Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Iravin Panithuli

அத்தியாயம் 10.2 : இரவின் பனித்துளி!!!

“என்ன அமைதியாகிட்ட? சரி குட்டிப் பையன், ரேவதி அக்கா எல்லாம் எப்படி இருக்காங்க?”   “நல்லா இருக்காங்க. நான் வீட்ல இருக்கேன். அக்கா இன்னும் ஹாஸ்பிட்டல்ல இருந்து வீட்டுக்கு வரலை. வந்த அப்புறம் வீடியோ கால் பண்ணுறேன்”   “சரி தீபக், எக்ஸாம்கு படிக்க ஆரம்பிக்கலையா?”   “படிக்கணும்”   “ஏய் நாம ரெண்டு பேரும் சேந்து படிக்கலாமா? நான் சிலபஸ் எடுக்குறேன். முதல்ல என்ன படிக்கணும்னு முடிவெடுத்து படிப்போம்”, என்று படிப்பு பக்கம் பேச்சு சென்றதும் […]


அத்தியாயம் 10.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 10 ஓடும் தண்ணீரில் உன் பெயர் எழுதினேன் கலைந்து மாயமாவாய் என்று தெரிந்தும்!!! அன்று மாலை வீட்டுக்கு வந்த முருகேசனுக்கு வீட்டில் இருந்த அமைதி திகைப்பைக் கொடுத்தது. எப்போதுமே அவர் வரும் போது அவரின் இரண்டு மகள்களும் அவருக்காக காத்திருப்பார்கள்.   ஒரு வேளை அவர்கள் அறையில் இருந்தால் கூட கலாவதி அவருக்காக காத்திருப்பாள். ஆனால் இன்றோ மகள்களின் அரவமும் இல்லை. மனைவியின் காத்திருப்பும் இல்லை.   வீட்டின் இந்த நிலை அவரை புருவம் தூக்க […]


அத்தியாயம் 9.2 : இரவின் பனித்துளி!!!

தனக்குள் உருவான காதல் அவளுக்குள்ளும் மொட்டவிழ்வதற்காக காத்திருந்தான் தீபக்.   தீபக்கை பொருத்த வரை காயத்ரி இரவு நேர பனித்துளி போல அழகான தேவதை. அவனுக்கு சந்தோசத்தைக் கொடுக்கும் வெண்மையான முயல் குட்டி. அதனால் அவளுடைய காதலை விட இப்போதைய நட்பு அவனுக்கு முக்கியமாக பட்டது.   அதன் பின் லேப், மாடல் எக்ஸாம், பிராக்டிகல், பேரண்ட்ஸ் டீசர்ஸ் மீட்டிங் மீட், மற்றவரைக் கிண்டல் அடிப்பது, கிளாஸ் நடக்கும் போதே ஓப்பன் ஆகும் டிபன் பாக்ஸ், கிளாசில் […]


அத்தியாயம் 9.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 9 உந்தன் நாதத்தின் இசையினிலே அழகான கானம் கேட்க வந்தது மேகக் கூட்டங்கள்!!!   தீபக்கும் அப்போது காயத்ரி பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தான். முதன் முதலில் கவுன்சிலிங்க் போன போது தான் அவளைப் பார்த்தான்.   தீபக்குடன் அவனுடைய அன்னை மீனாட்சி தான் கவுன்சிலிங்க்காக சென்றிருந்தாள். தன்னுடைய சான்றிதழை சரி பார்த்துக் கொண்டிருந்த தீபக் மீனாட்சி அழைக்கவும் அவளை திரும்பி பார்த்தான்.   “என்ன மா, நொய் நொய்ன்னுட்டு இருக்க?”   “இப்ப எதுக்கு […]


அத்தியாயம் 8.2 : இரவின் பனித்துளி!!!

