Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Manaithakka Maanbudaivayal

மனைத்தக்க மாண்புடையாள் – இறுதி அத்தியாயம்

அத்தியாயம் 26   “உதயா…!!! உதயா… எங்க போன..” தான் அணிந்திருந்த வெள்ளை உள்பனியனின் மேலே வெள்ளை நிற பார்மல் ஷர்ட்டின் பட்டனை போட்டுக் கொண்டிருந்த உதய்யின் கைகளில் ஒரு அவசரமும் உடல்மொழியில் ஒரு படபடப்பும் கண்களில் அலைப்புறுதலும் அப்பட்டமாய் பிரதிபலிக்க வாயோ ஓயாமல் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தது. சட்டை அணிந்து கண்ணாடி முன் நின்று தலைமுடியை சரி செய்தபடி மறுபடியும் உதயாவை கூப்பிட எத்தனித்தப்போது, “இப்ப எதுக்கு என் பேர ஏலம் விட்டுட்டு இருக்கீங்க..அத்தையோட ஒரு […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 25   அன்று இரவு உணவு முடித்ததும் அனைவரும் முற்றத்தில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருக்க, “அடடா..பேசிட்டே இருக்கீங்களே..போர் அடிக்குது..எதாவது விளையாடலாம்..” என்று நிலா கூறவும், “ஏன் சாயுங்காலம் பட்டம் விட்டது போதலையா..?? கொஞ்ச நேரம் அசந்து உட்கார விட மாட்டியாடி..” என்று வெண்பா மகளை முறைக்க பதிலுக்கு பழிப்புக் காட்டிய மகள், “லீவ் டேஸ்ல தானே ம்மா விளையாட முடியும்..மத்த நாள்ல எல்லாம் எல்லாரும் பிஸியா இருப்பீங்க..” என்று சொல்ல, “சரி…அப்ப அந்தாக்‌ஷெரி விளையாடலாமா..” ஆர்வமாய் […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 24   மறுநாள் காலையில் உதயா கண்விழித்த போது உதய் டிப்டாப்பாய் தயாராகி இருக்க அவனை குழப்பமாய் பார்த்தபடி, “எங்க உதய் கிளம்பிட்டீங்க..இவ்வளவு சீக்கிரம்..” என்றாள் இன்னும் தூக்கம் விலகாத குரலில்.. “ம்ம்ம்..திருப்பூருக்கு…” என்றதும் விழிகள் பட்டென்று மலர ஆனாலும் சிறு சந்தேகத்தோடு, “நீங்க போறீங்களா..சசிண்ணா வீட்டுக்கோ..” என்று அவள் இழுக்க அவனோ கைகடிகாரத்தை பார்த்து, “இல்ல..என் மாமியார் வீட்டுக்கு..ஒரு ரெண்டு நாள் ஸ்டே பண்ண பேக் பண்ணியாச்சு..டிக்கெட் போட்டாச்சு..இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்..நீ வரீயா..இல்ல […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 23   விதியின் சதியால் காலம் உதய்யை மீண்டும் ஆரம்ப புள்ளியிலே கொண்டுவந்து நிறுத்தினாலும் நம்பிக்கை என்னும் ஒளியை மட்டும் கேடயமாய் பிடித்துக் கொண்டு மீண்டும் முயற்சிக்க ஆரம்பித்தான்.ஆறு வருடம் அனுபவம் அதற்கு இன்னும் சற்று வலுவை சேர்த்தது. ஆனால் நடந்தவை எல்லாம் அவன் நம்பிக்கையை ஆட்டம் காண செய்தது. அன்று அப்படி தான் ஒரு தயாரிப்பாளரை சந்திக்க அலுவலக வரவேற்பறையில் காத்திருந்தான் உடன் அவன் நண்பர்கள் சசியும் அருணும்.. உதய் படம் பண்ண தொடங்கிய […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 22   உதய் உடலில் ஒவ்வொரு செல்களும் ஆக்ரோஷத்திலும் ஏமாற்றத்திலும் கொந்தளிக்க அதனை எங்கே கொட்டி தீர்ப்பது என்று தெரியாமல் கையில் உள்ளதை வீசி எறிந்து கண்ணில் பட்டவற்றை எல்லாம் தள்ளிவிட்டவன் அப்படியே மடங்கி சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட அவனை உச்சக்கட்ட அதிர்ச்சியில் பார்த்து நின்றாள் உதயா. இதற்கும் முன் இத்தனை கோபத்திலும் வேகத்திலும் அவனைப் பார்த்தே