Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உறவு ராகமிதுவோ – 6 (2)

பற்றிக்கொண்டு வந்தது ராம்நாத்திற்கு. ‘இவ வயித்துல பிறக்காதப்பவே இந்த போடா? உண்மை தெரிஞ்சா இருக்கு எல்லாருக்கும்.’ என இளக்காரமாய் இருவரையும் பார்த்துவிட்டு வெளியேறினார் ராம்நாத். அவரின் கார் கிளம்பி சென்றதும் தான் கௌசல்யாவின் இறுக்கம் உடலில் தளர, முகத்தில் தீரா துயரம். “ம்மா…” என்ற கௌரவ்வின் அழைப்பில் நிமிர்ந்தவர், “அது ஒண்ணுமில்லை கௌரவ். நீ சாப்பிட்டியா?…” என்றார் மகனிடம். “ம்ஹூம்….” என்று அவன் தலையசைக்க, “இவ்வளோ நேரமா பசியோடவா இருந்த? வா சாப்பிட்டு…” என சோர்வுடன் கூறினாலும் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 6 (1)

ராகம் – 6             பஸ் டிப்போவில் எஃப்சி முடிந்து வந்த பேருந்துகளை எல்லாம் கணக்கில் வைத்துவிட்டு அடுத்து அனுப்பவேண்டிய வாகனங்கள் எதுவென்று மேனேஜரிடம் விவாதித்துக்கொண்டிருந்தான் கௌரவ். “டூரிஸ்ட் வீகிள்ஸ் எல்லாம் பிராப்பரா இருக்கா? அதுல என்னென்ன வண்டி எஃப்சி போகனும்?…” என தன் முன்னிருந்த கணினியில் பார்த்துவிட்டு கேட்க, அதற்கு மேனேஜர் பதில் கூறிக்கொண்டிருக்கையில் கௌரவ்வின் எண்ணிற்கு அழைப்பு. ஆகர்ஷன் தான் அழைத்திருந்தான் அந்தநேரம். மணியை பார்த்தான். இரண்டே முக்கால் என்றிருந்தது. “ஓகே, போங்க…” என்று […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (4)

“அப்படித்தான் பேசுவேன். என்னை என்ன இளிச்சவாயன்னு நினைச்சியா? அந்த குடும்பம் பொண்ணு பார்த்து, என் பிள்ளைக்கு நான் கல்யாணம் பன்றதா? இனிமே இந்த பேச்சு வந்துச்சு அவ்வளோ தான். நான் மனுஷனா இருக்கமாட்டேன். அந்த டாக்டரை முடிக்க கூட யோசிக்கமாட்டேன்…” என ராம்நாத் கூற, “போதும் நிறுத்துங்க….” என்ற கௌசல்யாவின் உடலெல்லாம் நடுங்கியது. ஆகர்ஷன் முகம் மனதினுள் மின்ன, அந்த புன்னகை முகம் தோன்றவுமே கதறிவிட்டார் கௌசல்யா. அத்தனை அழுது கரைந்தவரை பார்த்த ராம்நாத்திடத்தில் கொஞ்சமும் இரக்கமில்லை. […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (3)

நுழையும்பொழுதே வீட்டின் ஒருவரும் இல்லை என்பதும் தெரிந்தது. கௌசல்யாவை பார்த்துக்கொண்டே வந்தவர் கையை கழுவிவிட்டு வந்தமர்ந்தார் உணவுண்ண. என்றைக்கும் போல என்று நினையாமல் கௌசல்யாவின் மனதில் ஷ்யாமளா கூறியதன் விஷயம் யோசனையாய் ஓடியது. இதனை கௌரவ்வை வைத்துக்கொண்டு பேசலாமா வேண்டாமா என பல்வேறு சிந்தனை. “நினைப்பெல்லாம் எங்க இருக்கு உனக்கு?…” கடினமாய் ராம்நாத்தின் குரல். “இல்ல, இல்லைங்க…” என்று பதறியவர் அவருக்கு பரிமாற, ஒருவார்த்தை கேட்கவில்லை உண்டுவிட்டாயா என்று. அதனை கௌசல்யாவின் மனமும் எதிர்பார்க்கவில்லை. ராம்நாத்தின் பேச்சுக்கள் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (2)

“ஹாய் ஆன்ட்டி…” என்று அவளுமே புன்னகைக்க, “என்ன நிலா எப்படி இருக்க? உன்னை பார்த்தும் ரொம்பநாள் ஆகிடுச்சு…” ஷ்யாமளா கேட்க, “இதோ பார்த்தாச்சே. நீங்க என்னயா இங்க ட்ரெய்னிங் கிளாஸ் எடுக்க கூப்பிட்டீங்க? சாவிக்குட்டியை தானே…” என்று கண் சிமிட்டி புன்னகைத்தாள் அவளும். “உன்கிட்ட பேசினா முடியுமா?…” என்றவர், “உட்காருங்க சாவித்ரிம்மா…” என்று அவரையும் அமர வைத்து, ஷ்யாமளாவும் அவரிடம் அவர் ரிப்போர்ட்டை நீட்டினார். “பிபி லெவல் அதிகமாகியிருக்கு. அது தான் இந்த மயக்கம்….” என்று அவரின் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 5 (1)

