்ன பண்ணுவ..?” என்றான் அர்ஜூன். “நல்ல காமெடி சார்..” என்றாள் வராஹினி. “யாரு நான் காமெடி பண்றேனா..?” என்றான் அர்ஜூன். “இல்லையா பின்ன..? நான் அடிச்சு சொல்றேன் சார், நீங்க தப்பானவரா இருக்க முடியாது..” என்றாள் உறுதியாக. “இப்படியே நம்பிகிட்டு இரு..” என்றவனுக்கு மனதிற்குள் லேசாக மழைச்சாரல் அடித்தது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கார் அந்த பிரமாண்டமான வீட்டின் உள்ளே சென்றது. “இது யார் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 3

துணை 3: கேப்பில் ஏறி அமர்ந்த வராஹினிக்கு அப்போதும் மனமேயில்லை. எதையோ அப்படியே விட்டுவிட்டு செல்வதைப் போல் உணர்ந்தாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், எதையோ இழந்தது போல் இருந்தது அவளின் மனம். “இப்படியே இருந்தா..? அடுத்து என்ன பண்ண போற வராஹி..?” என்றது அவளின் மனம். “என்ன பண்றது..? நேரா வீட்டுக்குப் போக வேண்டியது தான். வேற வழியில்லை. எது வந்தாலும் இனி சமாளிச்சு தான் ஆகணும். எப்படியோ கல்யாணம் நின்னு […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 2

துணை 2: சென்னையில்… அந்த பிரமாண்டமான வீட்டின் உள்ளே இருந்த மனிதர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையை பார்த்திருந்தனர். அவர்கள் முகத்திலிருந்தே அவர்களின் கோபம் தெரிந்தது. “இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கிறதா உத்தேசம் ரஞ்சன்..?” என்றார் கார்த்திகேயன். அவருடைய முகத்தில் வருத்தம் இருந்தாலும், அதையும் மீறிய கோபமும் இருந்தது. “என்னை என்ன பண்ண சொல்றிங்க டாட்..? இப்படி ஒரு அவமானம் எனக்கு நடக்கும்ன்னு நான் நினைச்சு கூட பார்க்கலை..” என்று பொருமித் தள்ளினான் ரஞ்சன். அவனுடைய பார்வையெல்லாம் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 1

அவளே என் துணையானால்(ள்)..! துணை: 1 பெங்களூர் பேருந்து நிலையம்.. அந்த இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அவர்களின் தேவையைப் பொறுத்து, பேருந்துகள் இருக்கும் இடத்தைத் தேடி நகர்ந்து கொண்டிருந்தனர். அது சீசன் டைம் என்பதால் பேருந்துகளின் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது. பெங்களூருவில் இருந்து சென்னை புறப்பட தயாராய் இருந்தது அந்த சொகுசு பேருந்து. பேருந்து புறப்பட தயாராய் இருந்த அந்த கடைசி நிமிட வினாடிகளில் வேகமாய் வந்து அவசரமாய் ஏறினாள் […]

Readmore

மூங்கில் புன்னகையே..! – 11

மூங்கில் 11: வெற்றியையும், வர்ணிகாவையும் ஜோடியாய் பார்த்த வினிதாவின் நெஞ்சம் நிறைந்து போனது. வெற்றி நேராக அவளை அங்கு தான் அழைத்து சென்றிருந்தான். வர்ணிகாவைப் பார்த்ததும் முதலில் வினிதா தலை நிமிர்ந்து பேசவேயில்லை. அவளின் முகத்தைப் பார்த்து பேசவே அவரால் முடியவில்லை. ராஜேஷ் செய்து வைத்திருந்த காரியத்திற்கு வினிதா தான் தலை குனிய வேண்டியிருந்தது. “என்னம்மா இதெல்லாம்..?” என்றாள் வர்ணி கலங்கிய கண்களுடன். “உன்னை நேரா பார்த்து பேசுற தகுதி கூட எனக்கு இல்லை வர்ணி. எங்களுக்காக […]

Readmore

மூங்கில் புன்னகையே..! – 10

மூங்கில் 10: “சார் நீங்க எங்களை அனுப்பி வைக்கப் போறிங்கன்னு பிகாரி சார் சொன்னது தான் மாயம்.. மேடம் முகம் அப்படியே மாறிப் போய்டுச்சு. எதுக்கு அப்படி மாறுச்சுன்னு இப்பத் தான் தெரியுது…!” என்றார் ஜெர்சி. “அதெல்லாம் ஒண்ணுமில்லை..” என்றாள் கடுப்புடன். “ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லைன்னு சொல்லியே எங்களை ஒருவழியாக்கிட்டடி..” என்ற லோகா அவளைப் பார்த்து சிரித்து வைக்க, அவளை முறைத்து வைத்தாள் வர்ணிகா. “நாங்க நிஜமாவே இந்த இடத்தை மிஸ் பண்ணுவோம் சார். என்ன ஒரு குறை.. […]

Readmore