Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

punnagaiyil jeevan karaiyuthadi

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 22

புன்னகை – 22            மறுநாள் காலையே மலர் கிளம்பும் முன் ஹாஸ்டல் வந்தவன் அங்கு வைத்தியநாதனை பார்த்ததும் கொஞ்சம் தயங்கி நின்றவன் அதிகமாய் பேசியே இராத அவரை பார்த்து ஒரு வணக்கம் தெரிவிக்க, “ நல்லா இருக்கீங்களா தம்பி?…” அவர் கேட்டதும், “எஸ், அங்கிள் நல்லா இருக்கேன். நீங்க எப்டி இருக்கீங்க?…” என கேட்க, “போலாம் மாமா…” வனமலர் அங்கே வந்து நிற்க, “பஸ் கிளம்ப இன்னும் டைம் இருக்கே. இப்போவே கிளம்பி அங்க ஏன் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 21

புன்னகை – 21 நேத்ராவின் திருமணத்தில் கூட அவனின் முழு மனதும் தெரியாமல் அவனோடு கேலியும் கிண்டலுமாய் சகஜமாய் தான் பேசினாள். அவனும் அப்படியே என நினைத்திருக்க அது உண்மை இல்லை என்பது மேற்படிப்பின் பொழுது இரண்டாம் வருட முடிவிலேயே தெரிந்துவிட்டது மலருக்கு. மூன்று வருடங்கள் ஆர்ஜே கல்லூரியில் படித்தவள் அதன் பின் மேல் படிப்பை சென்னையில் தொடர்ந்தாள். தன் மாமா வைத்தியநாதன் தன்னுடைய நண்பரின் ஆலோசனையின் படி மலரின் மேல் படிப்பிற்கு சென்னை அனுப்ப நினைக்க […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 20

புன்னகை – 20                ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சாப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வருபவன் அனய். ஒரு வருடத்திற்கு முன்புதான் படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே வேலையில் சேர்ந்திருந்தான். தங்களுடைய வீட்டிற்கும்  அலுவலகத்திற்கும் வெகு தூரம் என்பதாலும் தினமும் வந்துபோகும் நேரமும் அதிகம் என்பதாலும் அவன் அலுவலகத்திற்கு அருகிலேயே பிளாட் எடுத்து தங்கியிருந்தான். அவ்வப்போது விடுமுறை தினங்களில் வந்து அவர்களோடு தங்கி செல்வான். தாய், தந்தைக்கு அடங்கிய அமைதியான பையன். அவ்வப்போது அப்படி என்று காட்டிக்கொள்பவனும் கூட. […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 19

புன்னகை – 19 அந்த நிமிடம் அவர்களுக்கு சங்கடங்கள், வருத்தங்கள், மன சுணுக்கங்கள் என மாறி மாறி மூளையை தின்றாலும் அதை மற்றவருக்கு தெரியாமல் மறைத்து சாதாரணம் போல உரையாடினர். சிறிது நேரத்தில் ஆண்டாளும் பாலகிருஷ்ணனும் வருணியோடு வந்துவிட வரும் வழியிலேயே வருணி தூங்கி இருந்தாள். பாலகிருஷ்ணனிடமிருந்து அவளை தன் தோளில் மாற்றிக்கொண்ட அனய், “நீங்க பேசிட்டு இருங்க பேபியை படுக்க வச்சிட்டு வரேன்…” சொல்லி கீழே ஆண்டாளின் அறையிலேயே உறங்கவைத்து விட்டு வர அப்போதும் அனைவரும் […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 18

புன்னகை – 18                   ஹாலில் பாலகிருஷ்ணன் வைத்தியனாதனுடன் உரையாடிக்கொண்டிருக்க காமாட்சி வருணியை மடியில் வைத்துக்கொண்டு அவளோடு பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அனைத்தையும் பார்வையாளராய் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க காமாட்சி அவரின் முகம் பார்ப்பதும் வருணியோடு பேசுவதுமாய் இருக்க ஆண்டாளுக்கே காமாட்சியின் பார்வை கொஞ்சம் சங்கடத்தை தோற்றுவித்தது தான். “நான் என்ன செய்யமுடியும்? அவரை பார்க்கவும் பாவமா தான் இருக்கு. ஆனாலும் என்னால இவங்களோட பேசமுடியாது. முடியவே முடியாது. கடவுளே இவங்க என்னை பார்க்காம இருந்தா தேவலை” என எண்ணியபடி […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 17

