Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Uruginaeno Uraigiraeno

உருகினேனோ உறைகிறேனோ – 17 (2)

“மேரேஜ் ஆகிடுச்சா?…” என்ற முனுமுனுத்ததும், “என்ன? என்ன சொன்னீங்க?…” என்றான் அவரை. “இல்லை ஒண்ணுமில்லை. நீங்க பழனியப்பனா?…” என்றார் மீண்டும் தனக்கு தெளிவுபடுத்திக்கொள்ள. “விஜயநெடுமாறன்…” என்றான் அவன் பொறுமையை இழுத்து பிடித்தபடி. “ஆனா…” என இப்போதும் அப்பெண் யோசனையுடன் ஆர்க்க, “ஏன் மேம்? பொண்ணுங்க மேரேஜ்க்கு பின்னால அப்பா பேரை வச்சுக்க கூடாதுன்னு எதுவும் சட்டம் இருக்கா?…” என்றான் சுள்ளென்று. “இல்லை ஸார். அதுக்கில்ல…” என்று அவர் அவனின் கோபத்தில் மிரள, “ப்ச், கூப்பிடுங்க மேம்…” என்றான் […]


உருகினேனோ உறைகிறேனோ – 17 (1)

உருக்கம் – 17 விஜய் வீட்டில் இருந்து வந்ததில் இருந்து அவன் பேசியதை மட்டுமே நினைத்துக்கொண்டே இருந்தாள் பவித்ரா. அவனின் மனதில் இருந்தவற்றை அவன் நிதானமாக சொல்ல சொல்ல மேலும் மேலும் தன் முடிவில் ஸ்திரமானாள் பவித்ரா. வசந்தி அழைத்த போதும் கூட போனை எடுக்கவே இல்லை. அவர் அழைத்துக்கொண்டே இருக்க ஏற்கனவே நொந்துபோன மனநிலையில் இப்போது போன் எடுத்தால் இன்னும் பேசுவார் என்று எடுக்கவில்லை. சாப்பிடாமல் கூட கண்ணை மூடியவளுக்கு அங்கே அவன் பேசியவை மட்டும் […]


உருகினேனோ உறைகிறேனோ – 16

உருக்கம் – 16 அன்று கல்லூரி முடிந்து லைப்ரரி பக்கம் வந்தவன் வெகு நேரம் கழித்து தான் தேடிய புத்தகத்துடன் வெளியேற ஏனையோர் இன்றி கல்லூரி வெறிச்சோடி இருந்தது. எப்போதும் இத்தனை தாமதமாக்குபவன் அல்ல. என்றாவது இப்படி வந்தால் காலம் நேரம் பார்ப்பதில்லை. “என்ன ஸார், க்ளோஸிங் டைம் ஆகிடுச்சே. நானே ரொம்ப நேரம் பண்ணிட்டேன்னு நினைச்சேன்….” என தான் எடுத்த புக்கை பதிவு செய்தபடி விஜய் பேச, “அங்க ஒரு பொண்ணு ஐடியை எங்க வச்சேன்னு […]


உருகினேனோ உறைகிறேனோ – 15 (2)

“சரி நீ இப்படியே இருந்துட்டு போ. ஆனா எங்களையும் ஏன் தள்ளி வைக்கற?…” என ஜெகன் கேட்க, “உங்களை நான் தள்ளிவைக்கனும்னு நினைச்சதே இல்லையே. சொல்ல போனா உங்க வொய்ப், குழந்தை கூட நான் எந்த லைனும் போட்டுக்கலை. இது ஜெகாண்ணாவுக்காக. அவரோட குடும்பம் எனக்கு என்னைக்கும் தூரமாகாது. ஆனா…” என்றவன் ஜோதியையும் பவித்ராவையும் நின்ற இடத்தில் இருந்தே திரும்பி பார்த்தான். “அந்த பொண்ணுக்கு என்ன சொல்லி நீங்க இங்க படிக்க அனுப்பினீங்க?…” “நான் எதுவும் சொல்லலை […]


உருகினேனோ உறைகிறேனோ – 15 (1)

உருக்கம் – 15 விஜய்யின் முகத்தில் தெரிந்த சிரிப்பில் கொஞ்சம் நிம்மதியான ஜெகன் உடனே அவனின் கையை பிடித்துக்கொண்டு, “வாடா சேர்ந்தே சாப்பிடுவோம். முதல்ல சொல்லாததுக்கு இப்போ  சொல்லிட்டேன்ல. பாரேன், நம்மளை அந்த சாமியே சேர்த்து வைச்சுடுச்சு…” என்று பேச, “ஆமா மாப்பிள்ளை. வாங்க எல்லாரும் சுமூகமா பேசுவோம்…” என்று முன் வந்து நின்றான் ஜோதி. அவர்களின் அலப்பறையில் லேசாய் சிரித்திருந்தவன் மீண்டும் ஜோதி வந்து மாப்பிள்ளை என்று உரிமையுடன் தன்னை நெருங்கவும் சுருக்கென்றது விஜய்க்கு. உடனே […]


