Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

kanmoodi kaathal naanaavaen

கண்மூடி காதல் நானாவேன் – 24 (2)

பிரஷாந்தியின் கன்னத்தை பார்த்தவருக்கு அத்தனை ஆத்திரம் கிளர்ந்தது. விதுரனை அடித்து துவம்சம் செய்துவிடும் வேகம் அவரின் நடையில். நேரடியாக பிரின்ஸிபால் அறைக்கே சென்றுவிட  அங்கே இவரின் திடீர் வருகையும் கோபமும் புரியாமல், “யார் ஸார் நீங்க?…” என்றவர் பிரஷாந்தியை பார்த்ததும் என்னவென புரிந்து போனது. “என்னம்மா இப்ப எதுக்கு உன் அப்பாவை வர சொல்லியிருக்க?…” என கேட்க, “என்ன ஸார், என் முன்னாடியே என் பொண்ணை மிரட்டற மாதிரி பேசறேங்க?…” என சேகரன் குதிக்க, “ஸார், கொஞ்சம் […]


கண்மூடி காதல் நானாவேன் – 24 (1)

காதல் – 24 ஆறு வருடங்களுக்கு முன்… விருதுநகர். அது ஆண், பெண் இருபாலாரும் பயிலும் பொறியியல் கல்லூரி. விதுரனும், சக்தியும் இருவரும் முதுகலை படிப்பில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்தனர். பிரஷாந்தி இளங்கலை சேர்ந்து மூன்றாம் வருடம். அதுவரை அப்படி ஒருத்தி அங்கே பயிலுவதோ தன்னை பார்ப்பதோ விதுரன் அறிந்ததில்லை. அவளை என்றில்லை யாரையுமே. தனது சின்ன ஒரு அசைவு கூட யாரையும் கவர்ந்துவிட வேண்டாம் என்பதில் மிக கவனமாய் இருப்பவன். ஏனோ அவனின் குடும்பத்தில் […]


கண்மூடி காதல் நானாவேன் – 23 (2)

“ஊருக்கு போனா கண்டிப்பா வீட்ல இருக்க முடியாது. பகல் ஃபுல்லா நீ தனியா இருக்கனும். அதுவும் அந்த  வீட்ல சித்தி உன்கூட மெர்ஜ் ஆகலை இன்னும். உனக்கும் அன் கம்பர்டபிளா இருக்குமேன்னு தான்…” என்றவன், “சேரிலாம் கட்டிட்டு எப்படி ஸ்கூட்டி ஓட்டிட்டு வந்த நீ?. எனக்காகவா?…” என பேச்சுக்கொடுக்க ரோஜாவோ அனைத்தையும் மறந்தவளாய் அவனோடு பேசியபடி அவள் கதை பேச சிரிப்புடன் அவள் பேசியவற்றை கேட்டுக்கொண்டே இருந்தவன் அங்கேயே தனக்கும் போட்டுக்கொண்டுவந்து சாப்பிட்டு முடித்து கை கழுவி, […]


கண்மூடி காதல் நானாவேன் – 23 (1)

காதல் – 23        விதுரன் கிளம்பிய பின்னர் சக்தி சங்கவியை பிடித்து சத்தம் போட ஸ்ரீநிதி கூட அமைதியாக நின்றாள். இந்த சில நாட்களில் அவனின் ஒதுக்கத்தையும் வரவு குறைந்ததையும் கவனித்துக்கொண்டுதானே இருந்தாள் ஸ்ரீ. நிம்மதி என்று முதலில் நினைத்தவள் பின் தன்னுடைய செயலால் தான் என்று நினைக்கும் பொழுது மனதின் ஓரத்தில் சிறு குறுகுறுப்பு பரவத்தான் செய்தது. ஆனாலும் அதனை அடக்கி வைத்தாள். அதிலும் சற்று நாட்களாய் தாயின் அனத்தல் இப்படி பெண் கேட்டு […]


கண்மூடி காதல் நானாவேன் – 22 (2)

நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய் நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன் என்னோடு கண்ணுக்குள்ளே நீ கரைந்தாய் நான் உன்னை என்னில் மூடி வைத்தேன் அன்போடு சொல்லடா சொல்லடா என்னை விட்டு விலகி தூரமாய் போனதேன் நில்லடா நில்லடா உந்தன் அன்பில் வாழ்ந்து கொள்கிறேன் நானுமே இருளும் அது விலகி புதிய வெளிச்சம் ஒன்று பூக்குதே இதயம் அது துடிப்பதற்கு அர்த்தம் கொஞ்சம் கூடுதே உருகினேனோ நான் உடைகிறேனோ உந்தன் அன்பில் நானே கரைகிறேனோ மீண்டும் உன்னை சேர்வதென்றால் […]


கண்மூடி காதல் நானாவேன் – 22 (1)

