Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Suriyanavanin Aazhkadal

சூரியனவனின் ஆழ்கடல் – 24 (1)

கடல் – 24 முத்துநகை தவறி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. நாட்கள் ராஜாத்திக்குதான் நத்தை வேகத்தில் நகர்ந்ததே தவிர மின்னொளிக்கு அவள் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்யும் வேலைகளுக்கு மின்னல் வேகத்தில் தான் நகர்ந்தது. அவர் இறந்த வீட்டில் மின்னொளியை யாரேனும் மடிதாங்கி இருந்தால் அவளின் இறுக்கங்களை தளர்த்தி கண்ணீரில் தனது துயரங்களை நிச்சயம் கரைத்திருப்பாள். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு நடக்கவே இல்லை. ராஜாத்தி உடைந்துபோய் கதறி அழுத முருகய்யனை தேற்ற முடியாமல் தவிக்க ஊரே அவரின் அழுகையில் […]


சூரியனவனின் ஆழ்கடல் – 23 (1)

கடல் – 23 முத்துநகை அறையில் காசியாத்தா புடவை தலைப்பை கையில் பிடித்துக்கொண்டு வாயை மூடியபடி அழுதுகொண்டிருக்க அவரருகே ராஜாத்தி பிடிவாதமான முகத்துடன் நின்றிருந்தாள். “என்ன ராசு இதெல்லா? நெனப்பு வேறயா இருக்கே? கூறு உள்ளவ பேசற பேச்சாடி?…” என முத்துநகை திட்ட, “நாஞ்சொல்லுததுதேன், ஆரு என்ன சொன்னாலு நா கேக்கமாட்டே…” என்று வந்ததிலிருந்து சொல்லியதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க, “நல்லாருப்பியாடி நல்லாருப்பியா? இன்னிக்கித்தேன் இத்த நெனைக்கிதியா நீயி?…” என்று சொல்லி சொல்லி ராஜாத்தியை அடிக்க அப்படியாவது […]


சூரியனவனின் ஆழ்கடல் – 23 (2)

“எம்புட்டு நாளிக்கு நா இருப்பேனாம் புள்ள? இப்பிடியே கெடக்குததுல நானே அத்து போயிருவே…” என்ற அழுகையுடனான பேச்சு மின்னொளியை உலுக்கியது. “அம்மோவ்…” என பதறியவள், “இனி இதுமேட்டிக்கி பேசாதத்தா, எனக்கு கோவமா வருது. நீயி எந்திப்ப ஆமா…” என தாயின் கண்ணீரை துடைத்துவிட்டவளின் மனது அலையலையாய் உணர்வுகள் பொங்க என்ன செய்வதென புரியாமல் அமர்ந்திருந்தாள். தாய் சொல்லவருவது புரிந்து புரியாத மாதிரி ஒரு வித உணர்வு அவளை ஆட்டுவிக்க பரிதாபமாய் தாயை பார்த்தாள். “அப்பா நீயி எந்திக்கவே […]


சூரியனவனின் ஆழ்கடல் – 22 (2)

பார்ட் – 2 அவர்கள் செல்லும் முன்பு ஆயிரம் பத்திரங்கள் சொல்லித்தான் அனுப்பினார் முருகய்யன். குணசாலியின் குடும்பத்தினர் மிக சொற்பமே வந்திருந்தனர். எட்டுபேர் மட்டும். மீண்டும் பஸில் அழைத்துசென்றுவிடுவோம் என்று நினைத்துக்கொண்டு வந்திருக்க கணேசன் வீட்டில் வேன் நிற்பதை பார்த்ததும் முழுதாக மகிழ்ந்துபோகாமல், “ஒம்மதினிக்காரி ரொம்பத்தேன் வவிசு காட்டுதா. அதுக்காங்காட்டிதேன் வண்டியமத்திருப்பா. யே பஸுல வந்தா பகுமானோ கொறையுதாக்கு?…” என்று குணசாலியிடம் கேட்க, “செத்த சும்மாத்தேன் இருங்களேன். நானே இந்த வண்டியமத்த  வம்பாடுபட்டுட்டே. சொகுசா வாராத விட்டுப்போட்டு…” […]


சூரியனவனின் ஆழ்கடல் – 22 (1)

கடல் – 22 முத்துநகை மகளுக்கு பட்டுப்பாவாடை சட்டை போட்டுவிட்டு தலைக்கு பூவை சூட்டிக்கொண்டிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கணேசனுக்கு திருமணம் ஆகியிருந்தது. முத்துநகை தான் பார்த்து முடித்து வைத்தது. வசதி வாய்ப்பு என்று எதையும் பார்க்கவில்லை. தாய் தகப்பனின்றி இப்பொழுது தானுமின்றி தனித்து இருக்கும் தம்பியை பார்த்துக்கொள்ள வேண்டி திருமணத்தை முடித்துவைத்தார். அன்று கணேசனை மறுவீட்டிற்கு அழைத்துச்செல்ல குணசாலியின் வீட்டினர் வருவதாக இருந்தது. முத்துநகை இரவு காசியாத்தா வீட்டில் தான் தங்கினார்கள் மின்னொளியும், முத்துநகையும். […]


