Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mullai Vana Kulirae

முல்லை வன குளிரே – 9 (2)

“உங்களுக்கு சிரிக்கவெல்லாம் தெரியுதே?…” என்றவள், “எனக்கு எதையும் கத்துக்கனும்னு இல்லை…” என்றாள். காரின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த சுபாஷினிக்கும், பரமேஸ்வரனுக்கும் இருவரும் இணக்கமாக பேசிவருவதை போல ஒரு தோற்றம் தெரிய சுபாஷினிக்கு இன்னும் சிரிப்பு பொங்கியது. பரமேஸ்வரனிடம் முதல் நாள் தங்கை செய்த ஆர்ப்பாட்டங்களை, பேச்சுக்களை சொல்லி புலம்பி இருந்தாளே? இப்போது அவர்கள் இருவருமாய் இவர்களை எண்ணி சிரித்துக்கொண்டனர். கோவிலுக்கு சென்று பூஜை முடித்துவிட்டு பிரகாரம் சுற்றும் நேரம் குறிஞ்சி சுபாவின் பின்னால் செல்ல போக  அவளின் கையை […]


முல்லை வன குளிரே – 9 (1)

குளிர் – 9 சுபாஷினி காலை ஐந்து மணிக்கே எழுந்துவிட்டவள் வனஜாவிற்கு உதவியாக இருந்தாள். வீட்டில் சில நெருங்கிய உறவினர்கள் இன்னும் தங்கியிருக்க அவர்களுக்கு தேவைனவற்றை செய்துகொடுக்கவேண்டுமே? அதனால் காலை நேரம் பரபரவென்று இருந்தது. “சுபா, இந்த பொண்ணு எப்படி இருக்கான்னு தெரியலை? எழுந்து குளிக்க சொல்லனும். காலை சாப்பாடு முடிச்சுட்டு கோவிலுக்கு போகலாம்னு நினைச்சா முதல்ல கோவிலுக்கு போய்ட்டு வந்திருவோம்னு சாரதா சொல்றாங்க….” “ம்மா அவங்க சொல்ற மாதிரியே செய்வோம். இப்போ என்ன? நீங்க வீட்டுல […]


முல்லை வன குளிரே – 8 (2)

தனது திருமணத்தில் கொஞ்சமும் சோர்வின்றி ஓடியாடி போட்டோக்களுக்கு விதவிதமாய் போஸ் கொடுத்து என ஒரு கலக்கு கலக்கியவள் இப்போது மனதில் கொஞ்சமும் உற்சாகமின்றி பேசுவதை சஞ்சலத்துடன் பார்த்தாள். “சாப்பிடனும்டா. எல்லாரும் கிளம்பவும் நல்ல நேரம் பார்த்து கிளம்பனும்…” என சொல்ல, “ஹ்ம்ம்…” என்றவள், “சுபாக்கா நான் போட்டோல எப்படி இருப்பேன்னு தெரியலை. இந்த ஓனர்…” “ப்ச், இப்ப அவர் உன் புருஷன். மரியாதை…” “ஆமா பெரிய புருஷர்ர்ர்ர்…” என ராகம் போட, “கூப்பிட்டியா?…” என்றான் அவளிடம் திரும்பி. […]


முல்லை வன குளிரே – 8 (1)

குளிர் – 8 காலை ஆறரை மணிக்கே மண்டபத்திற்கு சென்றுவிட்டனர் இரு குடும்பத்தினரும். காலை உணவு நேரம் கடந்ததும் முகூர்த்தம் என்றிருக்க சொந்தங்களும், அக்கம்பக்கத்தினரும் வந்து சேர்ந்திருந்தனர். “குறிஞ்சிக்கு சாப்பாட்டை ரூம்க்கே கொண்டு போய் குடு சுபா…” என சாரதா சொல்ல, “இல்லை அவ அங்க வந்தே சாப்பிடட்டும். தனியா அவளுக்குன்னு ஒருக்கா எதுக்கு எடுத்துட்டு போய்ட்டு?…” என வனஜா மகளை அழைத்து வரும் படி மூத்த மகளிடம் சொல்ல சுபாவும் குறிஞ்சியுடன் டைனிங்ஹால் வந்தாள். “சாப்பிட்டா […]


முல்லை வன குளிரே – 7 (2)

பத்திரிக்கை அடிக்க வேண்டியதில்லை, திருமணம் மிக எளிமையாக நடக்கட்டும் என்று அமர்நாத் சொல்லிவிட அது சாரதாவுக்கும், நாராயணனுக்கும் மனதிற்கு வருத்தமாக இருந்தது. ஒரே மகனின் திருமணம், எப்படி எல்லாம் செய்யவேண்டும் என்று கனவு கண்டிருக்க அவனோ இப்படி சொல்லிவிட்டு மற்றதை பேசிக்கொள்ளுங்கள் என்று கிளம்பிவிட்டான். அதன் பின்னர் வீட்டினர் கலந்து பேசி முடிவுக்கு வந்தனர். மிக நெருக்கமான சொந்தங்கள் போதும். வேறு யாரும் வேண்டாம் என்று முடிவுக்கு வந்தனர். பதினைந்து நாளில் ஒரு நாள் இருக்க அதில் […]


