Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kanmani Naanun Nijamallavaa

கண்மணி நானுன் நிஜமல்லவா – 27 (2)

என்ன முயன்றும் ஞாபகம் வராமல் போக உள்ளுக்குள் ஏதோ போராட்ட உணர்வு. தேடி தேடி புகை மூட்டத்தில் அவனின் கண்களை பார்த்துக்கொண்டே மொத்தமாய் மயங்கி சரிய, “என்னடா பார்த்துட்டு இருக்க? முதல்ல அவளை மேல அந்த வீட்டுக்கு தூக்கிட்டு போ. புகையில அவளுக்கு சேரலையோ என்னவோ. போ…” என சொல்லி அனுப்பிய அன்புக்கரசி பூஜை செய்ய வந்தவரிடம் எதுவும் சகுன குறை இல்லையே என்றும் கேட்டுக்கொண்டார். மேலே தூக்கி வந்தவன் அறைக்குள் அவளை படுக்க வைத்துவிட்டு முகத்தில் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 27 (1)

நிஜம் – 27 “அம்மா இந்த தேங்காயை எங்க வைக்கறது?…” என கேட்டுக்கொண்டே மருதவேல் வர, “இன்னுமாடா அதுக்கு மஞ்சளை பூசலை? என்ன பண்ணிட்டு இருக்க?…” என்று அன்புக்கரசி சத்தம் போட, “அத்தை அம்மா மஞ்சள் பூசிட்டாங்க. இது தட்டுக்கு சேர்த்து வைக்க. இதை நான் செய்யறேன், நீங்க வேற பாருங்க…” என தினேஷ் அதனை வாங்கிக்கொண்டான். ஒரு ஓரமாய் மகிழ்தினி அமர்ந்திருக்க அவளுடன் பேசியபடி தாமோதரன் அமர்ந்து இருந்தார். அதிகாலை நேரம். பால் காய்ச்சுவதற்கான அனைத்து […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 26 (1)

நிஜம் – 26 முகத்தை கழுவிவிட்டு உடையை சரி செய்து வெளியே வர இவர்களுக்காக காத்திருந்தவர் உடனே சூடாக பஜ்ஜிகளை போட்டு கொண்டு வந்து தரவும் அந்த மழை நேரத்தில் இதமாய் உள்ளிறங்கியது. கொஞ்சம் வலுவிழந்து பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தபடி இருந்தவளிடம், “பூர்வி ஒரு வாக் போவோமா?…” என கேட்டான். “இதென்ன கேள்வி? போகலாமே?…” என மழை துளியை கையில் பிடித்தபடி அவள் சொல்லி, “இங்கயும் மழை பெய்யுதேன்னு அடைஞ்சு கிடக்க முடியாது. இப்ப […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 26 (2)

“அங்க இடம் இருக்குல. பின்ன எதுக்கு இப்படி ஒட்டிட்டு உட்காருறீங்க?…” என வேண்டுமென்றே சீண்டியவள் பின் சட்டென அவனின் வாயை மூடி, “கேட்கலை, சத்தியமா கேட்கலை. எதையும் பேசிடாதீங்க…” என்று முன்னெச்சரிக்கையாக சொல்லவும் அவளின் கையை எடுத்துவிட்டு சிரித்தவன் இன்னும் நன்றாய் தள்ளி அமர்ந்து தனது மடியில் அவளை அமர்த்திக்கொண்டான். பேச விஷயங்களா இல்லை. பேசிபேசி தீர்த்தாலும் பேசியதையே பேசினாலும் புதிதாய் கேட்பதை போலவே கண்களால் கவிபாடினார்கள். என்ன சொல்லி அபூர்வா உள்ளே வந்தாளோ அவளால் அதை […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 25 (2)

“என்னடா இது? அவளோட பேரன்ட்ஸ் வந்தா அட்ரஸ் கூட வாங்கி வைக்க மாட்டாங்களா?…” என்று எரிச்சலில் கத்தியவன் அங்கிருந்த டாக்டரை முறைக்க, “ப்ச், சரி. வா அதான் காலேஜ் தெரியுமே. நாம அழுத்தி கேட்டாலும் சொல்லமாட்டாங்க. ஒரு வேலை எந்த டீட்டயிலும் ரிஜிஸ்டர் பண்ணலையோ என்னவோ? இது நமக்கு தேவை இல்லாத பிரச்சனை. ஏன்டா நமக்கு தெரியாதா?…” என சொல்ல, “இப்பவே நான் யார்ன்னு சொல்லி வாங்கிடலாம். ஆனா இது என்னோட பர்சனல். அதான் பேசாம இருக்கேன்…” […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 25 (1)

