Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Unnil Uruvaana Aasaigal

உன்னில் உருவான ஆசைகள் – 16 (2)

“அது அண்ணனுக்கு கோவம், நீங்க எப்படி கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லலாம்ன்னு…” “நல்லா வந்துச்சு கோபம். நேத்து அது ஏதோ ஒரு வேகத்துல  நான் பேசினது. ஆனா அப்பவே என்னோட நினைப்பை நான் மாத்திக்கிட்டேன். இன்னைக்கு கதிர் ஆபீஸ் வரவும் எவ்வளவு சந்தோஷமா அவங்கட்ட பேச வந்தா…”  என தர்ஷனை முறைக்க அவன் திருதிருவென விழித்தான். “ஆடு திருடுனவன் மாதிரியே இருக்கு…” என தர்ஷனை சொன்னாள். “அப்ப ஒன்னும் பிரச்சனை இல்லைல. சரி நான் கிளம்பறேன்…” என்று தர்ஷன் […]


உன்னில் உருவான ஆசைகள் – 16 (1)

ஆசைகள் – 16 தாமரை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை கதிர் திடீரென்று வந்து நின்று பேசவேண்டும் என்பான் என. அலுவலகத்தின் மாடியிலேயே இருக்கும் காபி கஃபேயில் அவன் காத்திருக்க சோர்வுகள், தயக்கங்கள் எல்லாம் சென்று உற்சாகத்துடன் அவனை காண ஓடினாள். ஒருவாரம் முன்பு தான் பார்த்திருந்தாள். ஆனாலும் இப்போது அவன் தன்னை தேடி வந்ததும் பெரிய பற்றுகோல் கிடைத்துவிட்டதை போல தோன்றியது. முதலில் அத்தனை குழப்பம். அங்கையின் வீட்டிற்கு வந்தவர் பேசி சென்றதும், அதன் பின் இந்த திருமணம் […]


உன்னில் உருவான ஆசைகள் – 15

ஆசைகள் – 15 தாமரை அப்படி அமர்ந்திருப்பதை பார்க்கவே அத்தனை கஷ்டமாக இருந்தது அங்கைக்கு. “என்ன தாமரை, யாரோ எதுவோ சொன்னா இப்படியா உட்காருந்திடுவ? அம்மா தேடி வர போறாங்க…” என அவளை அவளின் மோனநிலையிலிருந்து கலைக்க நீர் படர்ந்த விழிகளுடன் நிமிர்ந்து பார்த்தாள். “எதுக்கு ஆன்ட்டி எங்களுக்கு இத்தனை கஷ்டம்? இப்படி எல்லாம் பேச்சு வாங்கி ஒரு கல்யாணம் செய்யனுமான்னு இருக்குது. என்னை பேசினவரை பொறுமையா தான் இருந்தேன். பார்த்தீங்க தானே? இதுல நிவி வரைக்கும் […]


உன்னில் உருவான ஆசைகள் – 14

ஆசைகள் – 14 இன்னும் ஏழே நாட்களில் திருமணம். ஆனால் அதை பற்றிய எந்த பயமும் சோமநாதனை பாதிக்காத அளவிற்கு நடந்திருந்தார்கள் கதிர் குடும்பத்தினர். வங்கியில் அடகு வைத்த நகையை தவிர மற்ற நகைகளும், தாமரையினுடையது, நிவேதாவினுடையது, விநாயகம் தந்த பணமும் போய் கடனுக்கு கடனும் என ஓய்ந்து போனாலும் சோமநாதன் அதை மகள்களிடமும், மனைவியிடமும் காட்டிக்கொள்ளவில்லை. ஓரளவுக்கு தன்னையும் தேற்றிக்கொண்டார். தான் இல்லாவிட்டால் தன் குடும்பத்தின் நிலை என்னாகும் என்ற பயம் மட்டுமே எஞ்சி இருந்தது […]


உன்னில் உருவான ஆசைகள் – 13

ஆசைகள் – 13           அதிகாலை நான்கரை மணி போல ராமேஸ்வரத்தில் இருந்து வீடு திரும்பி இருந்தார்கள் தாமரையின் குடும்பத்தினர். வீட்டின் கதவில் சாவி துவாரத்தில் கையை வைக்கவும் கதவு அப்படியே பின்னால் சாய்ந்தது. அந்த சத்தத்தில் பயந்து பின்னே நகர்ந்தவர்களுக்கு ஒரு நொடி என்ன நடந்தது என விழி பிதுங்கி நிற்க, “ஐயோ நகைங்க…” என கதவின் மேலே ஏறி ஓடி சென்றார் சரளா. சோமநாதனுக்கு நெஞ்சே நின்றுவிடும் போல ஆனது. அங்கேயே நின்றுவிட்டார் அவர். […]


