Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Engiruntho Vanthaal

எங்கிருந்தோ வந்தாள் 21.1

  அத்தியாயம் 21   இரவு நேரம். மீட்டிங், அதனைத் தொடர்ந்து சிறிய வேலை எல்லாம் முடித்துவிட்டு ஸ்டேஷனை நோக்கி திரும்பி கொண்டிருந்தான் சுதர்ஷன். கையில் மாதுரி எழுதிய பேப்பர். அவனின் பார்வை கையில் இருந்த காகிதத்தை வெறித்துக் கொண்டிருக்க, அவனின் மனமோ, கைவிட்டு போன ஆதாரத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தது. ‘கௌஷிக் பின்னாடி இருந்து வேலை பார்த்துட்டு இருக்கிறது அந்த நந்தா தான்னு நிச்சயம் தோணுது! அவனோட பார்வையும், முழியும் சரியே இல்லை. எதுக்கு என்னைப் […]


எங்கிருந்தோ வந்தாள் 20.2

  சில நிமிடங்களில் மாதுரியின் வீட்டின் முன் வந்து நின்றவன், கதவை திறக்க முயற்சிக்க, அது பூட்டப்பட்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான், அக்கம்பக்கத்தினர் யாரையும் காணவில்லை. பின் காலால் ஓங்கி கதவை மிதித்தான். டமாரென்ற சத்தத்துடன் கதவு திறந்துகொண்டது. புயலென வீட்டிற்குள் நுழைந்தவன், படுக்கை அறையில் பார்க்க, மாதுரி குறிப்பிட்டு இருந்த அந்தப் பீரோ திறந்து கிடக்க, உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் கீழே சிதறிக் கிடந்தது. அதிர்ந்து போனான். கீழே கிடந்த பொருட்களை எல்லாம் அலசி […]


எங்கிருந்தோ வந்தாள் 20.1

  அத்தியாயம் 20   ஜீப்பை விட்டு இறங்கிய சுதர்ஷனின் கண்களில் தூரத்தில் சென்று கொண்டிருந்த சாதனா தென்பட்டாள். ஒருவேளை சித்தார்த் சொன்ன பெண் அவளாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது அவனுக்கு. உடனே வேகவேகமாக அப்பெண்ணைப் பின் தொடர்ந்தான். அதேநேரம் மாடியில் இருந்து மனைவி வருவதைப் பார்த்துக் கொண்டிருந்த கௌஷிக், வேகமாகப் படிகளில் இறங்கியவன், படிகளின் இடுக்கு வழியே மனைவியைப் பார்த்துவிட, “சாதனா!” என்று சத்தமாக அழைத்தான். சத்தம் கேட்டு மேலே பார்த்தாள் சாதனா. கணவனை […]


எங்கிருந்தோ வந்தாள் 19.2

  ஆம்! சற்று முன்பு சாதனாவிடம் பேசிவிட்டு, தனது காரை எடுத்துக்கொண்டு அந்தத் தெரு கடைசி வரை சென்றவனுக்கு அப்பொழுதுதான், மதிய சாப்பாட்டிற்குக் கௌஷிக் வருவான் என்று சாதனா சொன்னது நியாபகம் வந்தது. சட்டென்று தெரு முனையிலேயே கௌஷிக்கின் அபார்ட்மெண்ட் கண்ணனுக்குத் தெரியும் வகையில், ஒரு மரத்திற்கு அடியில் காரை பார்க் செய்துவிட்டு, கௌஷிக்கின் வருகைக்காகக் காத்திருந்தான் நந்தா. அவன் காத்திருந்து கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இருக்கும், கையில் ஒரு கவருடன், அபார்ட்மெண்ட்டை விட்டு சாதனா வெளியே […]


எங்கிருந்தோ வந்தாள் 19.1

  அத்தியாயம் 19   தன் கையில் இருந்த கடைசித் தொலைபேசி நம்பரின் ஒவ்வொரு எண்ணாகப் பார்த்து பார்த்து அழுத்தினான் நந்தா. 9…8…7…0……………..1 கடைசி எண்ணை அழுத்திவிட்டுப் பச்சை பொத்தானை அழுத்தப்போனவன் அப்பொழுது தான் பார்த்தான், அந்த எண்ணுக்கான பெயரை அவன் மொபைல் திரை காட்டியது. அந்த நம்பர் அவன் ஏற்கனவே அவன் மொபைலில் சேவ் செய்து வைத்திருந்த நம்பர். அந்தப் பெயர், ‘கௌஷிக்!’ அவன் கண்களை அவனாலையே நம்ப முடியவில்லை. கௌஷிக் தானா? மீண்டும் ஒரு […]


