Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kanmani Naanun Nijamallavaa

கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (2)

“என்னாச்சுப்பா…” என கேட்க, “தாத்தா தும்த்தத்தா ப்ளே…” என ஆராதனா முன்வந்து சொல்ல, “என்னடாம்மா? புரியலையே…” என கேட்க, “என்னை குத்திட்டாங்கடா ரெண்டுபேரும் சேர்ந்து…” என்று சிறுபிள்ளை போல புகார் சொல்ல, “அப்படியாடா? ஏன் அப்படி பண்ணுனீங்க? தப்பு…” என சொல்ல, “நீ கேளேன் எப்படி அடிச்சாங்கன்னு…” என முத்துவேலும் எடுத்து கொடுத்தார். “அப்பா, விடுங்கப்பா குழந்தைங்கட்ட நான் சொல்லி வைக்கறேன்…” என வாசுதேவகிருஷ்ணன் கண்களை மூடிக்கொண்டே சொல்ல, “பார்த்தியா? என்ன ரெண்டு வாண்டும் அடிச்சுச்சுன்னு சொல்றேன். […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 32 (1)

நிஜம் – 32 மூன்று வருடங்களுக்கு பின்… “பூர்வி…” என வீடே அதிரும் படி கத்திக்கொண்டு இருந்தான் வாசுதேவகிருஷ்ணன். “இப்ப எதுக்குடா வந்ததும் வராததுமா கத்துற? அப்பா தான் கூட்டிட்டு வர சொன்னாரு. நானும் விமலாவும் அவ அப்பா வீட்டுக்கு போய்ட்டு அப்படியே கூட்டிட்டு வந்தோம். இப்ப என்னவாம் அதுக்கு?…” அன்புக்கரசி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே உள்ளே இருந்து லிப்ட் ஓபன் ஆகும் சத்தத்தில் திரும்பி பார்க்க அங்கிருந்து சிறுவன் ஒடி வந்து அவனின் காலை கட்டிக்கொண்டான். […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 31 (2)

முத்துவேலுவுக்கு சிலிர்த்து போனது. இத்தனை நாள் இளையமகன் தன் மீது பாசமில்லாமல் இருக்கிறான் என நினைக்க அவனோ தனக்காக கொதிக்கிறான் என புரிந்து அவனை மெய்மறந்து பார்த்தவர், “அப்பனா உன்னையை நினைச்சு பெருமை படறேன்டா. எல்லாம் நான் பார்த்து வச்ச பொண்ணு வந்த மகிமை. அவ வந்த நேரம் நீயும் மனசு மாறிட்ட. இது போதும்…” என்று வசனம் பேச வந்த சிரிப்பை அடக்க வாசுதேவகிருஷ்ணனை விட அவனின் மனைவிதான் வெகுவாய் சிரமப்பட்டாள். “ஐயோ இவங்க மைண்ட்வாய்ஸ் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 31 (1)

நிஜம் – 31 அந்த மத்திய சிறைச்சாலையில் அந்த சிறைக்கம்பிகளுக்கு அப்பால் முடி இல்லாத சொட்டை தலையை கோபத்துடன் சொறிந்தபடி இங்குமங்கும் அலைபாய்ந்துகொண்டிருந்தார் அந்த முன்னாள் அமைச்சர். இந்நாள் கைதி ஆதிமூலம். “யோவ் நிஜமாவே நான் பண்ணலையா. சொன்னா புரியாம திரும்ப திரும்ப பேசிட்டு இருக்க. நான் தான் சொன்னேன்ல. கேனைத்தனமா என் மருமகன் என்னத்தையோ செஞ்சி இப்படி ஒரு சிக்கலை இழுத்துவிட்டிருக்கான். நானே என்னைக்குடா இதுல இருந்து வெளில வரன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” “ஆனா அது […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 30 (2)

“தனியா பேசனும்னா போய் பேசிட்டு வாங்க. ஏன் இங்கயே இருந்து மாத்தி மாத்தி மண்டையை ஆட்டிட்டு இருக்கீங்க?…” என்று விமலா கேட்க, “அதான் வரமாட்டேன்னு சொல்றாளே. அப்பறம் அண்ணி எங்கண்ணனை நல்லா பார்த்துக்கறீங்களா?இப்பலாம் ரொம்ப விரட்டறீங்க போல?…” என கேட்க, “யாரு நானு? நீ வேற ஏன் வாசு? என்னை சேர்ந்தாப்ல கொஞ்சம் நேரம் உட்கார விடமாட்டேன்றாரு. வெளில நடக்க விடறதில்லை. அத்தை அதுக்கு மேல. அதான் சில நேரம் டென்ஷன்ல கத்திடறேன்…” என்று சொல்ல, “எல்லாம் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 30 (1)