உருகினேனோ உறைகிறேனோ – 14 (2)

அன்று விஜய்யுடன் முழுதாய் பேசமுடியாமல் வந்து இடையிட்டவள், அதற்கும் மேல் ஏற்கனவே பவித்ரா வந்து சேர்ந்த அன்றே விஜய் அவளை அழைத்து பேசியபோது தானுமே அதை கவனித்தது என அஷ்வினிக்கு பவித்ராவை பார்க்கும் நேரமெல்லாம் பற்றிக்கொண்டு தான் வரும். விஜய் மறுத்துவிட்டாலும் அஷ்வினியால் பவித்ராவை அப்படியே விடமுடியவில்லை. அதென்ன இவளுக்கு இப்படி ஒரு பார்வை என்று அன்று தன்னை கடந்து செல்பவளை அழைத்தே கேட்டுவிட்டாள். “ஹேய் நில்லு, நீ என்ன இந்த பக்கம்?…” என்று அஷ்வினி கேட்க, […]


உருகினேனோ உறைகிறேனோ – 14 (1)

உருக்கம் – 14 பிஜி வந்து சேர்ந்ததுமே விஜய் வீட்டில் இருந்து கொண்டுவந்த தன் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தாள். இன்னும் அறை தோழியான விகாஷினி வந்திருக்கவில்லை. தான் மட்டும் என்பதால் வெகுநிதானமாக ஒவ்வொன்றையும் பார்த்து எடுத்து வைக்க நினைவுகள் அங்கிருந்த நிமிடங்களையே வலம் வந்தது. பயத்துடன் பார்த்தவனின் பண்புகள் அவனின் எண்ணங்களை இவளிடத்தில் ஆழ விதைத்திருந்தது. அதுதான் விதிக்கப்பட்டதோ? எத்தனை முயன்றும் அந்த எண்ணங்கள் அவனுக்கு உவப்பானதாக இருக்காதென ஒதுக்க நினைத்தும் முடியவில்லை. இவ்வளவுக்கு […]


உருகினேனோ உறைகிறேனோ – 13 (2)

அதற்கு மேல் சாப்பிடாமல் எழுந்து அறைக்குள் அழுதுகொண்டே ஓடியவள் இரவு வரை வெளியே வரவில்லை. கதவு ஒருக்களித்து சாற்றபட்டிருந்தாலும் விஜய்யும் உள்ளே சென்று பார்க்க முயலவில்லை. மதிய உணவு பாதியிலேயே நின்றுவிட அதை அப்படியே எடுத்துவைத்துவிட்டு வந்து புக்கை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டான். அவளின் அழுகை, கண்ணீர் என்று எதுவும் அவனுக்கு பாதிக்கவில்லை. வரும் போது வரட்டும். தாங்கவெல்லாம் முடியாது என்று இருந்தாலும் இரவு உணவை அவளை விட்டு உண்ணமுடியாமல் தானும் சாப்பிடாமல் இருந்தான். அறையில் இருந்த தண்ணீர் […]


உருகினேனோ உறைகிறேனோ – 13 (1)

உருக்கம் – 13 பவித்ராவிற்கு தெரிந்தவரை தங்கள் வீட்டிலிருந்து கிளம்பி சென்ற வழியில் விபத்து. அதனால் மரணம். அவள் அறிந்தது. அடுத்து விஜய் வந்து அடித்து விரட்டியதால் தான் மரணம் என்பதை போல பேசி சென்றதும் அவளுக்கு ஓரளவு தெளிவில்லாமல் தான் புரிந்திருந்தது. ஆனால் என்ன நடந்தது, அவனின் குடும்பம் எப்படி இப்படி சிதைந்தது, அதன் பின்னர் அவனின் தந்தைக்கு என்னவானது எதுவும் தெரிந்திருக்கவில்லை. பவித்ராவை பொறுத்தவரை மட்டுமல்ல அங்கிருந்த அவளின் குடும்பம் முதற்கொண்டு மாதவன் உயிருடோ […]


உருகினேனோ உறைகிறேனோ – 12 (3)

அவரின் முகத்தில் கண்ணீர் கறை வழிந்து காய்ந்துபோய் இருந்தது. அது மகனுக்கான தேடலும், கணவரை பிரிந்துசெல்லும் வேதனையும் என்று அப்போது அவனால் உணரமுடிந்தது. “மாறா, உங்கப்பா பேருன்னு ஞாபகத்துக்குன்னு சொல்லி சொல்லி கூப்பிடுவீங்க. அப்போலாம் வேணும்னே வேண்டாம்னு சொல்லுவேன். இப்போ கூப்பிடுங்கம்மா. கேட்கனும் போல இருக்கு. ம்மா, ம்மா…” என்று மெல்லிய குரலில் புலம்பிக்கொண்டே அவரின் கையை எடுத்து தன் கழுத்தை சுற்றி போட்டு அவரருகே தலை சாய்த்துக்கொண்டான். அதை காண ஜெகனுக்கும், ப்ரனேஷிற்கும் கொஞ்சமும் திராணி […]