“டேய், தடிமாடு நீ என்ன டா சொல்ற? என் நம்பரைத் தான் நிஜமாவே கொடுத்தியா?”   “ஆமா, எனக்குன்னு வேற யார் இருக்கா? நீ மட்டும் தானே என் செல்ல அக்கா”   “உன் அக்கா பாசத்துல இடி விழ. இப்ப அந்த பொண்ணு எனக்கு தான் போன் பண்ணுமா டா?”   “அதான் தெரியலை. அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன். அவ நம்பரை பாக்கவே இல்லை. பாக்கணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன்”   “நீங்க […]


அத்தியாயம் 8.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 8 சோலையில் வந்த பூவைக் கண்டு மயங்கினேன், சோலையே கனவென்று தெரியாமல்!!!   முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்த காயத்ரியைக் கண்டு சௌமிக்கும் கலாவதிக்கும் தான் குழப்பமாக இருந்தது.   “சௌமி, என்ன ஆச்சு டி? இவ ஒரு மார்க்கமா ரூமுக்கு போறா?”:, என்று கேட்டாள் கலாவதி.   “உன் பொண்ணைப் பத்தி உனக்கே தெரியலை. எனக்கு எப்படி தெரியும் மா?”, என்று கேட்டாள் சௌமி.   “எனக்கா அவளைப் பத்தி தெரியும்? […]


அத்தியாயம் 7.2 : இரவின் பனித்துளி!!!

அவள் அப்படிச் சொல்வாள் என்று கௌதம் மற்றும் தீபக் இருவருமே எதிர் பார்க்க வில்லை. இருவருக்குமே அதிர்ச்சியாக இருந்தது.   தீபக்கோ நொந்து போனான். தன்னுடைய காதலைச் சொல்லாத மடத்தனத்தை நொந்த படி அவர்களின் சம்பாசனையைக் கேட்டான்.   “காயத்ரி நீ பொய் தானே சொல்ற?”, என்று கேட்டான் கௌதம்.   “நான் உண்மையைத் தான் சொல்றேன். நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்”   “அப்ப யாருன்னு சொல்லு”   “அதை எதுக்கு உங்க கிட்ட சொல்லணும்? […]


அத்தியாயம் 7.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 7 பிரம்ம தேவனுக்கு இவ்வளவு ரசனையா என்று கேள்வி எழுகிறது உன்னைப் படைத்ததால்!!!   தீபக் அவள் கையை இறுக்கமாக பற்றியிருந்ததால் அவளால் விடுவிக்க முடியவில்லை. அத்தனை பேரின் முன்னிலையில் அவனை அசிங்கப் படுத்தவும் முடியவில்லை.   சிறிது நேரம் கழித்து போராடுவதை விட்டு விட்டு அவனை முறைத்துப் பார்த்தாள். அப்போதாவது அவன் கையை விடுவான் என்று எதிர் பார்க்க அவனோ அவள் கைகளை பற்றிய படியே இருந்தான்.   அவன் கண்கள் அவளிடம் எதையோ […]


அத்தியாயம் 6.1 : இரவின் பனித்துளி!!!

அத்தியாயம் 6 கருமையான இரவு வானில் காவியம் பாடும் அழகான நிலவு மகள் நீதானோ?!!!   “யாரும் இறங்காதீங்க”, என்று டிரைவர் சொன்னது, பஸ் கிளம்பியது எதுவுமே அவளுக்கு நினைவில் இல்லை. அவள் அதை உணரவும் இல்லை.  அவளுக்கு நினைவில் இருந்தது ஒன்று மட்டுமே. அது அவனின் கரம் அவள் வயிற்றில் இருப்பது மட்டுமே.   வேகமாக அவன் கரத்தை தட்டி விட்டவள் திரும்பி அவனை தீர்ப்பார்வை பார்த்தாள். அப்போது பஸ் சென்று கொண்டிருக்கிறது என்பதைக் கூட […]


அத்தியாயம் 6.2 : இரவின் பனித்துளி!!!

அது முந்தைய பாடலை விட அருமையாக இருந்தது. தீபக்க்கு அவளை அப்படியே கட்டியணைத்து பாராட்ட வேண்டும் போல் இருந்தது.   “என்ன ஆனாலும் சரி, இவளிடம் பேசியே ஆக வேண்டும்”, என்று முடிவெடுத்தான்.   “கடைசி பெர்பார்மன்ஸ்  யாரோடதுன்னா எங்களோட செல்ல தம்பி, உங்க கிளாஸ் ரெப் தீபக்குடையது தான்”, என்று அனோன்ஸ்மெண்ட் வந்தது கூட தெரியாமல் காயத்ரி நினைவில் இருந்தான் தீபக்.   அவன் அருகில் அமர்ந்திருந்த ரிஷி தான் “டேய், நீ தான் டா. […]