எங்கிருந்தோ வந்தாள் 18.2

  எதோ ஒரு பெண்ணின் (ஐஸ்வர்யா) தோளில் கைப்போட்டுக் கொண்டு சிரித்துப் பேசியபடி ஹோட்டலில் இருந்து வெளியேறினான் நந்தா! கணவனை வேறு ஒரு பெண்ணுடன், அதுவும் இவ்வளவு நெருக்கமாகப் பாப்போம் என்று எதிர்பார்த்திராத மாதுரிக்கு, அக்காட்சி தலையில் இடியை இறக்கியது போல இருந்தது. தங்களுக்குள் சின்னச் சின்னச் சண்டைகள், விரிசல்கள் இருக்கிறது தான், அதற்காகக் கணவன் தனக்குத் துரோகம் செய்வானா? நினைத்துக் கூடப் பார்க்கவில்லை அவள். அதுநாள்வரை ஒரு சிறு நூலில் தொங்கி கொண்டிருந்த அவர்களின் கணவன் […]


எங்கிருந்தோ வந்தாள் 18.1

  அத்தியாயம் 18   “என்ன டா? கிளம்பிட்டியா?” அந்தப்பக்கம் குரல் அதிகாரமாக வந்து விழ, “இதோ கிளம்பிட்டேன் ஐயா!” பவ்வியமாகச் சொன்னான். “ஜாக்கிரதை! யார் கண்ணுலையும் படக்கூடாது.” “சரிங்க ஐயா!” “காரியத்தை முடிச்சதும், இந்த ஊரை விட்டே போய்டணும். உனக்கான பணம் உன்னைத் தேடி வந்து சேரும்.” “அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க ஐயா! எல்லாத்தையும் பக்காவா முடிச்சிட்றேன்.” “ம்ம்!!” பேசிவிட்டு வைத்தவன், மடமடவென அடுத்தக் கட்ட வேலையில் இறங்கினான். பீரோவை திறந்தவன் உள்ளே இருந்த பெட்டியை […]


எங்கிருந்தோ வந்தாள் 17

  அத்தியாயம் 17   “டேவிட் அண்ணா!” சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான் நந்தா. அழகிய இளம் பெண் நின்றிருந்தாள். ஆளை அசரடிக்கும் அழகு. குழந்தை தனமும், அழகும் இணைந்து குடி கொண்டிருந்தது அவளின் முகத்தில். கச்சிதமான உருவம். கிள்ளினால் சிவந்துவிடும் நிறம். உயரத்தில் நந்தாவை மிஞ்சிவிடுவாள் போல, ஹீல்ஸ் போடாமலே அவன் உயரத்திற்கு இருந்தாள். தோற்றத்தில் நடிகை ராஷி கண்ணாவை நினைவுப்படுதினாள். “இங்க என்ன அண்ணா பிரச்சனை?” கேட்டுக்கொண்டே அவர்கள் அருகில் வந்தவள், நந்தாவின் கார் […]


எங்கிருந்தோ வந்தாள் 16.2

  சித்தார்த் காரை ஓட்டிக் கொண்டிருக்க, பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் அம்பரீஷ். “எஸ்டிமேஷன் எவ்வளவு சித்து?” விடையைத் தெரிந்துகொண்டே கேள்வி கேட்டார். “இன்னும் கணக்கு போடல பாபுஜி.” அவனுமே விடையை மறைத்தபடி பதில் சொன்னான். “ஸ்டாக் புக் நேத்து வரைக்கும் போட்டு வச்சுருக்கத் தானே?!” “ஆமாம் பாபுஜி.” அவரின் அடுத்தக் கேள்வி தெரியாமல் பட்டென்று சொல்லிவிட்டான். “அப்போ இந்நேரத்துகுள்ள தெரிஞ்சிருக்கணுமே?!” “அது…அது…இருக்கிற பத்தட்டதுல இன்னும் கணக்கு போடல பாபுஜி.” “நீ போடல, ஆனா மனேஜர் போட்டுட்டார் போல.” […]


எங்கிருந்தோ வந்தாள் 16.1

  அத்தியாயம் 16   திநகர் ரங்கநாதன் தெருவே கலவரம பூமியாகக் காட்சி அளித்தது. எதோ மிகப் பெரிய போர் நடந்து முடிந்தது போல, கரும்புகையும், சிமின்ட் சுவர்களின் சிதறல்களும், மக்களின் கூச்சல், குழப்பம் நிறைந்த சலசலப்புகளும், எங்கும் நிறைந்திருந்தது. அதோ அந்தக் குறிப்பிட்ட கடை தான் இவை அனைத்திற்கும் மையப்புள்ளி. அது தான் மேத்தா ஃபேஷன்ஸ், அம்பரீஷின் துணிக்கடை! அதுவோ முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்தது. ஏதோ குண்டடியில் இருந்து தப்பித்த கட்டிடம் போலக் காட்சி […]