Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

punnagaiyil jeevan karaiyuthadi

புன்னகையில் ஜீவன் கரையுதடி – 14 (1)

புன்னகை – 14 இரண்டுமாதம் கடந்திருந்த நிலையில் நித்தமும் சின்ன சின்ன வம்புகளுடன் வாழ்க்கை தெளிந்த நீரோடை போன்றுதான் சென்றுகொண்டிருந்தது அனய் வனமலர் இருவருக்கும். அவ்வப்போது வைத்தியநாதன் காமாட்சியுடன் வந்து சென்றார். வனமலர் வருணியின் காய்ச்சலுக்குக்கு பின் அங்கு சென்று தங்கி வந்ததிலிருந்து தன் மன இறுக்கம் தளர்ந்து அவர்கள் மீதான கோபத்தை விடுத்து முகம் திருப்பாமல் அவர்களுடன் சகஜமாக பேசவும் செய்தாள். அதிலேயே அவர்களின் நிம்மதி கொஞ்சம் மீண்டிருந்தது. அக்குடும்பத்துடன் அழகாய் பொருந்திப்போனவளை பார்த்து பார்த்து […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 13

புன்னகை – 13 திடீரென மூவரும் வாசலில் வந்து நிற்பதை பார்த்து அதிர்ந்துபோன வைத்தியநாதன் மலரின் அழுத முகத்தில் இன்னமும் அடிவயிறு கலங்கித்தான் நின்றார். வந்தவர்களை உள்ளே அழைக்க கூட நா எழவில்லை. வார்த்தைகளின்றி கல்லாய் சமைந்துதான் நின்றார். அவரின் பார்வை மலரை மட்டுமே பார்த்து நின்றது. மாலை கிளம்பும் நேரம் கோபமாய் அழுதுகொண்டே தானே சென்றாள். ஒருவேளை போன வேகத்தில் அங்கு ஏதேனும் பிரச்சனையை செய்துவிட்டு அது பெரிதாகி இந்நேரம் வந்துநிற்கின்றார்களோ? அவரின் மனம் வேறு […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 12

புன்னகை – 12                நேத்ரா தன்னுடைய உடமைகள், பொருட்கள் தன் மாமியாரினது என அனைத்தையும் ஊருக்கு கிளம்ப எடுத்துவைக்க மெதுவாய் உள்ளே வந்தார் ஆண்டாள். “என்னம்மா அங்கயே நின்னுட்டு இருக்கீங்க? உள்ள வாங்க…” என சிரித்தமுகமாக சொல்லி மீண்டும் வேலையில் கவனத்தை திருப்ப, “ரொம்ப திட்டிட்டேன்ல நேத்ரா. மனசுல வச்சுக்காத…” ஆண்டாள் தயங்கி சொல்ல, “என்ன என் மாமியார்க்கிட்ட வாங்கி கட்டியாச்சோ?…” நேத்ரா கண்ணடித்து கேட்க அதில் முறைத்தவர், “அதெல்லாம் ஒண்ணுமில்லை. எல்லோர் முன்னாலையும் உன்னை […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 11 (1)

புன்னகை – 11                மலரின் கோபத்திற்கு ஆளாவோம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவளை சீண்டினான் அனய். இதன் விளைவு எதுவாகவும் இருக்கட்டும். மலர் கோபத்தின் எல்லைக்கு சென்றாலும் பார்த்துக்கொள்ளலாம். அவளை உயிர்கொள்ளச்செய்ய தன்னால் முடியும் என்று நம்பினான். அவன் எதிர்பார்ப்பை பொய்க்க விடாமல் மலர் கோபத்தில் கொந்தளிக்கத்தான் செய்தாள். ஆண்டாள் சொல்லியதற்கிணங்கி ஏதோ வேகத்தில் முடிவெடுக்காமல் சிந்தித்து நிதானமாகவே அவனை எதிர்கொள்ள அந்த அறைக்கு வந்துவிட்டாலும் அவனின் பேச்சில், விலகலில் ஒருவித நிம்மதி கூட எழுந்தது […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 11 (2)

ஹாலுக்கு சென்றமர்ந்ததும் அனய்யும் ரிஷியும் அடுத்த ஷூட்டிங் பற்றியும் சுவிசர்லாந்தில் நடந்ததை பற்றியும் பேசிக்கொண்டிருக்க ஆண்டாள் வேகமாய் சென்று பூஜையறையிலிருந்து முல்லைப்பூவை எடுத்து வந்து நேத்ராவிடம் தர மலரின் முகம் இருண்டது. இதை எப்படி தவிர்ப்பது? அதற்காக பூ வைத்துக்கொள்ள முடியுமா என்ன? என புரியாமல் தவித்து நிற்க நேத்ராவோ அவளின் தவிப்பை உணர்ந்தும் கண்டுகொள்ளாத பாவனையோடு, “நான் தான் வச்சிருக்கேனேம்மா. இது எதுக்கு?…” வேண்டுமென்றே கேட்க, “ஆளுதான் வளர்ந்திருக்கிற. அறிவே இல்லை. இதுல நீ காலேஜை […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 10