ராகம் – 5           கௌரவ் புன்னகையுடன் நிமிரவும் வெண்ணிலாவின் பார்வை கண்களுக்குள் பதிய, லேசாய் புருவம் சுருக்கியவன் விழிகள் மாற்றம் பெரும்முன் லிப்ட் மூடிக்கொண்டது. “ப்பாஹ், பார்த்துட்டோமாம். பெரிய இவரு….” என்று தலையை உலுக்கிக்கொண்டு சென்றாள் வெண்ணிலா. மேல்தளம் வரவும் கௌரவ்வும் இறங்கி ஷ்யாமளாவின் அறை நோக்கி நடந்தான். கையில் இருந்த மோதிரத்தினை மீண்டும் கார் சாவியின் தொகுப்பில் இணைத்தவன் முகம் இன்னுமே புன்னகையை குறைக்கவில்லை. “செயின்ல கோர்த்து கழுத்துல போட்டுக்கோ கௌரவ்…”  என ஆகர்ஷனுமே […]

Readmore

உறவு ராகமிதுவோ – 4 (2)

மணமகனின் பெற்றோர் அவர் அதட்டியதில் அமர்ந்துவிட குமரனுக்கு பயம் பிடித்தது. “டப்பிங் எங்க நிலாவோட ஹாபி மட்டுமில்லை, அவ பேஷனும் கூட. வாய்ஸ் ஆர்ட்டிஸ்டா அவளோட அந்த ஜாபை ரொம்ப ரசிச்சு, மத்தவங்களும் ரசிக்கும்படி செய்யறா. அதை அவ விடமாட்டா…” என்றார் முதல் வெடியாக. அவர்கள் இது என்ன என்று திகைப்பும், அதிர்வுமாய் பார்த்தனர் சாவித்ரியை. “அன்ட் அவளோட ஜாப், பேஷன், ஹாபி சொல்லிட்டேன். ஆனா முக்கியமான விஷயம் சொல்லாம விட்டுட்டோம்….” என்றவர் குமரனை பார்த்துவிட்டு, “என் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 4 (1)

ராகம் – 4          சென்னைக்கு கிளம்ப ஆயத்தமாகியிருந்தார் சாவித்ரி. கோலார் வந்து  சுனந்தாவின் திருமணமும் முடிந்து இருநாட்களாகிவிட்டது. வெண்ணிலாவிற்குமே வேலைகள் இல்லை என்பதனால் அவருடன் அங்கே தான் இருந்தாள். அவளுமே அவளின் உடைமைகள் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு சற்றுநேரம் உறங்கி வருகிறேன் என சென்றிருக்க இதோ குமரன் தேடி வந்துவிட்டார். “வா குமரா…” அவரை பார்த்ததும் சாவித்ரி அழைக்க, “புறப்பட்டாச்சா சின்னம்மா?…” என அவர் எடுத்து வைத்துக்கொண்டிருப்பதை பார்த்து கேட்டார். “ஆமாப்பா, என்னை அனுப்பிட்டு நிலாவும் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 3 (3)

இத்தனை இருந்தும் உடல்நிலை மட்டும் தேறவில்லை. இன்னுமே அதே ஒடிசலான தேகம். பெற்ற மகன் அருகில் பார்க்க கிடைத்தும் அவரின் ஆன்மம் அமைதி பெறவில்லை. தன் பார்வையிலிருந்து மறைந்த தாயை பற்றிய எண்ணங்களுடன் சோபாவிலேயே அமர்ந்துகொண்டான் கௌரவ். ———————————— “நாளை மறுநாள் கல்யாணம். அதுக்கடுத்து பேமிலி, குழந்தைன்னு எல்லாத்துக்கும் எங்கப்பாட்ட பர்மிஷன் கேட்டு நிக்கிற மாதிரி, புருஷன்கிட்ட கேட்டு நிக்கனும். என்ன வாழ்க்கைடா சாமி?…” என்று சுனந்தா வெண்ணிலாவிடம் புலம்பிக்கொண்டிருந்தாள். இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொண்டிருக்க அவளின் […]

Readmore

உறவு ராகமிதுவோ – 3 (2)

“ஆமாமா, குழந்தை திட்டறது தெரியாம, உனக்கு ரைம்ஸ் சொல்ல வேற நேரங்காலமே இல்லையான்னு காமெடி பண்ணிட்டிருந்தாரே மிஸ்டர் வீரபாகு. இதுல இதெல்லாம் என்கிட்ட வச்சுக்காதன்னு வேற ஒரு மிரட்டல். பேசாம பேரை ராம்நாத்க்கு பதிலா வீரபாகுன்னு மாத்திருங்க…” என்று கூறிய பிரத்யூக்ஷா, “எப்ப பாரு என் பிள்ளையோட, என்னோட மல்லுக்கு நிக்கிறது. இந்ததடவை நேர்ல சிக்காம தப்பிச்சிட்டார். அடுத்து நானே தேடி போறேன்…” என்று பல்லை கடித்துக்கொண்டு கூற, “ப்ச், பிரத்யூ…” ஆகர்ஷன் அதட்டினான். “ஓகே, காம் […]

Readmore