நிஜம் – 25 அருகில் இருந்த ஊரில் அரசு மருத்துவமனைக்கு காயம் பட்ட அனைத்து பயணிகளையும் கொண்டு செல்ல வாசுதேவகிருஷ்ணன் அபூர்வாவை கையில் சுமந்துகொண்டு உள்ளே ஓடினான். எமர்ஜென்சியில் அனுமதிக்கப்பட்டவளுக்கு சிகிச்சை ஆரம்பிக்கப்பட தலையில் அடிபட்டதில் ரத்தம் அதிகம் தேவைப்பட்டது. அதற்கு விசாரிக்க சொல்லியபடி வெளியே வந்த டாக்டரை பார்த்ததும், “டாக்டர் கண்மணி…” என கேட்க, “யார் கண்மணி?…” என அவரும் கேட்க, “டாக்டர் பேஷன்ட் கூட வந்தவர் இவர். உள்ள இருக்கிற பொண்ணுக்கு வேண்டப்பட்டவர் போல…” […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 24 (2)

அங்கே சிலர் மீன் பிடித்துக்கொண்டு இருப்பதை கண்டு வேகமாய் எழுந்து மறுபுறம் வர திரும்பியவளின் நெற்றி ஒரு மரத்தூணில் முட்டி நிலை தடுமாறி பின்னால் சாய இருந்தவளை பதறி பிடித்தவன், “உன்னை யாரு கவனிக்காம எழுந்துக்க சொன்னா?…” என கடிந்தவன் அவளின் நெற்றியை தேய்த்துவிட, “ப்ச், லேசா தான். விடுங்க…” என்றாள் அவனின் கையை எடுத்துவிட்டு. ஆனாலும் இடித்ததில் ஒருமாதிரி கலங்கி போனாள். கண்கள் கலங்க தலை லேசாய் சுற்றுவதை போல தோன்ற முகத்தில் அதன் தாக்கம் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 24 (1)

நிஜம் – 24 மாலை வாசுதேவகிருஷ்ணன் வந்ததில் இருந்து முத்துவேல் அங்குமிங்கும் அசையவே இல்லை. அதிலும் அந்த வீட்டில் தன்னை ஒரு ஆள் இருப்பதாகவே யாரும் நினைக்காததை போல நடந்துகொண்டது அவரால் தாங்கவே முடியவில்லை. “இவங்க எல்லாரும் சேர்ந்து ஆட்டமா ஆடறாங்க. இருக்கட்டும் எல்லாத்துக்கும் முடிவு கட்டுறேன்…” என முணுமுணுத்தபடி இருந்தார். “என்ன வாசு வந்துட்டு ஒண்ணுமே சாப்பிடாம வந்ததும் கிளம்பறேன்னு நிக்கற?…” என்று அன்புக்கரசி கவலையுடன் கேட்கவுமே அவர்களை அதற்கும் மேலான கவலையுடன் பார்த்தபடி முத்துவேல் […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 23 (1)

நிஜம் – 23 வீட்டிற்கு வந்தவன் வேகமாய் உள்ளே செல்ல போக அன்புக்கரசி அவனிடம் வந்தார். “என்ன வாசு உங்கப்பா எதுவும் கோபமா பேசிட்டாரா?…” என கேட்க, “அதெல்லாம் எதுவும் இல்லைம்மா…” என்று சமாளித்தவன் பார்வையால் அபூர்வாவை தேட விமலாவோடு அமர்ந்து வீடியோ காலில் பூங்கோதை மற்றும் மகிழ்த்தினியிடம் பேசிக்கொண்டிருந்தாள். இவன் வந்ததை கவனிக்காமல் அவள் இருக்க மருதவேல் டிவி பார்த்துக்கொண்டு இருந்தான். “சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா வாசு?…” என அன்புக்கரசி கேட்க, “இல்லைம்மா பசிக்கலை. ஒரு […]


கண்மணி நானுன் நிஜமல்லவா – 23 (2)

அவன் சொல்லியதன் முழு சாராம்சமும் இப்பொழுது விளங்க ரவியின் முகம் பயங்கரமாக மாறியது. “என்ன கோபம் வருது போல? என்னை என்னன்னு நினைச்ச மேன் நீ?…” என அவனுக்கு மேலான கோபத்துடன் எழுந்து அமர்ந்திருந்த சேரை ஒரு உதய் விட அது தெறித்து விழுந்ததில் ரவி எச்சிலை கூட்டி விழுங்கினான். “இந்த வாசுதேவகிருஷ்ணன் ஒரு கேஸ்ல இன்வால்வ் ஆகறான்னு தெரிஞ்சாலே அவனவனுக்கு ஆடி போயிரும். உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தா என்கிட்டையே உன் வேலையை காண்பிப்ப…” என்றவன் […]