காதல் – 22          காலையில் எழுந்ததும் குளித்து கிளம்பி வருவதற்குள் வீட்டு வேலைக்கு வரும் பெண் வந்துவிட, “நீங்க தான் மைனாவா?…” என கேட்டுக்கொண்டே ரோஜா வந்து அவரிடம் கேட்கவும் அவர் ஒரு சிரிப்புடன் காலை வணக்கத்தை சொல்லிவிட்டு படபடவென வேலை பார்க்க, “அட இருங்க எதுக்கு இவ்வளோ வேகம்?…” என ரோஜா கேட்க, “இல்லம்மா, இங்க முடிச்சுட்டு இன்னொரு வீட்டுக்கு வேலைக்கு போகனும். அங்க அரைநாள் வேலை. அதான் விடியலுலையே இங்க வந்துருவேன். தம்பி […]


கண்மூடி காதல் நானாவேன் – 21 (2)

“சோ வாட், நாளைக்கு நேரா போனா கேட்டுட்டு போறாங்க…” என அவனுக்கு பல்ப் கொடுக்க, “என்ன பீஸ் நீ எல்டி?…” என்று சிரிக்க, “இந்த எல்ஈடிக்கு ஏத்த எல்டி தான்…” என்று சரிக்கு சரியாக பேச சிரித்தபடி பார்த்தான். என்னவென்று பார்வையால் கேட்க, “உன்னை எப்படி கல்யாணம் பண்ணேன்னு யோசிக்கறேன்…” என்றான் மனதை மறையாமல். “ரொம்ப லேட் திங்கிங். இதை சேகரன் செத்துருவான் சொல்லும் போதே யோசிச்சிருக்கனும்…” என்று கலாய்க்க, “உனக்கு கோவமே வரலையா அன்னைக்கு அப்படி […]


கண்மூடி காதல் நானாவேன் – 21 (1)

காதல் – 21        அத்தனை நேரம் இருந்த டென்ஷன் மறந்து சக்தி விதுரனின் பாவனையில் சிரிக்க, “நீ ஏன்டா சிரிக்க மாட்ட? என்னைக்காச்சும் உன் போனுக்கும் வச்சாலும் வைப்பா. பார்த்துட்டே இரு…” என்று சாபம் போல சொல்ல அது விரைவில் பலிக்கபோவது தெரியாமல், “அது நடக்கவே நடக்காது. உன்னை மாதிரியா நான் டோன் செட் பன்ற வரைக்கும் கவனிக்காம இருப்பேன்….” என இறுமாப்பாய் சொல்ல, “சரி சரி. அதை விடு. இங்க பாரு சக்தி இங்க […]


கண்மூடி காதல் நானாவேன் – 20 (2)

“அம்மா தூங்கறாங்கலாப்பா?…” என்று கார் சாவியை எடுக்க, “ஹ்ம்ம் ஆமாப்பா, கிளம்பிட்டியா? பார்த்து போய்ட்டுவா…” என்ற சடகோபனும் உறங்க செல்ல தயாராக இருக்க விதுரனுடன் வெளியே வந்த ரோஜாவிடம், “நீயும் வேணும்னா கொஞ்சம் ரெஸ்ட் எடு. நான் கிளம்பவும் டோர் லாக் பண்ணிக்கோ. ப்ரிட்ஜ்ல ஜுஸ் இருக்கு. எடுத்து குடி. காபி போடறேன்னு எதையாச்சும் குடிச்சு திரும்ப வாமிட் பண்ணாத. புரியுதா?…”  என்று ஆயிரத்தெட்டு அறிவுரைகள் சொல்ல புன்னகையுடன் தலையாட்டினாள் ரோஜா. “சரின்னுதான் சொல்ற, நம்பத்தான் முடியலை. […]


கண்மூடி காதல் நானாவேன் – 20 (1)

காதல் – 20         அருப்புக்கோட்டையில் இருந்த நான்கு நாட்களும் சொர்க்கம் எனலாம். அப்படி ஒரு மகிழ்ச்சியில் திளைத்தாள் ரோஜா. குடும்பமே கொண்டாடவில்லை என்றாலும் அவர்களின் வரையறுக்கப்பட்ட அந்த சுதந்திரத்தில் கூட ஆனந்தமாய் அன்பாய் உணர்ந்தாள். பூஜைக்கு மறுநாள் மட்டுமே வீட்டில் இருந்தவள் அதன் பின்னான இரண்டு நாட்களும் விருந்து விருந்தென உறவினர்கள் வீட்டிற்கு செல்வதற்கே சரியாக இருந்தது. புது புது மனிதர்கள். முரட்டுத்தனமான பாசம். ஏதோ மந்திரக்கோலை சுழற்றியத்தை போல வாழ்க்கை தானாகவே வண்ணமயமாக மாறியதை […]