சூரியனவனின் ஆழ்கடல் – 21

கடல் – 21 இரண்டுநாட்களாக ஓயாத வேலை அருளுக்கு. இன்னும் எதையெல்லாம் செய்ய சொல்லியிருக்கிறான் தர்மராஜ் என்று தெரியவேண்டியது இருந்தது அவனுக்கு. அதனால் தங்கள் காட்டில், தோப்பில், மாட்டு தொழுவத்தில், கிணற்றில் என ஒவ்வொரு இடமாக பரிசோதித்து காவலுக்கான ஆட்களை அதிகப்படுத்தியிருந்தவன் எவரும் எளிதில் நெருங்க முடியாதளவிற்கு சற்று கடினப்படுத்தியும் இருந்தான். மின்னொளியின் வாயில் விஷத்தை ஊற்ற இருந்தவன், தன் காட்டில் மோட்டாரை உடைக்க காசை கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்யும் அளவிற்கு சென்றிருக்கிறான் என்றால் மேலும் […]


சூரியனவனின் ஆழ்கடல் – 20

கடல் – 20 திருமணத்தின் மறுநாள் காலை உணவை முடித்துக்கொண்டு முருகய்யன் ராஜாத்தி கிளம்பிய நேரம். சுப்பு கன்னத்தில் கைவைத்து அருளை பார்த்துக்கொண்டிருக்க அவனோ எந்த உணர்ச்சியை வெளிப்படுத்தவென தெரியாமல் முகத்தை உர்ரென வைத்திருந்தான். இளவரசனின் சட்டையில் இருந்த தூசிகளை தட்டிவிட்டபடி அவனை அணைத்துக்கொண்டு மின்னொளி அவனை சமாதானம் செய்துகொண்டிருந்தாள். “வாரே சாமி, ஆத்தா வாரேன்ய்யா…” என்ற சமாதானங்கள் கூட அவனின் அழுகையை நிறுத்தவில்லை. யாரின் சமாதானமும் எடுபடவில்லை. ராஜாத்தியின் முகத்தில் அத்தனை கோபம் இன்று. லேசாய் […]


சூரியனவனின் ஆழ்கடல் – 19 (2)

அதற்குள் அன்னத்தின் வீட்டிற்கு தகவல் சொல்ல ஒரு ஆள் செல்ல மின்னொளி அவனின் வாயை வலுக்கட்டாயமாய் பிடித்துக்கொள்ள அழகுப்பாட்டி உப்பு தண்ணீர் கரைசலை அவனின் வாயில் ஊற்ற ஆரம்பித்தார். அவன் வாங்காமல் வெளியே துப்ப இப்பொழுது மின்னொளி வாங்கி ஊற்றினாள். “இவன இப்ப காப்பாத்தி என்ன செய்ய போறீகளாம்? செத்து தொலயட்டு விடவேண்டிதான?…” என அருள் கோபத்துடன் வர அவனை திரும்பி முறைத்தவள், “செத்த கம்மின்னு இருக்கீகளா?…” என அவனை மிரட்டியவள் தர்மராஜ் வயிற்றில் உள்ளவற்றை வெளியே […]


சூரியனவனின் ஆழ்கடல் – 19 (1)

கடல் – 19 அன்னத்திற்கு உறக்கம் என்பதே தூரம் போய் நான்கு நாங்கள் ஆகிவிட்டது. மனது ரணமாய் காந்திக்கொண்டிருக்க தன் மகன் கொடுத்த வேதனை அதை விட அதிகமாய் வலியை கொடுத்தது. மின்னொளி வீட்டில் பிரச்சனை செய்துவிட்டு வீட்டிற்கு வந்தவனின் முகமே சரியில்லாது இருக்க உடையும் கசங்கி அழுக்காய் இருந்ததை பார்த்து பதறியவர், “அய்யா எஞ்சாமி, எங்கைய்யாச்சும் விழுந்திட்டியா?…” என வந்து கேட்டவரை பிடித்து ஆக்ரோஷம் வந்தவனாய் தள்ளிவிட்டான் தர்மராஜ். உடலே நடுங்கிப்போனது மகனின் இந்த செயலில். […]


சூரியனவனின் ஆழ்கடல் – 18

கடல் – 18 தர்மராஜ் வீட்டிற்கு செல்லாமல் தன் நண்பர்களுடன் எப்பொழுதும் சந்திக்கும் அந்த இடத்தில் தனியாக அமர்ந்து வெறித்தபடி அமர்ந்திருந்தான். அவனை பரிதாபமாய் பார்த்தபடி கதிரேசன். மனதளவில் எப்பொழுதும் தனிமை தான். ஆனால் இது இந்த தனிமை அவனை உயிரோடு கொன்றது. எதையும் செய்ய முடியாமல், எதற்கும் லாயக்கு இல்லாதவன் நீ என்னும் பார்வையை தாங்கிக்கொண்டு, ஐயோ பாவம் இவன் என்னும் பரிதாப பேச்சை கேட்டுக்கொண்டு, தருமனா அவனுக்கு எதுவும் தெரியாதே என்னும் நக்கலும் அக்கறையும் […]