Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-18

அத்தியாயம்-18 ஒரு வாரம் கடந்திருந்தது..ராஜா இவளுடன் பேசுவதில்லை..இவளே சென்று வம்பு செய்தாலும், ஒரு முறைப்புடன் கடந்து விடுவான்.. அதுவும் மரகதம் முன்பு இப்படி நடந்தால், அவனை திட்ட ஆரம்பித்து விடுவார்.எனவே, அவர் முன்பு வம்பு செய்ய மாட்டாள்.. ‘இந்த வரு ரொம்ப தான் பண்ணுறார்..என்ன பண்ணலாம்..??’ தீவிர சிந்தனையோடு கூடத்தில் அமர்ந்திருந்தாள்.. மாடியில் இருந்து ராஜா இறங்கி வந்தான்.. “இந்த மாமனோட மனசு மல்லிகைப்பூ போலே பொன்னானது..!! இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூச்சூடுது.!!.” […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-17

அத்தியாயம்-17 இரண்டு நாளாய் தீவிர யோசனையில் இருந்தாள் மது. “என்ன கண்ணு,ஒரு மாதிரியா இருக்க??” “ஒண்ணும் இல்ல அத்தை.. அகலை இன்னும் காணுமுன்னு யோசிச்சுட்டு இருந்தேன்..” அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போது உள்ளே நுழைந்தாள் அகல்.. “வாடி, உன்னை தான் உன்ற அண்ணி தேடுறா.. என்னன்னு கேளு..??” “என்ன அண்ணி??” “வர்ற வெள்ளிக்கிழமை, மலைக்கோவிலுக்கு போவோம் வரியா அகல்..??” “வெள்ளியா??இன்னிக்கு நாளைக்குன்னா போலாம் அண்ணி..வெள்ளி வர முடியாது.. நாளைக்கு போவோமா அண்ணி..??” “ஹ்ம்ம்..இல்ல அகல்..வெள்ளிக்கிழமை என் பிறந்த […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-16

அத்தியாயம்-16 வானில், குளிர் நிலவு பவனி வந்து கொண்டிருந்தது..மொட்டை மாடி கை பிடி சுவரில் சாய்ந்து நின்று, அதை வெறித்துக் கொண்டிருந்தாள் மது.. மனதுக்குள் பல எண்ண அலைகள்.. பின்னால் ஆள் வரும் அரவம் கேட்டு திரும்பி பார்த்தாள்..ராஜா வந்து கொண்டிருந்தான்.. “தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க??” “தூக்கம் வரல..அதான்..” “ஓ..மதி, நான் கேட்குறதுக்கு  சரியா பதில் சொல்லு..” “எ.. என்ன கேட்க போறீங்க..??” “நீ, என் கிட்ட இருந்து எதையாவது மறைக்குறியா??” “நான், என்ன மறைக்க […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-15

அத்தியாயம்-15 அன்று காலையிலேயே, ராஜாவும் பாண்டியும், டவுனுக்கு உரம் வாங்க,மற்றும் இன்னும் சில வேலைகளுக்காக கிளம்பினார்கள்.. அகலும், அவள் மாமியாரின் மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்கு  மருத்துவமனை செல்வதாகவும், அன்று வரமாட்டேன் என்றும், கூறிவிட்டு சென்றிருந்தாள்.. இன்று தான் சரியான நாள் என்று முடிவெடுத்த மது, பழனிக்கு அழைத்து, இன்று காலை வருவதாய் கூறி இருந்தாள்.. ராஜாவும் பாண்டியும் கிளம்பி சென்றதும், கீழே இறங்கி வந்தவள், “அத்தை, நான் அய்யனார் கோவில் வரை போய்ட்டு வர்றேன்..” “என்ன கண்ணு […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-14

  அத்தியாயம்-14 அவள் கண்ணில் பயத்தை பார்த்ததும்,இவன் கண்ணில் வெற்றிக் குறி.. அவள் திகைத்து நிற்கையில், அவள் கையில் இருந்த அலைபேசியை பறித்தான்.. “ஏய்,என்ன பண்ணுற??” அவள் அதிர்வை கண்டுகொள்ளாமல்,அவள் அலைபேசியில் இருந்து இவன் எண்ணுக்கு அழைப்பு விடுத்தான்.. பிறகு அதை, அவள் கையில் கொடுத்து விட்டு, “இதான் கண்ணு என் நம்பர்.. இனி, அடிக்கடி பேச வேண்டி இருக்கும்,சேமிச்சு வச்சுக்கோ..” “இங்க பாருங்க பழனி..இதெல்லாம் நல்லா இல்ல..ராஜாக்கு தெரிஞ்சா, என்னாகும் தெரியுமா??” “ஓ..அவன் கிட்ட சொல்லுவியா??சொல்லேன்..அப்புறம் […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-13