நிஜம் – 30 “கைல லேசா அடி அவ்வளோ தான். நீங்க நினைக்கிற மாதிரி பெருசா எதுவுமே இல்லை…” என்றதும் வாசுதேவகிருஷ்ணன் மனமோ சமாதானம் ஆகவே இல்லை. “எதுக்கும் ஸ்கேன் எடுத்து பார்த்திடலாமே. கைல வீக்கம் இருக்கற மாதிரி இருக்கே…” “நத்திங் ஸார். நான் குடுத்த ஆயின்மென்ட் அப்ளே பண்ணுங்க. ரெண்டு நாள்ல வீக்கம் வைத்திடும். அப்பவும் இல்லைன்னா ஸ்கேன் எடுத்துக்கலாம்…” என டாக்டர் சொல்லிவிட்டு அவனை புன்னகையுடன் ஏறிட்டவர், “இன்னொரு முக்கியமான விஷயம். இனிமே இந்த […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 29 (2)

“ரொம்ப மிஸ் பண்ணிட்டியா பூர்வி?…” என்றான் மெல்லிய குரலில். “ஹ்ம்ம்….” என அவனின் விரல்களை ஆராய்ந்துகொண்டே அவள் சொல்ல, “நானும் மிஸ் பண்ணிருப்பேன்னு உனக்கு தோணலை?…” என கேள்வியாய் கேட்க அவளுக்கு எதையும் கேட்கவோ மீண்டும் சண்டையிடவோ விருப்பமும் இல்லை. திடமும் இல்லை. “ப்ளீஸ், அந்த பேச்சை விடுங்க…” என்றாள். எதையும் தெரிந்துகொள்ளவோ அறிந்துகொள்ளவோ விரும்பவில்லை. முதலில் தன் குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று நினைப்பு மட்டுமே மனது முழுவதும் வியாப்பித்திருக்க, “எப்போ கிளம்பினீங்க? பேசறப்போ கூட சொல்லவே […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 29 (1)

நிஜம் – 29 “லட்சுமி மாப்பிள்ளை…” என வெளியே தனியே வந்த தங்கையை பார்த்து தினேஷ் கேட்க, “அவர் முக்கியமான போன் கால்ல இருக்கார். நாம கிளம்புவோம்…” என படபடப்பாய் சொல்ல அவளின் முகமே சரியில்லாததை போன்று தோன்றியது. “என்னம்மா?…” என அண்ணன் வாஞ்சையாக கேட்டதும் உடனே முகத்தை சிரித்தபடி வைத்தவள், “ஒண்ணுமில்லைன்னா, திடீர்ன்னு கிளம்பவும் இன்னும் அத்தை மாமாக்கிட்ட கூட சொல்லலை…” “அவ்வளோ தானே? போறப்போ பேசிக்கலாம்…” என்றவன் மீண்டும் கதவை பார்க்க, “போகலாமா வேண்டாமா?…” […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 28 (2)

அன்று பேசியதோடு சரி அடுத்தடுத்து நான்கு நாட்கள் இருவருக்குமான பேச்சுவார்த்தை குறைந்து ஓரிரு வார்த்தையில் வந்து நின்றது. வாசுதேவகிருஷ்ணன் பாஸ்கரன் பேமிலியை போய் பார்க்கவும் இல்லை. என்ன ஏதென்று கேட்கவும் இல்லை. ஒருகட்டத்தில் அவரே வீடு தேடி வந்து குடும்பத்துடன் வெளியூர் செல்வதாக, அங்கேயே வேலையை மாற்றிக்கொண்டு செல்வதையும் சொல்லி செல்ல அபூர்வா மட்டுமே சென்று கீழே வரை வழியனுப்பிவிட்டு வந்தாள். மேலே வந்தவளின் சோர்ந்த முகம் அவனை குற்றம் சாட்டும் பார்வையாக மாற அதை கண்டுகொள்ளாததை […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 28 (1)

நிஜம் – 28 மாலை வெகு சீக்கிரமே வீட்டிற்கு வந்த கணவனை ஆச்சர்யம் மிகுந்த பாவனையுடன் பார்த்த அபூர்வா, “இன்னைக்கு என்ன சீக்கிரமே வந்துட்டீங்க?…” என சிரித்தபடி அவனின் கையை பிடித்துக்கொண்டவள், “வெளில போலாமா? ம்ஹூம், விமலாக்காவை பார்க்க போவோம். நேத்து தான் செக்கப்க்கு போனாங்களாம். மருது மாமா தான் கூட்டிட்டு போயிருக்காங்க. அத்தையை கூட வர வேண்டாம்னு சொல்லி. ஸ்கேன்ல குழந்தையை பார்த்ததும் ஓன்னு அழுதுட்டாங்களாம். விமலாக்கா சொல்லி சொல்லி சிரிச்சாங்க. கொஞ்சம் நேரம் முன்ன […]