Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் வாசல் வருவாயா? – 01(1)

அரைமணி நேரம் கண்ணை மூடியவனுக்குள் ஆயிரம் எண்ணங்கள் வந்து போக பட்டென்று எழுந்து விட்டான். “என்னாச்சு சார்..?” என்றார் அந்த காவலர். “வாங்க, வெளிய போய் பேசிப் பார்ப்போம். எஸ்.ஐ எங்க..?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே வெளியே வந்தான். ‘இவரை புரிஞ்சிக்கவே முடியலையே’ என்று குழம்பியபடி உடன் சென்றார் அந்த காவலர். ஆண்களும், பெண்களுமாய் அந்த ஊர் மக்களில் முக்கால்வாசிப் பேர் அங்கு தான் அமர்ந்திருந்தனர். “சார், சாவகாசமாய் தூங்கி எந்திருச்சு வர்ற மாதிரி தெரியுது? […]

Readmore

என் வாசல் வருவாயா? – 01

வாசல் 1: என்றும் இல்லாத திருநாளாய் அன்று விரைவாகவே விழிப்பு வந்திருந்தது மகதிக்கு. கொட்டாவியுடன் சோம்பல் முறித்தவள் அருகில் இருந்தவளை திரும்பிப் பார்த்தாள். எப்பொழுதும் அவளுக்கு முன்பாகவே எழுந்து விடுபவள் இன்று ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். அவள் இப்படி தூங்கி பல நாட்கள் ஆகிறது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மகதி. தூங்கிக் கொண்டிருப்பவளின் செல்லத் தங்கை தான் மகதி. கல்லூரியில் முதல் வருடம் சேர்ந்திருக்கிறாள். மகதிக்கு அக்கா தீராநதி என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் வெளியே காட்டிக் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 26 (நிறைவு ) 1

துணை 26: எவ்வளவு தாமதமாக உறங்கினாலும், அதிகாலையிலேயே விழிப்பு வந்தது வராஹினிக்கு. மிதிலாவின் திருமண நினைப்பு மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்ததாலோ என்னவோ, சீக்கிரமே எழுந்து விட்டிருந்தாள். எழுவதற்கு முயற்சி செய்தாள் அவ்வளவே..! அர்ஜூன் தான் அவளை விடாமல் இறுகி அணைத்துக் கொண்டு படுத்திருந்தானே..! எங்கிருந்து அவள் எழுந்து கொள்வது. “யோவ் வாத்தி..! இம்புட்டு லவ்வையும் மனசுக்குள்ள வச்சுகிட்டு என்னம்மா சீன் போட்ட நீ..? உன்னோட முறைப்பு என்ன? உன்னோட விறைப்பு என்ன..? உன்னோட கோபமென்ன..? ஆனா இப்ப […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 25

துணை 25: கார்த்திகேயன் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, வெளியில் இருந்து வந்த ரஞ்சன், வந்த வேகத்தில் கோபமாய் கத்தத் தொடங்கினான். விஷயம் என்னவென்று புரியாத கார்த்திகேயனும், சுமித்ராவும் புரியாத பார்வை பார்த்துக் கொண்டிருக்க, விஷயம் புரிந்த ரூபிணியோ அவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளின் அந்த போக்கு அவனின் கோபத்தை மேலும் தூண்டியது. “நான் பேசிட்டே இருக்கேன்..! நீ இப்படி காது கேட்காத மாதிரி சாப்பிட்டு இருந்தா என்ன அர்த்தம்..?” என்றான். “நீ பேசுறதை நான் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 24

துணை 24: “நீயின்றி நானில்லை..” எனும் நிலையில் இருந்தான் அர்ஜூன். அந்த நிமிடம் வரை அவளன்றி அணுவும் அசையவில்லை அவனுக்கு. பிணக்குகள் தானே பிணைப்பை அதிகப் படுத்துகின்றன. பிணக்குகளுக்கு பின் மலரும் காதலும், அன்பும் தனித்துவமானது. அவளையே காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் கண்கள் தூக்கத்திற்கு கெஞ்ச, அவள் அருகில் இருக்கிறாள் என்ற ஆனந்ததுடனே உறங்கிப் போனான் அர்ஜூன். நடு ஜாமத்தில் முழிப்பு வந்த வராஹினிக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அவனுக்காக காத்திருந்து, அப்படியே உறங்கிவிட்டது பிறகு தான் […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 23

