Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 33.1

கள்வன் – 33 ஐயம். அன்பு, பாசம், காதலுக்கு பிறகு உலகையே ஆட்டிப்படைக்கும் ஒற்றை உணர்வு. காதல் எதையும் மறக்கவைக்கும் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் ஒருவரை தன்வசப்படுத்தி சரியா, தவறா என்று யோசிக்கவிடாமல் தன் இழுப்புக்கு இழுத்துச் செல்லும் இந்த அச்சம். அச்சத்தின் விளிம்பில் சில நேரம் முடிவு நாம் எதிர்பார்த்ததாகவே இருக்கும் பலநேரம் அது இழுத்துவிட்ட பிரச்சனைக்கு நாம் தீர்வு கண்டுபிடித்து நம் வாழ்க்கையை நாம்தான் முறைபடுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு பயத்தில் சிக்கி அதைவிடுத்து […]


கள்வனே கள்வனே – 32.2

“அவளுக்கு யாரையோ பிடிச்சிருக்குனு சொல்றா, நீங்க இலகுவா அவளிடம் பேசிட்டு இருக்கீங்க?” “யாரையோ இல்லை கீதா, அஜய்யை தான் விரும்புறா. அந்த தம்பிதான் தன்னோட விருப்பதை சொல்லியிருக்கும்.” “என்ன இது புதுசா என்னவோ சொல்றீங்க?” “ஆமா, கொஞ்ச நாள் முன்னால் எதர்ச்சியாக அந்த பையனை கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் பார்த்தேன். அவ்வளவு பணிவு, நன்னடத்தை. தனியாக பேச வேண்டும் என்று சொன்னவன், முதலில் கொஞ்சம் தயங்கி பின் மெல்ல, ‘இனியாவை எனக்கு பிடிச்சிருக்கு அங்கிள். இதை […]


கள்வனே கள்வனே – 32.1

கள்வன் – 32   சம்மந்தம் இல்லாமல் பத்திரிக்கையை கொண்டுவந்து தங்கள் முன் நீட்டுவதே சந்தேகத்தை தான் எழுப்பியது. முன்பின் பேசியதில்லை, மகள் மணப்பெண்ணின் தோழி, அவ்வளவே இந்த திருமணத்துடன் அவர்களுக்கு இருக்கும் தொடர்பு. மகள் அந்த தொடர்பை நீட்டிக்க விரும்பினாலும் அவர்களின் எல்லை எதுவென்று வரையறுத்தே இருந்தனர் ரமேஷும், கீதாவும். ஆனால் ஒரு நல்ல காரியத்திற்காக படியேறிவந்து முறையாய் பத்திரிக்கை வைப்பவர்களை கடிந்துகொள்ளவும் முடியவில்லை, அவர்களின் செயலை ஏற்கவும் முடியவில்லை.   அமைதியாய் இன்பன் நீட்டிய பத்திரிக்கையை […]


கள்வனே கள்வனே – 31

கள்வன் – 31  தன் செவியைத் தேடி வந்த ஒலியை நம்பமுடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் திணறித்தான் போனாள் இனியா. வழக்கம்போல மாலை அலுவலகம் முடித்து கேபில் ஏறியவுடன் அன்னையை அழைத்து தன் வேலை முடிந்து அலுவலகத்தைவிட்டு புறப்பட்டுவிட்டதை தெரிவிக்க, ஒட்டாத தன்மையுடனே பேசினார் கீதா. “நல்லா சாப்பிட்டு உடம்பை பார்த்துக்கோ. ஒரு மாசமாகுது நீ அங்கே போய்… ஆனால் எங்களை வந்து பார்க்கணும்னு கூட உனக்கு தோணல, வீடியோ காலாவது பேசுவேன்னு பார்த்தான்,” அவர் குரலில் […]


கள்வனே கள்வனே – 30.2

அதை வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவன் ஆளுக்கொன்றாய் பிரித்துக் கொடுத்தான். இதயன் உணவையும் இனியாவிடமே கொடுத்துவிட்டு தன்னுடைய உணவை வாயில் வைத்த மறுநொடி, “சாப்பாடு என்ன இப்படி இருக்கு?” வழக்கமான உணவாய் இல்லாமல் பத்திய சாப்பாடாய் இருக்க, முகத்தை சுழித்தான் இன்பன். இயல்பாய் இதயன் தலையை இலகுவாக தன் மடியில் கிடத்தியிருந்தவள் கொஞ்ச கொஞ்சமாய் அவனுக்கு உணவை ஊட்டிக்கொண்டே, “பத்திய சாப்பாடு இப்படி தான் இருக்கும். இங்கே இருப்பவர்களுக்காக தனியாய் சமைத்தது. நாம் சாப்பிடுகிற மாதிரி உணவு வேண்டுமென்றால் […]


