Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே 27-1

கள்வன் – 27   அந்தி நேரம் நெருங்க, வேலை முடிந்து அந்த நாளின் சோர்வையும் மீறிய களிப்பு வெளிப்படையாக அங்கிருந்த அனைவர் முகத்திலும் தெரிய, இருவர் மட்டும் உர்ரென்று முகத்தை வைத்திருந்தவர்கள் இனியாவையும், யுக்தாவையும் தவிர வேறு யாராக இருக்க முடியும்?    யுக்தா குழப்பிய குட்டையில் இனியா கலங்கி, கனன்று கொண்டிருக்க, இரு தினங்கள் கழித்துக் கிடைத்த இன்பனின் தரிசனத்தில் யுக்தா கடுப்பின் உச்சத்தில் இருந்தாள். அவன் வந்து பேசியிருந்தால் சற்று தெளிந்திருப்பாளோ என்னவோ? […]


கள்வனே கள்வனே – 26

கள்வன் – 26   “தூங்கிட்டான்… வா நாம் வெளியில் போய் பேசலாம்,” தன் மடியில் கண்மூடி படித்திருப்பவனை காட்டி சிவகாமி சொல்ல, ஓசையின்றி நகைத்தவள், “ஆமா ஆமா… நல்ல்லா தூங்கிட்டாங்க…” என்று அழுத்திச் சொல்லி எழுந்துகொள்ள, புரியவேண்டியவனுக்கு புரிந்தது. விரியத் துடிக்கும் அதரங்களையும், இமைகளுக்குள் விளையாட முயலும் கருவிழிகளையும் அடக்கி அமரவைக்கவே சிரமமாய்ப் போனது அவனுக்கு.   சிவகாமி அதிர்வின்றி மென்மையாய் இதயனின் தலையை தலையணையில் வைத்தவர் போர்வையை கழுத்துவரை இழுத்து போர்த்திவிட்டு வெளியேற, பின்னேயே […]


கள்வனே கள்வனே – 25

கள்வன் – 25   ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவள் விழிமணிகளில் விழிப்பு தட்ட, மென்னிமைகளை மெல்ல பிரித்தவள் வதனத்திலும் உள்ளத்திலும் இரவு இருந்த குழப்பங்கள் முற்றிலும் விலகி, தெளிந்த அமைதி மனதை ஆக்கிரமித்திருந்தது. தந்தை தந்த யோசனை வேலைசெய்ய, உறக்கத்தில் வேலைநிறுத்தம் செய்து ஓய்வெடுத்த மூளை, தன் வேலையைத் தொடர, சிந்தையில் மெல்லிய மின்னல்வெட்டு.    தாமதியாமல் மெத்தையில் உருண்டு பக்கவாட்டில் இருந்த மேசையிலிருந்த தன் அலைபேசியை எடுத்தவள் கைகள் அனாயசியமாக கூகிளின் உதவியை நாடியது. சிகிச்சை […]


கள்வனே கள்வனே – 24

கள்வன் – 24   “எனக்கு எல்லாம் தெரியும்கா…” என்றபடியே கவலை தோய்ந்த இறுகிய முகத்துடன் அவள் எதிரில் வந்து அமர்ந்தான் இனியன். அவனின் சொல் புரியாத இனியா, “என்ன தெரியும்? என்ன பேசுறனு ஒன்னும் புரியல.”   அவளை ஆழ்ந்து நோக்கியவன் அவள் கேள்விக்கு நேரடியாய் பதில் அளிக்காது, “எல்லாத்தையும் விட்டிரு அக்கா…” என்று புதிராய் பேசி வைத்தான்.   சிந்தனை ரேகைகள் அவளை விட்டு அகலாது இன்னுமே அதிகரிக்க, ‛என்ன அக்காவா?’ என்று மனதில் […]


கள்வனே கள்வனே – 23

கள்வன் – 23   இதயனின் புன்முறுவல் மனதிற்கு இதமளிக்க, அந்த கதகதப்பை மனதில் உணர்ந்தபடியே இதழ்களுக்குள் ஏதோவொரு பாட்டை மெல்லசைப்புடன் முணுமுணுத்துக் கொண்டே கணினியில் தன் விழிகளை பதித்திருந்தாள் இனியா. பாரம் கூடியிருந்த மனது அந்த பாரத்தையே மறந்திருக்க, அவளை விசித்திரமாய் பார்த்துக் கொண்டிருந்த யுக்தா அவள் தோள் தட்டினாள்.    “என்ன இன்னைக்கு மேடம் ஒரு தினுசா இருக்கீங்க?”   மனம் அழுத்தமின்றி லேசாக இருக்க அந்த நேரம் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் இனியா […]


