Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நூதன கீர்த்தனங்கள் – 11 (3)

“என்ன இசை?…” “ஹாங், இல்ல மருந்து போட்டுட்டு புடவையே கட்டிக்கவா? நாளைக்கு சுடிதார் வேணா எடுத்துட்டு வாங்க. நைட் அதை போட்டுக்கறேன்…” “நோ, காயம் ஆறும் வரைக்கும் நைட்டி தான். நீ ரூம்க்குள்ளையே இரு. வீட்டுக்குள்ள யாரும் வரமாட்டாங்க. அந்த செண்பகம் அக்கா தவிர. தொந்தரவு கிடையாது…” “கண்டிப்பா போடனுமா?…” “ப்ச், காயம் ஆறனும் இசை. இல்லைன்னா இதுவே உனக்கு காய்ச்சலை குறைய விடாது…” அவன் குரலில் படபடப்பு கூடியது. கேட்கமாட்டாளோ என்று மீண்டும் கோபத்தை அவன் […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 11 (2)

அப்போதும் அவள் பதில் பேசாமல் அசட்டையாய் இருக்க வேகமாய் வந்தவன் அந்த பேப்பரை பிடுங்கினான். “உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன். வாயை திறப்பேனாங்கற?…” “பின்ன, எரிஞ்சு எரிஞ்சு விழறீங்க. என்ன பதில் சொல்ல?…” என்றவள், “அதை குடுங்க. மாத்திரை போடனும். அதுக்கு தான் பார்த்துட்டு இருந்தேன்…” குரல் சோர்ந்துபோய் பேசவே முடியவில்லை இசைக்கு. லேசாய் தலை வேறு ஆடியபடி இருக்க, “என்ன இன்னும் ஒருமாதிரி இருக்க?…” என்றவன் நெற்றியில் கை வைத்தான். “ப்ச், விடுங்க…” என்றாள். “இசை…” […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 11 (1)

இசை – 11         அவன் அதட்டலில் ஒருவருக்கும் எதிர்த்து கேட்க முடியவில்லை. எதற்கு இத்தனை கோபம்? யார் மீது? என எதுவும் தெரியவில்லை. ஆனால் வெடித்துக்கொண்டு நிற்பவனிடம் என்ன கேட்க? சுந்தரி மாணிக்கத்தை பார்த்து பேச வேண்டாம் என தலையசைத்துவிட்டார். “இன்னும் என்ன என் முகத்தை பார்த்துட்டு? காதுல விழலையா இசை?…”என்றான் மீண்டும். “ஹ்ம்ம், இதோ போறேன்…” “எங்க?…” “ரூம்க்கு தான்…” “உன்னை சாப்பிட போக சொன்னேன்…” என்று படுத்தினான் அவளை. “ஏன்டா இவ்வளவு கோவம்? […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 10 (2)

“ரெண்டு நாள்ல பீவர் சரியாகலைன்னா திரும்ப கூட்டிட்டு வாங்க. பிளட் டெஸ்ட் எடுக்கலாம். இப்ப அவசியமில்லை….” என்றவர், “இங்க பாரும்மா கண்ட மருந்தையும் இப்படி காயத்துக்கு போட கூடாது. அதுமாதிரி எதுவும் போடாமலும் விட கூடாது. உனக்கு தான் கஷ்டம். எப்படி இத்தனை நாள் இந்த காயத்தோட வலியோட இருந்த?…” என்றார் ஆச்சர்யமாக. கீர்த்தனன் இசையை முறைத்தான். அவள் என்ன பதில் சொல்லவென்று யோசிக்க, “உங்கம்மா அடுத்து இங்க வரப்போ பார்க்கனும் நான். சுந்தரிட்ட சொல்லி வைக்கறேன்…” […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 10 (1)

இசை – 10             கீர்த்தனன் சட்டையின் கையை மடித்துவிட்டபடி சுந்தரியை முறைத்துக்கொண்டு இருந்தான். “அப்ப என் பேச்சை கேட்க முடியாதா?…” “எதுக்காக இவ்வளவு அவசரமா வந்திருக்கோம்ன்னு தெரிஞ்சுமா இப்படி சொல்றீங்க?…” “ஒரு மூணு நாள் தானே? ஏன் கேட்கமாட்டியா?…” “ம்மா…” “ப்ச், முதல்ல ரெண்டுபேரும் நிறுத்துங்க…” என்ற இசையின் சத்தத்தில் பேச்சை நிறுத்திவிட்டு அவளை பார்த்தனர். “எதுக்கு இந்த சண்டை?…” என்றாள் அவள். “ப்ச், அதெதுக்கு இப்போ? கிளம்பிட்ட தானே? வா…” என்று முன்னால் நடக்க, […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 9 (1)