கள்வனே கள்வனே – 30.1

கள்வன் – 30 சென்னை போன்றல்லாது ஈரப்பதம் மிகுதியாய் மெல்லிய குளிர் காற்று வீச, அதை அனுபவித்தபடியே கொச்சி ரயில் நிலையத்திலிருந்து ஆயுர்வேத மருத்துவமனை அனுப்பியிருந்த காரில் தங்களின் அடுத்த பயணத்தை துவங்கினர். சிறிதுநேர நகரப்பயணத்திற்கு பிறகு நெரிசல் குறைவான இயற்கை எழிலுக்கு இடையில் கார் பயணப்பட, சாலையின் இருபுறமும் மரங்கள் அணிவகுத்திருப்பதை கண்குளிர ரசித்து அனுபவித்தனர் மூவருமே. முன் இருக்கையிலிருந்து ஒருக்களித்து தலையை மட்டும் பின்புறம் திருப்பிய இன்பன், “இந்த இடம் ரொம்ப நல்லாயிருக்கு. இதை […]


கள்வனே கள்வனே – 29

கள்வன் – 29   “இந்த பெண்ணை புரிஞ்சிக்கவே முடியலையே.” என்று நினைப்பது வேறு யாராக இருக்கமுடியும் இன்பனைத் தவிர… ஏனெனில் அவளின் உள்ளத்தை களவாடிய கள்வனுக்குத் தெரியும் இனியா ஏதாவது முயற்சி செய்வாள் என்று… இனியாவின் அசுரவேகம் அவர்களை பீதியாக்கினாலும் அவளின் உத்வேகம் அவனை வெகுவாய் ஈர்த்தது. அவளின் காதலும் வியப்பாய் தான் இருந்தது. பிரதிபலன்  எதிர்ப்பாராத இந்த பாசம் எப்படி சாத்தியம்? என்ற மலைப்பு ஒருபுறம் என்றாலும் இந்த பெண் தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த […]


கள்வனே கள்வனே 28.2

தன் பிடித்ததை சொல்லவும் வந்ததே ஒரு அதிர்ச்சி அவள் குடும்பத்தினரிடம்… “இப்போ யார் வந்தது?” அதிர்ச்சியை தாங்கி குழப்பமாய் கேட்டார் ரமேஷ். இவரின் கேள்வி கீதாவின் மனதில் பதியவே இல்லை, மகளின் எதிர்பாரா விருப்பத்தில் அவர் விக்கித்து நின்றிருந்தார். அவருக்கு இன்பனை நன்றாகவே நினைவிருந்தது கூடவே அவனின் அண்ணனையும் தான். யுக்தாவையே ஏன் அந்த வீட்டில் கட்டிக்கொடுக்கிறார்கள் என்ற அதிருப்தியில் இருக்க, இப்போது அவரின் மகளே அந்த அதிருப்தியின் உருவாய் இருப்பவனை விரும்புகிறேன் என்று பொட்டில் அடித்தாற்போல் […]


கள்வனே கள்வனே 28.1

கள்வன் – 28 ஆயிற்று. எல்லாம் தலைகீழாகிற்று. அவள் எதிர்பார்க்காதது, எதிர்பார்த்திருந்த திருப்பத்திற்கு விடையாகிவிட்டது. முன்தினம் வரை வெறுத்த விஷயம்தான் இன்று அவள் வாழ்க்கையின் முக்கிய புள்ளிகளை இணைக்க வழிகொடுத்திருக்கிறது. உள்ளம் உணர்ச்சிகளால் நிரம்பியிருந்தாலும் உறுதி அவளை விட்டு குறையவே இல்லை. மறுப்பு மிஞ்சிவிட, இவளும் முடிவில் மிஞ்சிவிட்டாள். ரயில் பெட்டிகள் தடதடக்க ஒன்றன் பின் ஒன்றாய் செவி கிழியும் ஓசையுடன் வந்து அந்த சந்திப்பில் நிற்பதுமாய், பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதுமாய் அந்த இடமே மக்கள் கூட்டத்திலும், […]


கள்வனே கள்வனே 27-2

மாடிப்படிகளில் அமர்ந்தவன் தலையை பின்னே படிகளில் சாய்த்து, அதற்கு தன் கரங்களால் முட்டுக்கொடுத்து, விண்மீன்களால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆங்காங்கு வெண்மைக்கு இடையில் தெரிந்த நீல வானத்தை தேடிப்பிடித்து பார்த்துக் கொண்டிருந்தான். சிந்தை எல்லாம் பின்னோக்கி செல்ல, அவனுக்குமே இதயனின் இடரை நினைத்து  உடலில் ஒரு நடுக்கம் ஓடி நின்றது. தந்தை இறைவனடி சேர்ந்திருக்க அவர் இடத்தில் இருந்து எல்லாம் செய்தவன் திடீரென நொடித்து படுத்துவிட, வாழ்க்கை பற்றி பெரிதாக கவலையின்றி சுற்றிக்கொண்டிருந்தவன் தலையில் எல்லாம் விழவும் வாழ்க்கையே கவலையாகிப் […]