அத்தியாயம்-13 அந்த கவரை வெறித்த படி நின்றான் ராஜா..மதுவை   விரும்புவதை அவன் அறிந்து கொள்ளுவதற்கு முன்பு, அவளை பற்றி தெரிந்து கொள்ள, துப்பறியும் நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசினான்.. அவர்கள், அறிக்கை தயார் என்று சொல்லவும்,அதை வாங்கி வர பாண்டியை அனுப்பினான்..பாண்டிக்கே அது என்னவென்று தெரியாது..இப்பொழுது,அதை பிரித்து பார்க்க அவன் மனம் விரும்பவில்லை . அதில் மதுவுக்கு எதிராக கடுகு அளவு செய்தி இருந்தாலும்,அவனால் ஏற்று கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.. அந்த கவரை, அவன் துணிகளுக்கு […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-12

  அத்தியாயம்-12 வயலில் நடவு வேலை நடந்து கொண்டிருந்தது..அவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டு, நின்று கொண்டிருந்தான் ராஜா.. உணவை கொண்டு வந்து தோப்பு வீட்டுக்குள் வைத்து விட்டு, இவனை நெருங்கிய வேலை ஆள், “சின்னையா,சின்னம்மா வர்றேனாக.. வந்து பரிமாறுறேன்னு சொன்னாங்க..” “அகலா??சரி போ..” ‘இந்த வெயில்ல எதுக்கு வரா??’ யோசனையோடு நின்றான்..கார் வரும் ஒலியில் திரும்பினான்..காரில் இருந்து மதுவும், அகலும் இறங்கினார்கள்.. ‘இவ எதுக்கு வர்றா??’ இருவரும் அவனை நெருங்கி இருந்தார்கள்.. “வா ண்ணா சாப்பிடலாம்..” “இந்த […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-11

அத்தியாயம்-11 நீண்ட தூர பயணம்,ஒரு நாள் முழுதும் ஏதும் சாப்பிடாத களைப்பு,அதோடு நேத்து ஏற்பட்ட அனுபவத்தில்,உடல் மனம் இரண்டுக்கும் ஏற்பட்ட பதைபதைப்பு,இப்படி பல காரணங்கள் சேர்ந்து, மதுவை காய்ச்சலில் தள்ளி இருந்தது.. தூக்கத்தில் இருந்தவளுக்கு, எழுந்து கொள்ள கூட முடியாத  உடல் வலி..சோர்வு.. பேச்சி வந்து பார்க்கும் வரை அனத்திக் கொண்டு படுத்திருந்தாள்.. மருத்துவச்சியுடன் வீட்டிற்கு வந்தான் ராஜா.. அவளை சோதித்த மருத்துவச்சி, “புள்ள பயந்துருக்கு.. அதான் காச்சலை கிளப்பி விட்ருச்சு.. கை, கால் எல்லாம் சிராய்ச்சு […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-10

அத்தியாயம்-10 அவன் கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டை அடியாய் வந்து விழுந்தது..நிற்க வைத்து கேள்வி கேட்பது என்பது இது தான் போல.. “சொல்லு,இங்க வந்துட்டு, நீ சுடிதார் தவிர வேற ட்ரஸ் போட்டு பார்க்கல..வீட்டை விட்டு வெளிய சுத்தி பார்க்க போனும்னு சொல்லல,அம்மா கூட சமையல் அறையில இருந்து சமையல் கத்துக்குற..பொறுப்பா. அதுவும் எனக்கு பிடிச்சதை, பார்த்து பார்த்து செய்யுற..நான் எங்க போனாலும்,உன் பார்வை என்னையே சுத்துது ஏன்??” ‘அவன் கேட்பது நியாயம் தானே,அவன் காட்டிய புகைப்படம் ஒன்றில் […]

Readmore

உயிர் நிறைகிறேன் அழகா-9

  அத்தியாயம்-9 மாடுகள் வளர்ப்பு பற்றிய பழனியின் சந்தேகங்களை தீர்த்து வைத்தான்.. “இங்க பாரு பழனி, நாட்டு மாடுன்னா மூணு வருஷத்துக்கு ஒருக்கா தான் கன்னு போடும்..ரெண்டு வருஷம் பால் கொடுக்கும்.. அப்புறம் கிடைக்கு போய்ட்டு வந்து கன்னு போட, ஒன்பது மாசம் ஒன்பது நாள்.. இதான் கலப்பு மாட்டுக்குக்கும் பிரசவ கணக்கு.. ஆனா கலப்பு மாடு, வருஷம் ஒரு கன்னு போடும்.. கன்னு போட்டு மூணு மாசத்துல சினைக்கு ஊசி போடலாம்..” “அதான் கன்னு போட […]

Readmore