புன்னகை – 10 மலரின் வருகையில் அனய் சற்று குழம்பி பின் முகமலர்வுடன் அவளை பார்த்தான். அவன் அழைப்பான் என்றெல்லாம் மலர் கதவருகிலே நிற்கவில்லை. கதவை சாற்றிவிட்டு உள்ளே நுழைய இன்னும் ஆச்சர்யமாக ஆனது அனய்க்கு. “வாட் எ சப்ரைஸ் ரோஸ்ஃபட்?…” அவனின் மனநிலை உல்லாசத்திற்கு மாற முதன் முதலில் தனதறைக்கு வந்திருக்கும் மனதிற்கினியவளின் வருகை அவனின் அப்போதைய முடிவுகளை  மறக்கடித்தது. கத்தரிப்பூ வர்ண காட்டன் புடவையில் சிலை போல் நின்றவளின் அமரிக்கையான அழகு அவனின் மனதை […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 9 (2)

“அடேங்கப்பா ஸார் ஃபீல் ஆகிட்டீங்களோ? போடா டேய், ஓவர் சீன போடாதே. உன் பொண்ணு சாப்பிட்டாச்சு. அவளுக்குத்தான் முதல்ல ஊட்டினேன். இப்போ சாப்பிட வருவியா?…” என கேட்க அப்போது தான் அனய்யின் முகம் மலர்ந்தது. “பார்ரா தவுசண்ட் வாட்ஸ் பல்பை. ஹ்ம்…” என கேலி பேசியவள் அனய்யை நெருங்கி நின்று, “டேய் அண்ணா ஆனாலும் உன் பொண்ணு ரொம்ப சமத்து தெரியுமா? சின்ன குழந்தை தான். ஆனாலும் என்னை படுத்தாம எவ்வளவு அழகா சாப்பிடுது தெரியுமா?  இந்த […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 9 (1)

புன்னகை – 9 வைத்தியநாதனும் காமாட்சியும் தங்களின் வீட்டினுள் நுழையும் பொழுதே அவ்வீட்டின் நிசப்தம் அவர்களை உலுக்கியது. சில நிமிடங்கள் ஹாலிலேயே அமர்ந்திருக்க அவர்களின் பின்னால் அனய் அனுப்பிவைத்து இரு உதவியாளர்கள் வாசலிலேயே நின்றனர். காமாட்சிதான் அவர்களை பார்த்ததும் நிதர்சனம் உணர்ந்து சுதாரித்துக்கொண்டவர் வைத்தியநாதனையும் அழைத்து அவர்களை காண்பிக்க அவர் எழுந்து வாசலுக்கு சென்றார். “உள்ள வாங்க தம்பி ஏன் வெளிலையே நின்னுட்டீங்க?…” என அழைக்க, “இருக்கட்டும் ஸார். திங்க்ஸ் பேக் பண்ண எத்தனை பேர் வரனும்னு […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 8 (2)

“சம்பந்தி, நான் வந்து…” “நீங்க ஒண்ணும் சொல்லவேண்டாம். நீங்க நினைக்கிறது போல ஒன்னும் நடக்காது. எங்களுக்காக யோசிச்சு நீங்க உங்க பையோனோட சந்தோஷத்தை அழிச்சிடவேண்டாம்…” சுமங்கலி சொன்னதும் அதிர்ந்தேபோனார் ஆண்டாள். “என் பையனோட சந்தோஷத்தை நானே அழிப்பேனா? என்ன வார்த்தை சொல்லிட்டீங்க சம்பந்தி?…” என்றவர், “முதல்ல வேணும்னா நான் மலரை வேண்டமனு சொல்லியிருக்கலாம். அதுக்கு ஒரு காரணம் உங்களோட பாரம்பரியமான குடும்பம், இன்னொரு காரணம் மலரோட இனம். அவங்க நம்ம வகையறா கிடையாது. அதுதான் முக்கிய காரணம்…” […]


புன்னகையில் ஜீவன் கரையுதடி – 8 (1)

புன்னகை – 8 பத்திரிக்கையாளர்கள் கேள்வியில்  மலர் கொஞ்சம் திணறித்தான் போனாள். அவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்றுக்கு கூட பதில் சொல்ல முடியவில்லை மலரால். மலர் இயல்பிலேயே தைரியமானவளாக இருந்தாலும் உண்மையில் அக்கூட்டத்தினரையும் அந்த கேமராக்கள் சிந்திய வெளிச்சத்தையும் கண்டு கொஞ்சம் மிரண்டுதான் போனாள். இதுவரை அறிந்திராத உலகம் அது. இனி இதன் நடுவில் தான் வாழ்ந்தாக வேண்டும் என்னும் எண்ணமே கசந்து வழிந்தது அவளின் மனதில். மகளை கொடுத்தாலாவது ஆறுதலுக்காக அவளை அணைத்து தன்னை நிலைப்படுத்தலாம் […]