இசை – 9 எளிமையாக ஒரு மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் பயணம் துவங்க இந்த முறையும் மாணிக்கம் பின்னால் அமர்ந்துகொண்டார் பேத்தியுடன். “மாமா…” என்றவளின் சத்தம் கேட்காததை போல அவர் தனது மொபைலில் பேத்தியுடன் எதையோ பார்த்தபடி வந்தார். “உட்கார் இசக்கி. கொஞ்ச நேரத்துல திரும்ப தூங்கிருவார் உன் மாமா…” சுந்தரி சொல்ல, “இவ்வளோ நேரம் தூங்க தான செஞ்சாங்க? அப்பறம் என்ன?…” இசையும் விடாமல் கேட்க, “அவரை பத்தி தெரியாதா என்ன? தூக்கம் வரனும்னு […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 9 (2)

திடுக்கிட்ட இசை பின்னால் இருப்பவர்களை கவனித்துவிட்டு வேகமாய் திரும்பிக்கொண்டு கீர்த்தனனை பார்த்தாள். “ம்மா, போனதும் கஷாயம் வைங்க. இவளுக்கு காய்ச்சல் லைட்டா இருக்கு…” என்றான் அவளின் பதட்டத்தை கவனியாமல். மகன் என்ன சொல்கிறான் என்பதை கூட முழுதாய் புரிந்துகொள்ள முடியாமல் மந்திரித்துவிட்டதை போல தான் பார்த்திருந்தார்கள் பெற்றோர்கள். “ம்மா…” மீண்டும் அழுத்தி அழைக்கவும் தான், “கூப்பிட்டியா கீர்த்தி…” என்றார் சுந்தரி. “ப்ச், என்ன கனவா கண்டுட்டு இருக்கீங்க? இவளுக்கு ஏசி, இந்த ட்ராவல் ஒத்துக்கலை. காய்ச்சல் அடிக்குது […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 8 (2)

பேசிக்கொண்டே அவர்கள் வீட்டிற்கு வந்தவன் சென்னைக்கு வரும்படியும் அழைப்பு விடுத்திருக்க இசையின் குடும்பத்தினர் அகமகிழ்ந்து போனார்கள். விரைவில் நல்லநாள் பார்த்து அங்கே புறப்பட்டு வருவதாக சொல்லி பேசிக்கொண்டிருக்க இசையும் வந்துவிட்டாள் குழந்தையுடன். காலை உணவு தடபுடலாக ஏற்பாடு செய்ய இருக்க சைவம் போதும் என்றிருந்தான் கீர்த்தனன். அதில் ஏக வருத்தம். காலையே கறி எடுத்துவந்திருக்க அதனை செய்யமுடியாது போன வருத்தத்தை முகத்தில் காண்பிக்க, “நிஜமாவே சைவம் போதும் மாமா. நான் ட்ரைவ் பண்ணிட்டு போகனும். அதுக்காக தான் […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 8 (1)

இசை – 8           காலை இசை அவனுக்கு முன்பாகவே எழுந்து கிளம்பி வெளியேறியிருக்க கீர்த்தனனும் விழித்துவிட்டான் அவள் தாண்டி செல்லும் அரவத்தில். கீழே அந்த நேரத்திலேயே வாசல் தெளிக்கும் சப்தங்களும் பேச்சுக்களும் மாடியின் கூடத்தில் வந்து அவன் நிற்கவுமே கேட்டது. விளக்குகளை எல்லாம் ஒளிரவிட்டே சென்றிருந்தாள் இசை. கீர்த்தனன் வந்து எட்டி பார்த்துவிட்டு குளித்து கீழே வர சுந்தரி ராக்குவிடம் பேசிக்கொண்டு இருந்தார். இசையை பார்வையால் தேடியவன் வந்து அமர்ந்ததும் சுந்தரி டீ எடுத்து தர […]

Readmore

நூதன கீர்த்தனங்கள் – 7 (2)

“என் ரூம்ல இசக்கி தூங்க வச்சிட்டு இருக்கா…” “ஓஹ்…” என்றவன் எதுவும் பேசாமல் மாடிக்கு சென்றுவிட அரசி விழித்துக்கொண்டு இருந்தாள். “கூறுகெட்டவளே அப்பவே போயிருக்க வேண்டியது தானே? இனி என்னத்த பண்ண?…” என ராக்கு மகளை திட்ட, “அவ என்ன செய்வா? நான் தான் பேச்சுக்குடுத்தேன். நீ சும்மா இரு ராக்கு…” என்றார் சுந்தரி. “இப்ப என்ன பன்றது மதினி?…” “ஒன்னும் பண்ண வேண்டாம். விடுங்க…” என்ற சுந்தரி, “இசக்கியை அனுப்பு மேல…” “நல்ல நேரம்…” “இனி […]

Readmore