உன்னில் உருவான ஆசைகள் – 12

ஆசைகள் – 12 “ஹாய்…” என்று வந்தவனை பார்த்ததும் சிரித்தபடி வந்த தாமரை யமுனாவிடம் வந்து நின்றாள். “நல்லா இருக்கீங்களா ஆன்ட்டி?…” என கேட்க, “ஆன்ட்டி நல்லாவே இல்லை…” என்றார் யமுனா சிரித்தபடி. அவர் எதை சொல்கிறார் என தாமரைக்கு புரியாமல் விழிக்க பின் சரளா தான் மகளின் கையை கிள்ளி, “அத்தை சொல்லு தாமரை. அண்ணி அதான் சொல்றாங்க…” என்றார். “ஓஹ், ஸாரி, அத்தை எப்படி இருக்கீங்க?…” என்றாள் அவரிடத்தில் உடனே மாற்றிக்கொண்டு. “அமோகமா இருக்கேன். […]


உன்னில் உருவான ஆசைகள் – 11

ஆசைகள் – 11 அந்த வார இறுதியில் சென்று மண்டபம் பார்த்துவிட்டு வந்தனர் கதிர் தாமரை குடும்பத்தினர். அன்றே இன்விடேஷன் கார்ட் செலெக்ட் செய்து ஆடர் குடுத்துவிட்டு வந்தும்விட்டார்கள். இன்னும் நான்கே வாரங்கள் இடையில் இருக்க இதற்குள் புடவை எடுக்கும் வேலைகள், அனைவருக்கும் புது துணிகள் என்று எடுக்கவேண்டும் என அன்றே மண்டபத்தில் வைத்து அமர்ந்து பேசிமுடிவு செய்தார்கள். மறுநாள் முகூர்த்த உடைகள் எடுக்க செல்ல வேண்டும். அன்றே திருமாங்கல்யமும் எடுக்கவேண்டும் என்பதால் மகனுக்கு முன்பே சொல்லவேண்டும் […]


உன்னில் உருவான ஆசைகள் – 10 (3)

அதாவது மகள்களுக்கு என்று செய்துள்ள நகையே பெருமதிப்பை தர  சரளாவிற்கு ஓரளவுக்கு தனியேவும் வைத்திருந்தனர். “ரொம்ப நல்லது. நிவியோட ஜ்வேல்ஸ் அப்படியே இருக்கட்டும். என்னோட ஜெவேல்ஸ்ல எனக்கு போடறதா இருக்கற நகையில பாதி போட்டா போதும்…” என்றாள் தாமரை. “என்ன விளையாடறியா நீ? எங்களை என்னன்னு நினைப்பாங்க மாப்பிள்ளை வீட்டுல. உன்னை மதிப்பா நாங்க குடுக்கனும்னு நினைக்கறோம். நீ என்னன்னா இப்படி பேசற?…”என கோபமாகிவிட்டார் சோமநாதன். “இப்பவும் அவங்களா எதுவும் கேட்கலையேப்பா. எனக்கு தெரிஞ்சு அவங்க அப்படி […]


உன்னில் உருவான ஆசைகள் – 10 (2)

“எனக்கு சந்தோஷம் இல்லைன்னு யார் சொன்னா? அதெல்லாம் சந்தோஷம் தான். ஆனா அதுக்காக அப்பாவே எல்லாம் பார்க்கட்டும் விட்டுட்டு இருக்க முடியுமா? என்னதான் எல்லாம் அவங்க பார்க்கறதா இருந்தாலும் நம்ம கையில கணிசமா பணம் வச்சுக்கனும்மா….” என சொல்லியவள், “நம்மக்கிட்ட வர செலவு ஒன்னொண்ணுக்கும் அவங்களை கை காமிச்சா நமக்கு என்ன மரியாதை? அப்பாவை அப்படி இருக்க சொல்றீங்களா?…” என்றாள். “ச்சே ச்சே தாமரை அவங்க ரொம்ப நல்லவங்கடா. உன் மாமாவுக்கு கூட ரொம்ப திருப்தி. மண்டபம் […]


உன்னில் உருவான ஆசைகள் – 10 (1)

ஆசைகள் – 10 வந்தவர்கள் விருந்து சாப்பிட்டு முடிந்து தேதிகள் குறிக்கப்பட்டு என பரபரவென்று நடந்துவிட்டது அன்றைய மாப்பிள்ளை வீடு பார்க்கும் வைபவம். தாமரையின் தாய்மாமனுக்கு அத்தனை நிறைவு. அவரின் மனைவிக்கு யமுனாவையும் அந்த குடும்பத்தையும் பிடித்துவிட்டது. வங்கியில் மேனேஜராக இருப்பவர்கள். தொழில்துறை பற்றி அறிந்திருந்தவர். கதிர் உழைப்பு, அந்த ட்ராவல்ஸின் ஆரம்பத்தில் இருந்து தற்போதைய வளர்ச்சி வரை ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறார் தான். இப்போது தாமரைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை என்றதும் அவர் பங்கிற்கு அவரும் கதிர், அவனின் […]