இராதவளுக்கு அவனை எப்படி அணுகுவது என்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் சிலையென சமைந்து நின்ற உதயா அவன் […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 21   உணவு இடைவேளை வரையிலும் நிமிர கூட நேரம் இல்லாமல் வேலை நெட்டி முறித்தது. இத்தனை நாட்களின் விடுப்புகளுக்கு ஈடாய் வேலைகள் அணிவகுத்து நிற்க அவற்றில் மூழ்கி போன உதயாவிற்கு ஃபுட் கோர்ட் வந்தபோது தான் கணவனின் நினைவு வந்தது.  மதியம் சாம்பாரும் உடன் ஒரு பொரியலும் செய்து வைத்துவிட்டு தனக்கும் எடுத்துக் கொண்டு வந்துவிட்டாள்.இத்தனை நாட்கள் அத்தை,அண்ணியின் சமையலே ஓடியிருக்க திருமணம் முடிந்து முதன்முறையாய் இன்று தான் சமைதிருக்கிறாள். “அவசரமா சமைச்சது..நல்லா இருந்ததா […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 20   திருப்பூரில் மெல்லிய மழை சாரலாய் நிலவரம் இருக்க இங்கே சென்னையிலோ ஒரு தென்றல் புயலாகி இல்லை இல்லை ஒரு புயலே பூகம்பமாகி ஒருவனை சுழற்றி எடுக்க காத்து இருந்தது. கையில் அகப்படும் பொருட்களை எல்லாம் அவள் டங்கு டங்கு என்று வைப்பது எடுப்பதிலே அவள் கோபமாய் இருப்பது புரிய மதியம் நடந்த விஷயத்தை உதயாவும் கேட்டு இருப்பாளே என்று அப்பொழுது தான் உணர்ந்தான் அவளது அன்பு கணவன். ‘போச்சுடா…அவ அண்ணனை பத்தி சும்மா […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 19 புது வீட்டில் பால் காய்ச்சி அன்றே கிளம்ப முற்பட்டவர்களை தடுத்து இன்னும் இரண்டு நாட்கள் இருக்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டான் உதய். அது ரெண்டு படுக்கையறை கொண்ட வீடு என்பதால் பக்கத்து ஃபாளட்டை இரண்டு நாட்களுக்கு வாடகை பேசி அனைவரையும் தங்க வைத்தான் உதய். வெண்பா மணம் முடித்து சென்றபின் ஒற்றைப்பிள்ளையாய் தனிமையில் இருந்தவனுக்கு இத்தனை உறவுகள் சூழ இருப்பதே மகிழ்ச்சியை தந்தது. சென்னையில் தங்கியிருந்த இரண்டு நாட்களும் அனைவரும் குடும்பத்தோடு சென்னையின் […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 18     இரவு தாமதமாய் தூங்கினாலும் புதிய இடம் என்பதால் சீக்கிரமே விழித்துவிட்டாள் உதயா..முதல் முறை புடவை கட்டிக் கொண்டு உறங்கியதால் அவள் குத்தியிருந்த பின்களையும் மீறி அது அலங்கோலமாய் இருக்க வேகமாய் அதனை சரி செய்து கட்டிலில் இருந்து இறங்கியவள், “அய்யகோ..நம்ம கூட ஒரு ஜீவன் இருந்ததே..”  என்று வேகமாய் உதய்யை தேட குப்புறப்படுத்து இருந்தவன் முகம் இவள் பக்கம் திரும்பியிருந்தது. ஆழ்ந்த உறக்கதில் இருந்த அவன் முகத்தை கண்டவளுக்கு நேற்று அவன் […]


மனைத்தக்க மாண்புடையாள்

அத்தியாயம் 17   கண்ணாடியில் தெரியும் தன் உருவத்தையே பார்த்திருந்தாள் உதயா.மேக்கப் செய்யும் பெண்மணி தற்போது தான் அவளை அலங்கரிக்க தொடங்கி இருக்க மற்றவர்களும் திருமண மண்டபத்திருக்கே உரிய பரபரப்போடு அங்கும் இங்கும் போய் வந்தபடி இருந்தனர்.ஆனால் அவை எதுவுமே உதயாவை எட்டவில்லை.பதற்றமான மனநிலையில் இருந்தாள். இன்னும் சில மணி நேரத்தில் தான் ஒருவருக்கு சொந்தமாக போகிறோம்..அதுவும் தன்னை விரும்பாத ஒருவனுக்கு..?!தன்னை வேண்டாம் என்று சொன்ன ஒருவனையே தனக்கு அனைத்தும் என்று அவனை நம்பி வர போகிறோம்.. […]