புன்னகை – 17 “என்ன? என்ன கேட்டீங்க?…”என மீண்டும் கேட்க அவளின் பதட்டமான பேச்சில் அனய்யின் முகத்தில் புன்னகை அரும்பியது. “இல்ல என்னை அங்க எல்லோர் முன்னாடியும் ஏன் கட்டிப்புடிச்சன்னு கேட்டேன்…” விழிகளில் குறும்பு கூத்தாட தன்னையே கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டே மீண்டும் கேட்ட கணவனின் முகத்தை ஒரு நொடிக்குமேல் காணமுடியாமல் முகம் திருப்பிக்கொண்டாள் வனமலர். “என்ன பதிலே இல்லை. சொல்லு அதுக்கு என்ன அர்த்தம்?…” “ப்ச், இதுக்கெல்லாமா அர்த்தம் கண்டுபுடிப்பாங்க? என்னவோ தோணிச்சு. அதான். விடுங்க. முதல்ல […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 16 (2)

கொண்டவன் துணை இருந்தால் எத்தனை பெரிய இடர்களையும் தாண்டிவிட முடியும் என்று முழுவதுமாக புரிந்துகொண்டாள். உயிரோடு உரசி சென்ற உணர்வுகள் அவனோடான உறவை எடுத்துச்சொல்ல அழகாய் புரிந்துகொண்ட தருணம் பெரும் உவகையாய் ஊற்றெடுத்தது உள்ளுக்குள். “ப்ச் மலர். ஷ்ஷ். போதும் அழுதது…” என அவளை பிரித்து எதிரில் நிறுத்தியவன், “அழறதை முதல்ல நிறுத்து. உன் மேல தப்பில்லைன்னு நீ தான் ப்ரூ பண்ணனும். இப்படி அழுதுட்டு நின்னா எதுவும் நடக்காது. என்ன செய்யபோற?…” அனய்யின் கேள்வியில் வழிதெரியாத […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 16 (1)

புன்னகை – 16 தன்னை நோக்கி வருபவர்களின் முகத்தில் இருந்த ஆவேசத்தை துல்லியமாக கண்டுகொண்டவள் பார்வை யோசனையாய் ரத்னாவை நோக்கியது. “என்னாச்சு ரத்னா?…” மலர் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே அக்கல்லூரியின் கரஸ்பாண்டென்ட் ஜானகி வந்துவிட்டார் அவ்விடம். “சார், ப்ளீஸ். நான் என்னன்னு கேட்டு சொல்றேன். கொஞ்சம் அமைதியா இருங்க…” என கூட்டத்தினரை தடுத்து நிறுத்த, “என்னதா இருந்தாலும் எங்க முன்னாடி தான் விசாரிக்கனும். இந்தம்மா என்ன பதில் சொல்லுதுன்னு நாங்களும் தெரிஞ்சுக்கனும் இல்லையா?…” என அவர்களில் ஒருவர் ஆத்திரத்தோடு […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 15

புன்னகை – 15                  மறுநாள் அதிகாலை வேகவேகமாய் எழுந்து மலருக்கு முன் கிளம்பியவன் மலர் கல்லூரிக்கு செல்லும்  முன்பே வீட்டிற்கு திரும்பிவிட்டான். மலர் வருணிக்கு இட்லியை ஊட்டிக்கொண்டே அவனை பார்த்தவள், “சாப்பிட்டாச்சா?…” என, “இன்னும் இல்லை. ப்ளேட் வை…” என சொல்லி கை கழுவிவிட்டு அமர்ந்து வருணியை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டான். “பேபி சமத்தா சாப்பிடறீங்களே குட் கேர்ள்…” குழந்தையின் நுனிமூக்கோடு உரசியவன் முகத்தில் லேசாக இட்லி துணுக்குகள் ஒட்டிக்கொள்ள, “ப்பா, ட்லி. ச்சீய்…”  என […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 14 (2)

“எங்கயும் புருஷன் பொண்டாட்டிக்குத்தான் இந்த சாங் சூட் ஆகும். இங்க எல்லாம் தலைகீழ். மாமியாரை இந்த பார்வை பார்க்கிறா. என்னை எவன்டா நீன்னு ஒரு லுக் விடறா…” என அனய்யும் நேத்ராவிடம் புலம்பும் படி இருக்கும் அவர்களின் அலம்பல். இப்பொழுது அந்நிகழ்வுகள் ஞாபகம் வர மலரின் முகத்தில் புன்னகை. ஆண்டாளும் அதையே நினைக்க புன்னகை தான் அவருக்கும் கூட. வெகு வருடங்களுக்கு பின் இருவரும் ஒருவரை ஒருவர் புன்னகை முகமாக காண்கின்றனர். அதுவரை இருந்த கசப்புகள் கூட […]