துணை 23: அன்றைய இரவு அர்ஜூனுக்கும்,வராஹினிக்கும் தூங்கா இரவாகிப் போனதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இரவெல்லாம் யோசித்ததில் கொஞ்சம் தெளிந்திருந்தான் அர்ஜூன். சுவரில் குத்தியதில் அவன் கை கொஞ்சம் காயம் கண்டிருக்க, அந்த காயம் கூட இப்போது அவனுக்குப் பெரிதாக தோன்றவில்லை. மனதில் இருக்கும் காயத்தை விட, வெளியில் இருக்கும் அந்த காயம் அவனுக்கு அதிக வலியைத் தரவில்லை போலும். உடன் இருக்கும் போது உணராத அவளின் அருகாமையை ஏனோ அவள் இல்லாத பொழுது மனம் உணர்வது தான் […]

Readmore

அவனே என் துணையானால்(ள்)..! – 22

துணை 22: தங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலிரவு அறைக்குள் வேண்டா வெறுப்பாய் அமர்ந்திருந்தான் ரஞ்சன். அவனுக்கு எல்லா விஷயத்திலும் தோற்றுப் போன உணர்வு. அதுவும் அர்ஜுனிடத்தில் முற்றிலுமாக தோற்றுப் போன உணர்வு. இனி அவனே நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். ரூபிணி வந்தது கூட தெரியாமல் அமர்ந்திருந்தான். “என்ன யோசனை ரஞ்சன்..?” என்றாள் கொஞ்சம் தணிந்த குரலில். “வந்துட்ட போல..! எல்லாம் நீ நினைச்ச மாதிரி நடந்து முடிஞ்ச சந்தோசம் தான.. […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 21

துணை 21: “என்ன சொன்ன…? உங்கம்மா சொன்னாங்களா..?ஹோ.. இது வேற நடந்திருக்கா..? அப்போ எல்லாத்தையும் பேசி வச்சுட்டு வந்து தான் இங்க என்கிட்டே கத்திட்டு இருக்கியா..? இனி ஒரு தடவை உங்க அம்மாவைப் பத்தி இந்த வீட்ல நீ பேசவே கூடாது. மீறி பேசுன, என்னை மனுஷனா பார்க்க மாட்ட..” என்ற அர்ஜூனின் கோபத்தில் சட்டென்று அடங்கினாள் வராஹினி. அவன் கொஞ்சம் பொறுமையாக இருக்கும் வரை கத்திக் கொண்டிருந்தவள், அவனின் இந்த திடீர் பரிணாமத்தைப் பார்த்து வாயடைத்து […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 20

துணை 20 வராஹினி, தான் பார்ப்பதை அந்த டிரைவர் கவனிக்கும் வரை அவரை பார்வையால் பின்தொடர்ந்து கொண்டிருந்தாள். ஒரு கட்டத்தில் இவள் பார்ப்பதை அவரும் பார்த்துவிட, பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றாலும், முகத்தில் லேசான பதட்டம் இருந்ததை கண்டு கொண்டாள் வராஹினி. ஆனால் அந்த நபரோ தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். ‘இந்த ஆளு தான் அந்த ஆளா..? இல்லை, நம்ம தான் தப்பா நினைச்சுட்டு இருக்கோமா..?’ என்று யோசிக்க, “இல்ல வராஹி..! கண்டிப்பா இது அந்த […]

Readmore

அவளே என் துணையானால்(ள்)..! – 19

துணை 19: அவளுக்காக காத்திருந்தவனின் பொறுமை பறந்தோடியது.  வரக்கூடாது என்ற காரணத்திற்காகவே அவள் இன்னமும் கிளம்பவில்லை என்று நினைத்தான். ‘எல்லாம் திமிர்…உடம்பு முழுக்க திமிர்… இவளை ஒரு ஆளுன்னு மதிச்சு கூப்பிட்டதுக்கு எனக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்..’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டான். “அவ வரலைன்னா என்ன..? நீ கிளம்பி போக வேண்டியது தான..? உனக்குத்தான் அவ வரலைன்னாலும் பிரச்சனையில்லையே..?” என்றது மனம். “எனக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஆனா, அப்பா கேட்பாரே. அவருக்கு என்ன […]

Readmore