கள்வனே கள்வனே – 22

கள்வன் – 22   இதயனுடனும் சிவகாமியுடனும் வாடகைக் காரில் இனியா தொற்றிக்கொள்ள, இன்பன் இவர்களின் காரை பின் தொடர்ந்து வந்தான். தாயையும் மகனையும் பின் இருக்கையில் தாராளமாக அமர வைத்துவிட்டு இனியா முன்னே ஓட்டுநரின் அருகில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.    வழி நெடுக அகமும், விழியும் இனியா புறமும், கார் சன்னலைத் தாண்டி வெளிப்புறத்திலும் மாறி மாறி அலைப்பாய பயணத்தை எதிர்நோக்கியும், அதனின் பலனை எதிர்பார்த்தும் ஆவலோடு பயணித்தான் இதயன். பல வருடங்களுக்கு […]


கள்வனே கள்வனே – 21

கள்வன் – 21   “விழா எப்படி போச்சு பாப்பா…” இனியா வீட்டில் நுழைந்தவுடன் அவளின் சோர்ந்த உருவையும் மீறி வினா எழுப்பினார் ரமேஷ்.     “அவளே களைத்து போய் வந்திருக்கா. நீங்க இப்போ தான் கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க.” செய்கைகள் உல்டாவாக கீதா ரமேஷை கடிய, அவரோ அதை பெரிதாக எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.   “பாப்பாவுக்கு எதுவும் குடிக்க கொண்டுவா,” என்று மனைவியை விரட்டியவர் சோர்ந்திருந்த தன் மகளிடமிருந்து அவளது கைப்பையை வாங்கிக் கொண்டு, […]


கள்வனே கள்வனே – 20

கள்வன் – 20   “காதலும் ஒருவித போதைதான்… அதுவும் சுகமான போதை.” என்று கண்களில் மென்மையை கூட்டி, சன்னமான குரலில் அஜய் சொல்ல இனியா புரியாத பார்வை பார்த்தாள்.   “என்ன?”   அவளின் பாவனையில் கணநொடியில் தன் இயல்பை மீட்டெடுத்துக் கொண்டவன், “இல்லையா பின்னே?… காதல் போதை எல்லோருக்கும் வருவதில்லை தான், இருப்பினும் அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் இதம், சுகம் புரியும். சிலபல நேரம் காரணமின்றி ஒருவர்பால் ஈர்க்கப்பட்டு இவங்க தான் நம் […]


கள்வனே கள்வனே – 19

கள்வன் – 19   அஜய் கூறிய நட்சத்திர விடுதிக்கு வந்தவுடன் அங்கிருந்த வரவேற்பறையில் விழா எங்கு நடக்கிறது என்று விசாரித்துக் கொண்டு அந்த கூடம் நோக்கி நடந்தாள் இனியா. என்றும் இல்லாத அளவிற்கு அஜயை பார்க்க வேண்டும் என்கிற உத்வேகம் அவளுள் ஆல மரமாய் வளர்ந்து நிற்க, இரண்டு நாட்களாக இதே சிந்தனை தான். யுக்தா குழப்பிய குட்டையில் தெளிவு பிறக்கவில்லை எனினும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யோசனையை அஜய்ரத்னத்தின் அழைப்பு உசுப்பியது.  […]


கள்வனே கள்வனே – 18

கள்வன் – 18   “இனியா வரலையா டா?” வீட்டுக்கு வந்தவளை வரவேற்பதற்கு முன்பாகவே வராதவளின் நலம் விசாரித்தார் சிவகாமி.   “வரல அத்தை.” சுருக்கமாய் பதில் கூறிவிட்டு உள்ளே நுழைந்தாள் யுக்தா.    “அது என்ன தினமும் நான் கிளம்பிய பின்னே வரீங்க… என்கூடவே வந்து இருக்கலாம்…” என்று முன்தினம் போலவே குறைபட்டுக் கொண்டே அவளை வரவேற்று கூடத்தில் அமரவைத்த இன்பன், அவள் அருகிலேயே உட்கார்ந்துக் கொண்டான்.   “இன்னும் ரெண்டு மாசத்துல உங்க கூட […]