முல்லை வன குளிரே – 7 (1)

குளிர் – 7 அமர்நாத் இப்படி சொல்லவும் அவ்விடத்தில் இருந்த அனைவரும் மூச்சுவிட்ட சத்தம் கூட கேட்காத அளவுக்கு நிசப்தமாக போக, குறிஞ்சி அப்படி நின்றது சில நொடிகளே. “இல்லை இது நடக்காது. அப்பா வேண்டாம் சொல்லுங்க. இதுக்கு நான் ஒத்துக்க முடியாது. முடியாது…” என இரு கைகளையும் வேண்டாம் என்பதை போல மறுப்பாய் ஆட்டிக்கொண்டு வேகமாய் முன்னே ஓடி வர அவளை நிமிர்ந்து பார்த்தவன் பார்வை கூட அவள் மீது வன்மையாய் படிந்தது. “குறிஞ்சி, நீ […]


முல்லை வன குளிரே – 6 (2)

மண்டப உரிமையாளரிடம் அதற்கு இருந்த தொகையை செட்டில் செய்து முடிக்க நேரம் ஆகியது. “அமர் நீ வீட்டுக்கு போ. பேலன்ஸை நாங்க பார்த்துக்கறோம். இப்போ நீ அம்மாகூட இருக்கனும். அதுதான் முக்கியம். அந்த பொண்ணு வீட்டுல என்ன பிரச்சனையோ? அது வேற இருக்குது…” என  அசோக் சொல்ல, “ஹ்ம்ம், சரி…” என்று கிளம்பிவிட்டான். “இரு நானே உன்னை ட்ராப் பண்ணிட்டு திரும்ப இங்க வரேன். மத்ததை பசங்க பார்த்துப்பாங்க…” என்றவன் தனது பைக் சாவியை எடுத்துக்கொண்டு வந்தான். […]


முல்லை வன குளிரே – 6 (1)

குளிர் – 6 சொந்தங்கள் எல்லாம் வந்துவிட மணமகள் அறையில் நிரஞ்சனா தயாராகிக்கொண்டு இருக்க அவர்களை பார்க்க வனஜாவுடன் சாரதாவும், சுபாஷினியும் சென்றனர். அன்றுதான் வனஜா நிரஞ்சனாவை நேரில் பார்த்தார். பார்த்ததும் திருப்தியாக இருந்தது. வனஜாவுக்கு ஏக சந்தோஷம் இந்த திருமணத்தில். தனது மகளும், மருமகனும் ஏற்பாடு பண்ணிய சம்பந்தம் இன்று நல்லவிதமாக நடைபெற இருக்கிறது என்பதிலேயே அத்தனை மகிழ்ச்சி. “இன்னும் கொஞ்சம் நேரத்துல மேடைக்கு கூப்பிட்டுடுவாங்க. எல்லாம் முடிஞ்சதா?…” என சுபா கேட்க, “ஆச்சு. இது […]


முல்லை வன குளிரே – 5 (2)

“முன்ன கூட இந்த வீட்டுல இருக்கறதுக்கு பிடிக்கலைன்னாலும் புலம்பிட்டாவது இருப்பேன். ஆனா இந்த கல்யாணம் முடிஞ்சு அந்த பொண்ணு இங்க வந்து என்னை பார்க்குமே, அப்படி ஒரு பேச்சு அதோட மைண்டுக்கு வராமலா போகும்? அதுக்குள்ளவாச்சும் இங்க இருந்து போகனும் சுபாக்கா….” “டேய் குறிஞ்சி? என்ன இதெல்லாம்? நீயா இத்தனை கவலைப்படற? யாரும் என்னவும் நினைக்கட்டும். நான் இப்படித்தான்னு எப்பவும் இருக்கற குறிஞ்சி தான் எங்களுக்கு வேணும். இதெல்லாம் நினைக்காம ஹேப்பியா இருடா…” என தங்கையை ஒருவாறு […]


முல்லை வன குளிரே – 5 (1)

குளிர் – 5 அமர் அமைதியாக நிற்க வந்தவர்களும் அங்கே வைத்து எதுவும் பேச வேண்டாம் என நினைத்து கிளம்புவதாய் சொல்லி கிளம்பிவிட எல்லோரும் கிளம்பவும் தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டான். “என்னாச்சு அமரண்ணே?…” என கடை ஊழியர் கேட்க, “ஒன்னும் ஆகலை. வேலையை பாருங்க…” என்றவனுக்கு எந்த வேலையிலும் கவனம் செல்லவில்லை. வீட்டிற்கு செல்லவும் தோன்றவில்லை. இந்த திருமணம் பற்றிய பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் அவனுக்குள்ளும் சிறு ஆசைவிதை வேர் விட தான் செய்தது. ‘பார்க்கலாம். […]